கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 81

அன்று நாள் முழுவதும் உற்சாகமாக இருந்தது. எல்லாம் hormone செய்யும் வேலை. மதியம் சாப்பாட்டுக்கு கீழே இறங்கியவன் ஓரக்கண்ணில் பார்த்தான். எனக்கு சிரிப்பு வந்தது. அவனும் ஓரக்கண்ணில் பார்த்து சிரித்தான். அவன் என்னை தீண்ட வாய்ப்பில்லாதபடி நான் பவ்யமாக அம்மா அருகில் அமர்ந்துகொண்டேன். ஒரு கேள்வியுடன் என்னை பார்த்தான். என்ன என்று எனக்கு புரியவில்லை. சாப்பிட்டு முடித்து, லேசாக தலையாட்டி சிரித்தான். அவன் படியேறி அறைக்கு செல்லும்வரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அறையின் வாசலை அடைந்தவன் வெடுக்கென்று திரும்பி உள்ளங்கையில் விரலால் அமிழ்த்துவதை போல சைகை செய்தான். செல்போன்-ஐ தான் சொல்கிறான் என்று புரிந்தது.
அவசரமாக சாப்பிட்டு முடித்து அறைக்குள் சென்று செல்போன்- ஐ எடுத்து பார்த்தேன்.
“கோவமா??” குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.
“ச்சே ச்சே..”
“I love you காவ்யா”
என் மனதுக்குள் அமைதியான ஆனந்தம்.. “I love you too அழகா..” பதிலளித்தேன்..
“கண்ணழகி” அவன் புகழ்ச்சியில் லயித்தேன்
“ஹ்ம்ம்” வார்த்தைகள் ஜனனிக்காமல் மரித்துப்போயின..
“evening black டீ கெடைக்குமா?”
அவன் எதை சொல்கிறான் என்று புரிந்தது. “ஹ்ம்ம்.. ஓகே பா. அப்பா கிட்ட எடுத்துட்டு வர சொல்றேன்” பதிலளித்துவிட்டு வாய்மூடி சிரித்தேன்..
“வேண்டாம்.. நீயே எடுத்திட்டு வா..”
‘ஹ்ம்ம்…. தைரியத்த பாரேன்’ என்று மனம் கேட்டது.
‘இந்த தைரியத்த நீ தானே குடுத்த காவ்யா’ என் பெண் மனம் அவனுக்காக பரிந்து பேசியது.
‘நீ தான் அவனுக்கு உரிமையை கொடுத்தாய். உண்மை தானே.. நீ அவனுக்கு உரியவள் தானே..’
மனதின் போராட்டங்கள்.. என்னுள்ளும் அவனுடன் பழக கொள்ளை ஆசை தான்.. ஆனால் எல்லை மீறினால்… நாளை நடக்க வேண்டியவை இன்றே நடந்தால்.. சாமிக்குத்தம் ஆகிவிடும்….
அவன் செய்யும் செல்லச்சீண்டல்களும் தீண்டல்களும் நான் ரசித்து அனுமதித்ததே…. ஆனால் ஒருநாள் மட்டும் பொறுத்துக்கொள்வாயா? என்று மனம் அவனிடம் வேண்டியது.
மெல்ல பதிலை அனுப்பினேன், “evening வெளிய எங்கயாவது போலாமா?”
“தோப்புக்கு.. நல்லா இருக்கும்.. மாந்தோப்பு இருக்கு..”
“போலாமே”
“But, நீங்க தான் அப்பா கிட்ட கேக்கணும்.”
“கண்டிப்பா கேக்கறேன்..” ஒரு புன்னகை smileyயுடன் முடித்தான்.
“அப்போ black டீ?”
எனக்கு சிரிப்பு வந்தது.. ‘குறும்புக்காரன்..’ மனம் அவனை கொஞ்சியது..
