உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 2 169

அடுத்த நாள் மாலை, 7 மணி, அதே இடம் – கோடம்பாக்கம் வீடு!

சொன்ன படியே நேற்று இரவே கிளம்பி ஊருக்கு போவதாய் சொல்லிவிட்டு நான், இந்த வீட்டுக்கு வந்துவிட்டேன். மைதிலி இன்று காலை கிளம்பி ஊருக்கு போவது போல், இங்கு வந்துவிட்டாள். மைதிலி கிளம்பிய ஒரு மணி நேரத்தில் கிளம்பிய ப்ரேம், ஏதோ நண்பர்களுடன் பாருக்கு போய் தண்ணி அடித்திருக்கிறான். மதியத்திற்க்கு மேல் அவன் வீட்டுக்கே சென்ற அவன், இப்பொழுது கிளம்பி ப்ரியாவை பார்க்க போய்கொண்டிருக்கிறான். இவ எல்லாமே, ப்ரேமை ஃபாலோ பண்ண வைத்திருந்த டிடக்டிவ் ஆளின் தகவல்கள். இன்னும் ஓரு மாதத்திற்கு அவனை ஃபாலோ பண்ணுவது மட்டுமே அவர் வேலை.

இதனிடையே, ப்ரேம் பாரில் இருக்கும் போதே, மைதிலியுடன், அவள் வீட்டிற்குச் சென்று, எல்லாம் ஃபிக்ஸ் செய்து விட்டு, அவளை மீண்டும் இங்கேயே விட்டுவிட்டு, ப்ளானிற்க்காக, இன்னும் சில பல வேலைகளை முடித்து விட்டு 6 மணிக்குதான் வீட்டினுள் நுழைந்தேன். நுழைந்தவனை வரவேற்றது மைதிலியின் குரல்.

காஃபி சாப்பிடுறீங்களாண்ணா என்று கிச்சனிலிருந்து அவள் குரல் கேட்டது.

சரி மைதிலி, ரெஃப்ரெஸ் பண்ணிட்டு வந்துடுறேன்.

முகம் கழுவி வந்தவனை, சுடச் சுட காஃபியுடன் வரவேற்றாள் மைதிலி!

ஒரு நிமிடம் எனக்கு ஸ்தம்பித்து விட்டது.
=
அவள், இன்னமும் அவளை முழுமையாக அழகு படுத்திக் கொள்ளவில்லைதான். வெறுமனே, முகம் மட்டும் கழுவி, பொட்டு வைத்திருந்தாள். அதுவே, அவளுக்கு மிகவும் மங்களகரமாய் இருந்தது. இன்னும் பியூட்டி பார்லர் எல்லாம் போய் அழகு படுத்திக் கொண்டு, சிரித்த படி இருந்தால், இன்னும் அழகாக இருப்பாள் என்று எனக்கு தெரிந்தது.

இன்னொரு சேரில், அவளும், ஒரு டம்ளர் காஃபியுடன் அமர்ந்தாள். அமர்ந்தவளை, என்னை மீறி அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அவளுக்கே ஒரு மாதிரி இருந்தது போலும். என்னண்ணா, அப்பிடி பாக்குறீங்க என்றாள் தலை குனிந்த படியே!

மைதிலி என்று கூப்பிட்டேன்.

என்னண்ணா! இன்னமும் தலை நிமிரவில்லை.

நீ இப்பிடியே எப்பவும் இருக்கனும், ஏன் இன்னும் கொஞ்சம் மாறக் கூடச் செய்யனும்! என்னை மீறி வந்தன வார்த்தைகள்!

புரியலைண்ணா!

நான் கூட இருந்தாலும் இல்லாட்டியும், உனக்கு எப்பவும் சப்போர்ட்டா இருப்பேன் ஓகேவா? நீ, இதுவரைக்கும் எப்பிடி இருந்தாலும் சரி, இனி நீ மாறனும். இனியும் இப்பிடியே, சோகமா, இருக்கக் கூடாது! ஓகேவா? வீ டிசர்வ் பெட்டர் மைதிலி!

என்னாதான், அவிங்க நடத்துகிட்டது, எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும், இப்ப எனக்கு ஆக்சுவலா ரிலீஃபா இருக்கு. நமக்கு வாழ்க்கைல சந்தோஷம் கிடைக்க அவிங்களே வழி செஞ்சிருக்காங்க. அதுனால, நீயும் சந்தோஷமா இரு. இன்னியும் உன்னை நீயே வெளிக்காட்டாம, ஏமாத்திக்காத. நீ மாறியே ஆகனும் மைதிலி. நான் மாத்தாம விட மாட்டேன்! என்னுடைய வார்த்தைகள், என் அனுமதி இல்லாமலேயே, மிகவும் உறுதியாய் வந்தது. எனக்கே, நான் பேசியது கண்டு ஆச்சரியந்தான்.

அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்!

யாரிவன். எங்கிருத்து வந்தான்? ஏன், என் உணர்வுகளோடு இப்படி விளையாடுகிறான்? ஏன், என் எல்லா உணர்வுகளையும் புரிந்து கொள்கிறான்? ஏன் நானே, மறந்து போயிருக்கும் என் குணங்களைக் கூட இவன் தோண்டி எடுக்கிறான்? இவன் அருகினில் மட்டும், என் மனம் லேசாவது ஏன்? யாரிடமும் தோன்றாத நம்பிக்கையை இவன் மட்டும் எப்படி கொடுக்கிறான்? இவனுக்கான எல்லாமுமாக நான் மாறிவிட வேண்டும் என ஏன் மனம் துடிக்கிறது? என் கணவனிடம் கூட வெளிப்படாத அன்பும், பெண்மையும், இவன் அருகில் மட்டும் ஏன் பொங்குகிறது?! உன்னை மாற்றியே தீருவேன் என்று ராஜா சொன்ன உடன், அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த மைதிலியின் எண்ணங்கள்தான் இவை.

ஏன், எப்படி என்று தெரியாமலே, ஒருவர் பால் ஒருவர் மீதான அன்பு, இருவருக்குள்ளும் ஊறியிருந்தது. ஆனால், இருவருமே அதை மிக நாசுக்காக மறைத்து வந்தனர். இது, இன்று நேற்று வந்த அன்பு அல்ல. கடந்த இரண்டு வருடங்களாக இருவருக்குள்ளும் ஊறி வரும் அன்பு அது!