உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 2 169

என் கோபமான பேச்சில் அவளது அழுகை நின்றிருந்தாலும், மெல்ல விசும்பிக் கொண்டிருந்தாள்!

மெல்ல அவளருகில் சென்றவன், கூப்பிட்டேன். மைதிலி!

நிமிர்ந்து என்னைப் பார்த்தவள், கண்கள் கலங்கச் சொன்னாள்.

மனசு கேக்க மாட்டேங்குதுப்பா! வலிக்குது!

அதற்கு மேல் என்னாலேயே தாங்க முடியவில்லை! இழுத்து அவளை அணைத்துக் கொண்டேன்! அவளும் என் மார்பில் சாய்ந்து தேம்பினாள்!

கொட்டிடு மைதிலி! உன் மனசுல இருக்கிறதையெல்லாம் இன்னிக்கே கொட்டிடு! நாளைல இருந்து, உன் கண்ல இருந்து கண்ணீரே வரக் கூடாது!

அவள் இன்னும் இறுக்கிக் கொண்டாள். எவ்வளவு நேரம் என்றெல்லாம் தெரியாது, கொஞ்சம் கொஞ்சமாக அவளது அழுகை குறைந்தது. ஆனாலும் விசும்பிக் கொண்டே இருந்தாள்!

அப்படியே அவளை பெட்ரூமிற்கு அழைத்துச் சென்று, என் மேல் சாய்த்துக் கொண்டு, படுக்கையில் சாய்ந்தேன்!

எனது ஒரு கரம் அவளைத் தழுவியிருந்தது! இன்னொன்றோ, அவள் தலையினை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது!

அவள் முகத்தை என் மார்பினுள் புதைத்துக் கொண்டு இன்னமும் விசும்பிக் கொண்டிருந்தாள்! எனது கைகள், அவளது கண்ணீரை துடைத்து விட்டு, இரு கைகளாலும் அவளைத் தழுவி, மீண்டும் தலையை வருடிக் கொண்டுத்தவாறே, மெல்லிய குரலில் அவளிடம் பேசினேன்!

போதும் மைதிலி! தேவைக்கு அதிகமாவே அழுதிட்ட! இதுக்கு மேலயும் உன்னை வருத்திக்காத. உனக்கு எப்பியும் சப்போர்ட்டா நான் இருப்பேன். இனியும் உன்னை அழுக நான் விட மாட்டேன்!

அவ்வளவுதான். அதன் பின் எங்களிடம் பேச்சு எதுவும் இல்லை. அவளுடைய விசும்பல்கள் நின்றிருந்தாலும், இன்னமும் என் கைகள் எனது வருடலை நிறுத்தவில்லை.

அறை முழுக்க மவுனமும், எங்கள் அன்பும் நிறைந்திருந்தது!

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் என்று தெரியாது… ஆனால் எங்களை அறியாமல் அணைத்தபடியே நன்கு தூங்கியிருந்தோம்!

கண் விழித்த பொழுது பொழுது விடிந்திருந்தது!

ஆம்! இனி அவர்களுக்கு விடிவு காலம்தான்!