“இன்னைக்கு ஒரு நாள் கீழ வந்து குடிச்சுக்கோங்க”
நமக்காக நாம் விரும்பும் ஒரு ஆண்மகன் ஏங்குகிறான்.. என்று நினைக்கும் போதே சந்தோசம் தொற்றிக்கொண்டது.. அப்படியே உறங்கிப்போனேன்
மாலை 4 மணி..
அவர் இன்னும் கீழே வரவில்லை..
நான் இளம் பச்சை நிறத்தில் ஒரு cotton சுடிதார் எடுத்துக்கொண்டேன்.
அழகான cotton உள்ளாடைகள் எடுத்துக்கொண்டேன்.
துண்டை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றேன். மதிய உறக்கத்தால் உடல் மிதமான சூட்டுடன் இருக்க.. மேனியில் விழுந்த நீரினால் உடல் ஜில்லிட்டது. இந்த மிதமான குளிர் எனக்கு பிடித்திருந்தது.
அம்மா கதவை தட்டினாள்.. “காவ்யா சீக்கிரம் வாடி..”
“எதுக்கு மா”
“மாப்ள வெளிய எங்கயாவது சுத்திப்பாக்கணும் னு ஆசைபடறார்.. நம்ம தோப்புக்கு கூட்டிட்டு போ..”
“ஏன் மா நீ வேற” உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் பொய்க்கோபம் காட்டினேன்.
“pls டி”
“ஹ்ம்ம் சரி சரி..”
“சீக்கிரம் வா”
“சரி மா”
குளித்து முடித்து துண்டால் உடலை ஒற்றி எடுத்தேன். சுடியை அணிந்துகொண்டு.. கண்ணாடி முன்னால் நின்றேன்… பவுடர் போட்டு போட்டு வைத்தேன்… ஏதோ ஒன்று …. நீண்ட நேர யோசனைக்கு பிறகு மனதில் அலாரம் அடித்தது… கும்குமம்.. அதை தலை வடுகில் லேசாக வைத்தேன்… சுடிதாருக்குள் சிக்கியிருந்த தாலியை வெளியே எடுத்துபோட்டு கண்ணில் வைத்துக்கொண்டேன். சாமிகும்பிட்டு திரும்ப கண்ணாடியை பார்த்து ok பண்ணிக்கொண்டேன்.
அறையை விட்டு வெளியே வர, அவர் ஜீன்ஸ் T-shirt ல் ஜம் என்று இருந்தார். என்னை பார்த்து சிரித்தார். நானும் திருப்பி புன்னகைக்க.. அப்பா பைக் சாவியை அவரிடம் தந்தார். “இங்கேயிருந்து 10 நிமிஷம் தான் மாப்பிள்ள.. காவ்யா க்கு வழிதெரியும்.. இருட்டறதுக்கு முன்னாடி வந்திடுங்க..”
“சரி மாமா..” என்றார்.
நான் பைக் ல் ஒரு பக்கமாக கால் போட்டு அமர.. மெல்ல பைக் ஐ கிளப்பினார். அவர் இடது தோளில் பிடித்துக்கொண்டேன்.
திருமணம் முடிந்த இந்த நாட்களில் பல விஷயங்கள் எங்களுக்குள் மாறியிருந்தது. அவரை கண்டதும் படபடக்கும் இதயம் இப்போது இல்லை. மாறாக படபடத்துக்கொண்டிருக்கும் இதயம் அவரைக்கண்டதும் சீராகிறது. அவரைக்கண்டால் பயம் இல்லை. மாறாக தைரியம் வருகிறது. அவர் விரல் பட்டால் துடிக்கும் உடல் இல்லை. அவர் தீண்டலுக்காக எங்கும் உடலாக மாறியிருந்தது. அவர் என்னவர் என்கிற உரிமை உறுதியாக இருந்தது. அவர் கண்ணைப்பார்த்ததும் clean bowled ஆகும் காவ்யா இல்லை. அவர் கண்ணை ஆசையுடன் ரசிக்கும் காவ்யா நான்.
