உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 2 169

ம்ம் ஓகேண்ணா, ஆனா, இந்த 4 நாள் தனியா உங்களோட எப்பிடி இங்க??? அதான்….. என்று தயங்கினாள்!

என் மைதிலி, என் மேல நம்பிக்கை இல்லியா?

அவள் கண்கள் கோபத்தில் சிவந்தாலும், எதுவும் பேசாமல், நான் இங்கியே இருக்கேண்ணா என்றவள், எழுந்து உள்ளே செல்ல ஆரம்பித்தாள். நகர்ந்த அவள் கையைப் பிடித்தவன், நான் சொல்றதுக்கு காரணம் இருக்கு மைதிலி என்றேன்.

சரிண்ணா என்று சொல்லிவிட்டு அமைதியாக அவள் சென்றாலும், என் வார்த்தை அவளை காயப்படுத்தியிருந்தது எனக்கும் புரிந்தது.

இரண்டு நாட்கள் கழித்து அதே கோடம்பாக்கம் வீட்டில், இரவு 7 மணி!

மைதிலியின் கண்கள் கோவத்திலும், அவமானத்திலும், சிவந்திருந்தது. ஒரு மாதிரி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்! நான் அவளுக்கு எந்த சமாதானமும் செய்ய முயலவில்லை.

கொஞ்ச நேரத்திற்கு முன், ப்ரியாவிற்கு போன் செய்து, ஆஃபிசில் முக்கிய வேலை, அதனால் நான் வீட்டிற்கு வருகிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் இருப்பேன் என்று சொல்லியிருந்தேன். பதட்டத்துடன் சரி என்று சொன்ன ப்ரியா, 5 நிமிடம் கழித்து போன் செய்த ப்ரியா, தானும் ஆஃபிசில்தான் இருப்பதாகவும், அவளுக்கு ப்ராஜக்ட் டெலிவரி, அதனால், இன்னும் இரண்டு நாட்களுக்கு அவளுக்கு டைட் என்றும், வீட்டுக்கு கூட வர முடியுமா எனத் தெரியவில்லை என்றாள். நான் ஓகே என்று சொல்லிவிட்டேன். என்னுடைய டிடக்டிவ் ஆள், அடுத்த 10 நிமிடத்தில் அவர்கள் கிளம்பி, ப்ரேம் வீட்டிற்குச் சென்றதாக தகவல் கொடுத்தார். இந்த இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராதவர்கள், நான் வருகிறேன் என்று சொன்னவுடன், அடுத்த இடத்திற்கு பறந்திருந்தனர்.

நான் என் வீட்டிற்குச் சென்று, அங்கேயே அமர்ந்து, பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்து விட்டு, பின் வீடியோவை பென் டிரைவில் எடுத்து வந்து மைதிலியிடம் லேப்டாப்புடன் கொடுத்து, அறைக்கு அனுப்பி விட்டு, ஹாலிலேயே தங்கியிருந்தேன். ஒரு மணி நேரம் கழித்து, சோஃபாவிற்கு வந்து அமர்ந்த மைதிலியின் நிலைதான் இது!

பார்த்த உடன் எனக்கே, அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் இருக்கையில், அவள் மட்டும் என்ன பண்ணுவாள்?

இரண்டு நாட்கள் முன்பு என் வீட்டில் நடந்தவை வீடியோவில்!

மாலை என் வீட்டிற்குள் நுழைந்த ப்ரேமை, ப்ரியா, காலையிலியே வருவேன்னு பாத்தேன் என்றாள்.

கொஞ்சம் வேலை இருந்தது! அதான்… அப்புறம்? உன் புருஷன் ஊருக்கு ஏன் வரலைன்னு பிரச்சினை பண்ணலியா?

பெருசா பண்ணலை. நான் ஊருக்கு போனாத்தான் பிரச்சினை வரும்னு நினைச்சி தனியாவே கிளம்பிட்டாரு!

ஏன், உன் புருஷன் ஃபாமிலியை புடிக்காதா உனக்கு?

ஆமா! ஏன்னு தெரில்லை, கல்யாணமான புதுசுல இருந்தே ஆகாது. என் புருஷனையே எனக்கு அவ்ளோ புடிக்காது!

உனக்கு ஏன் அவ்ளோ கடுப்பு?

எல்லாம் எங்கப்பா பண்ண வேலை. நான் உன் ஃபோட்டோவைக் கொடுத்து உன்னை மாப்பிள்ளையாப் பாக்கச் சொன்னேன். அவருதான், மாப்பிளை வீட்டுக்காரங்கதான், பொண்ணுதான் கேட்டு வரணும், நாம மாப்பிளையை கேட்டு போக முடியாதுன்னு சொல்லிட்டார். நீயும் அப்ப சீன் போட்ட. எனக்கு அதுவே செம கடுப்பு. சரி, நீதான் இல்லை, பாக்குற மாப்பிளையாச்சும், நல்லா செவப்பா பாப்பாருன்னு பாத்தா, அவரை மாதிரியே மாநிறத்துல பாத்திருக்காரு. அந்த கோவந்தான்.

உங்கப்பா பண்ண தப்புக்கு, உன் புருஷந்தான் கிடைச்சானா. நல்லவேளை, உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கலை!

முறைத்த ப்ரியாவை, நல்லதுக்குதாண்டி சொல்றேன், நீ என்ன கோடிஸ்வரியா? ஆனா, இப்பப் பாரு, உனக்கும் நல்ல சுக போகமான வாழ்க்கை கிடைச்சிருக்கு.

நீ மட்டும் என்ன கோடீஸ்வரானா?

நானும் அதைத்தன் சொல்றேன். நானும் பணக்காரன் கிடையாது! ஆனா, எனக்கும் அந்தக் கருவாச்சி மூலமா காசு வரும்! அதே சமயம், நானும் நீயும் சந்தோஷமாவும் இருக்கலாம். எப்பிடி?

இப்போது சிரித்தாள். அப்புறம், என் புருஷனோட தங்கச்சி எப்ப ஊருக்குப் போனா?

உம்புருஷன் தங்கச்சியா?

அதான், உன் பொண்டாட்டி!

அவ காலையிலியே கெளம்பிட்டா! சரி, கேக்கனும்னு இருந்தேன். ஏன், என் பொண்டாட்டியை, அவனை அண்ணான்னு கூப்பிட வெச்ச?

அதுவா! என் புருஷனுக்கு, உன் பொண்டாட்டி மேல ஏதோ ஒரு பாசம். ஓவர் அக்கறை! முத தடவை உன் ஊட்டுல அவளைத் கருப்புன்னு திட்டுனதுக்கே, ஓவரா டோஸ் விட்டாரு. அப்புறம், மூணாம் தடவை, அவளை மாட்டி விட்டதுக்கு, அவருக்கு செம கோவம். வீட்டுக்கு வந்துட்டு, இனி அந்த வீட்டுக்கு கூப்பிடாத, நீயும் போவாதன்னுட்டாரு. நம்ம வீட்டுக்கு வந்தப்ப கூட, அவளுக்கு வேலை கிடைச்சதுக்கு, இவரு ஓவரா ஃபீல் பண்ணாரு. உன் பொண்டாட்டியும், அவர்கிட்ட ஏதோ கண்ணாலியே பேசுறா! அதான், அண்ணான்னு கூப்பிட வெச்சேன்!