கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 81

என் பெயர் காவ்யா. இது நடக்கும் போது என் வயது 20. நான் கொஞ்சம் சுவலட்சுமி போல ஹோம்லியாக இருப்பேன். என் வாழ்க்கையின் திருப்புமுனை நடந்த ஆண்டு அது. என் வாழ்க்கை மட்டுமல்ல எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் அது திருப்புமுனையே. ஆம். 2007 ம் ஆண்டு நவம்பர் 21 ம் நாள் என் திருமண நாள். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என் திருமணத்திற்கு. மாப்பிள்ளை வீட்டார் ஒரு மாதம் முன்பு வந்திருந்தனர். நான் பி.எஸ்.சி இறுதியாண்டு படிக்கிறேன். என்னை பார்க்க வந்தவர் பேங்க் ல் பனி புரிகிறார். என்னை பார்த்ததும் அவருக்கு பிடித்து போனது. அவர் பெயர் ராஜா, லைட் ஆக விக்ரம் போல இருப்பார். கொஞ்சம் பிட் ஆக இருப்பார். அவருக்கு 28 வயது. பெண் பார்க்க வந்த போது என்ன படிக்கறீங்க என்று கேட்டதை தவிர அவர் எதுவும் கேட்டதில்லை. அப்போதெல்லாம் மாப்பிள்ளையும் பெண்ணும் திருமணதிற்கு முன்பு பேசிக்கொள்ளும் பழக்கம் பொதுவாக இருந்ததில்லை. ஆனால் என்னவருக்கு என்னை எவ்வளவு பிடித்திருக்கிறது என்றாவது அறிந்து கொள்ளும் ஆசை இருந்தது. ஆனால், அதெல்லாம் நிறைவேறாமலேயே ஒரு மாதம் நிறைவேறியிருந்தது. ஒரு மாதமாக அவ்வப்போது என் அப்பாவின் செல்போனில் அழைப்பதும் அவரிடம் மட்டும் நலம் விசாரிப்பதும் நடக்கும். பேச்சுக்கு கூட ‘நீ பேசுறியாம்மா’ என்று கேட்கமாட்டார். அவர் பேசும்போது அதை அறிந்து கொண்டு நானும் “அப்பா coffee வேணுமா?” என்று சத்தமாக கேட்பேன். அப்பாவுக்கு தான் புரியவில்லை, அவருக்கு கூடவா புரியவில்லை என்று தோன்றியது. இதெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும் போதே திருமண நாள் வந்தது. எங்கள் ஊரில் திருமணமான நாள் பெண் வீட்டில் தங்குவார்கள். ஒரு வாரம் மணமகனும் பெண்ணும் சேரகூடாது என்று தனித்தனியாக தங்கவைப்பார்கள். அவருக்கு மாடியில் இருக்கும் என் அறையை ஒதுக்கினார்கள். நான் அம்மாவுடன் படுப்பேன் என்று உறுதியானது. அன்று முழுவதும் ஓரக்கண்ணால் பார்ப்பதே சந்தோஷமாக இருந்தது. ஆனால் பேசக்கூட விடாததே அநியாயம். அவருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். இரவு நெருங்கியது. வீட்டின் விருந்தினர்கள் எல்லாரும் உறங்கச்சென்றனர். இந்த இரவு எனக்கு கலவையான உணர்வுகளுடன் இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு அம்மாவுடன் படுப்பதாகட்டும், என் அறையிலல்லாமல் மற்றொரு அறையில் படுப்பதாகட்டும். அறைக்குள் நுழைந்ததுமே உடல் களைப்பில் கட்டிய சேலையோடு பொத்தென்று கட்டிலில் விழுந்தேன். ஐந்து நிமிடம் சென்றிருக்கும் அம்மா வந்தாள். “என்னடி இப்படி படுத்திருக்கே, போய் குளிச்சிட்டு nighty போட்டு படு” என்றாள். எரிச்சலாக இருந்தது. “ஏன்மா, தூங்க கூட விடமாட்டியா?” என்றவுடன் பக்கத்தில் வந்து, “நேத்துவரைக்கும் நீ இருந்த மாதிரி இனிமே இருக்க முடியாது காவ்யா, மாப்ள வீட்ல உன்ன குதம் சொல்ல மாட்டாங்க, என்ன தான் சொல்லுவாங்க. ஒழுங்கா போய் குளிச்சிட்டு படு ” என்றாள். அவள் சொன்னதும் எனக்கு என் வாழ்க்கை ஒரு நாளிலேயே மாறிப்போய்விட்டது என்று தோன்றியது. தலையிலிருந்த வாடிப்போன பூக்களை மேஜை மேல் வைத்துவிட்டு, குளியலறை சென்றேன். எனக்காக Dove சோப் வைத்திருந்தாள் அம்மா. கதவை தட்டினாள்.. “ஏய் காவ்யா, துண்டு எடுத்திட்டு போக மாட்டியா?. இப்டியே இருந்தா கஷ்டம் டி, இனிமே பொறுப்பா இருந்துக்கோ ” என்றாள்.
வாஷ்பேசினில் முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்த்தேன். ஈர முகத்தில் ஒட்டிய முடிகளை துண்டால் துடைத்தேன். இப்போது குளித்துத்தான் ஆக வேண்டுமா என்று மீண்டும் தோன்றியது.
மீண்டும் கதவு தட்டும் சத்தம், “காவ்யா குளிக்கிறியா இல்லியா, குளிச்சா அலுப்பு போயி நல்லா தூக்கம் வரும் டி ”.
“சரிம்மா.. சரிம்மா.. நீ படு நான் குளிச்சிட்டு வரேன்” சேலையை கழட்டி பாத்ரூம் ஹேங்கர் ல் போட்டேன். காலையிலிருந்தே போட்டிருந்த பச்சை நிற பட்டுப்புடவை. அவன் ஒரு முறை நேராக பார்த்து சிரித்ததோடு சரி. அந்த பார்வையில் காதல் தெரிந்ததா என்று யோசித்தேன். ஒன்றும் பிடிபடவில்லை. ஆசை இருந்ததா? அதுவும் தெரியவில்லை. பட்டு வேட்டி சட்டையில் இருந்தவனை நான் பலமுறை ஓரக்கண்ணால் ரசித்தும் அவன் பார்க்கவில்லை. ஒரு முறை நான் ஓரக்கண்ணில் பார்த்ததும், நேராக திரும்பி என் கண்களை பார்த்து என்ன என்று பண்ணாலே கேட்டான். நான் பே பே என்று முழிக்க கண்ணாலேயே சிரித்தான். அந்த சிரிப்பு என்னை என்னமோ செய்தது. இதுவரை இல்லாத ஒரு ஈர்ப்பு அவனோடு உருவானது.