தோப்பு வந்தது..
சுப்பிரமணி மாமா தான் தோப்பிலேயே தங்கி தோப்பை பார்த்துக்கொள்கிறார்….
எங்களுக்காக காத்திருந்தார்.. அப்பா சொல்லியிருக்கலாம்..
“வாம்மா….. இளநீர் வெட்டி வெச்சிருக்கேன்..” இளநீரை நீட்டினார். நானும் அவரும் ஆளுக்கொன்று வாங்கிக்கொண்டோம். மாந்தோப்பில் அங்கங்கே தென்னை நட்டு வைத்திருந்தோம்.
தொப்பினூடாக மெல்ல நடந்தோம். season இல்லாததால், மாமரங்கள் பூவிட்டிருந்தன.
“நீங்க சுத்திப்பாருங்க மா, என்ன வேணும்னாலும் ஒரு குரல் கொடுங்க ” என்றார்.
“சரிங்க மாமா” என்று விட்டு இருவரும் மெல்ல நடந்தோம்.
ஒரு பத்துமரம் தாண்டியிருப்போம். நாங்கள் பேசுவது வேறுயாருக்கும் கேட்காது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். சுப்ரமணி மாமா வும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை.
அவரை பார்த்தேன். பக்கத்தில் பொண்டாட்டி இருப்பது கூட தெரியாமல் சிரத்தையாக தரையில் பார்த்து நடந்தார் மனுஷன்.
“என்னையும் கொஞ்சம் பாத்து கூட்டிட்டு போங்க” என்று அவர் கைகளை பிடித்துக்கொண்டேன்.
“வா காவ்யா” என்று என் கைகளை பிடித்துக்கொண்டு கவனமாக தரையில் பார்த்து நடந்தார்.
‘என்னையும் கொஞ்சம் பார்த்து’ என்று நான் அடிக்கொடிட்டதை மனுஷன் புரிந்துகொள்ளவில்லை என்பது புரிந்தது.
‘இந்த ஆம்பளைங்களே இப்படி தானோ. பார்த்து தான் புரிந்துகொள்ளவில்லை. நான் சொன்னதையாவது கொஞ்சம் கவனமாக கவனித்திருக்கலாமல்லவா?’
என்ன செய்வது என்று யோசித்தேன். “இங்க உக்காரலாம?” கிளையை கீழேயே பரப்பிய ஒரு மாமரத்தை பார்த்துக்கேட்டேன்.
“ஹ்ம்ம்.. வா” நானும் அவரும் அமர கிளையை kerchief ஆல் தூசி தட்டினார்.
‘இதுக்கொண்ணும் கொறைச்சல் இல்லை’ ‘ஒரு பெண்ணை புரிந்துகொள்ளாத என்ன மனுஷன் யா’ என்று தோன்றியது. மறுபுறம், ‘எந்த பெண்ணையும் அறிந்திறாதவரல்லவா என்னவர் ’ என்று பெருமிதம் கொண்டேன்.
‘அமர்ந்தாயிற்று.. இனி கொஞ்சம் கைகளை கோர்த்துக்கொள்ளலாமே’ என்று என் கைகளை அவன் கைகளின் அருகில் வைத்தேன்.. இதுவும் அவனுக்கு புரியவில்லை.
சரி பேசித்தான் பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தேன்.
“எதுக்கு கோவமா? ன்னு கேட்டீங்க மெசேஜ் ல”
“தோணிச்சு”
இன்று அவருடன் மனம்விட்டு பேசுவது என்று முடிவெடுத்தேன்.
“கொஞ்சம் கோவம் தான்”, “but கோவமா கவலையா ன்னு எனக்கே தெரியல..”
“புரியல மா” குழப்பத்துடன் என்னைப்பார்த்தார்.
கண்டிப்பாக புரிந்திருக்காது என்பது எனக்கு தெரியும்..
“கோவம் என் மேல.. கவலை உங்க மேல..”