கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 81

வளையல்கள் சிணுங்க மெல்ல அறை நோக்கி coffee கப்போடு நடந்தேன். கதவை தட்ட, தாள் போடாத கதவு மெல்ல திறந்தது.
உள்ளே எட்டிப்பார்த்தேன்.
“வா காவ்யா” என்றான் மிடுக்கோடு. வேட்டி சட்டை கட்டி கட்டிலில் அமர்ந்திருந்தான்.
எனக்கு பயங்கர ஷாக். என்னடா, எழும்பி குளித்து ready ஆக உக்காந்திருக்கிறானே என்று. முகச்சவரம் செய்து, மிடுக்காக உட்கார்ந்திருந்தவன் கையில், coffee என்று கொடுத்தேன். என் கண்களை பார்த்து சிரித்தான். அந்த சிரிப்புக்கு நான் clean bowled ஆகிட்டேன். எங்கிருந்தோ வந்த வெட்கம் என்னை தொத்திக்கொண்டது. வெட்கத்தில் கன்னம் சிவந்து, மென்மையான ஒரு புன்னகை என் முகத்தில் ஒட்டிக்கொண்டது.
coffee வாங்கிவிட்டு “உக்காருங்க” என்று படுக்கையில் கொஞ்சம் நகர்ந்து அமர்ந்தார்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை: உக்காரலாமா, இல்லை வேண்டாமா என்று. “பரவாயில்லை” என்றேன்.
“இல்ல பரவல்ல, உக்காருங்க” என்றார்.
‘பரவாயில்லை, என்னையும் மதிப்பவன் தான்’ என்று பெருமையாக இருந்தது. ஓரமாக உட்கார்ந்தேன். உங்களுக்கு ஒன்னு வாங்கி வந்திருக்கேன் என்று தன்னுடைய suitcase ஐ திறந்தார்.
ஒரு பெரிய kitkat சாக்லேட்.
“உனக்கு பிடிக்குமே என்று வாங்கினேன்”.
எனக்கோ surprise. இவருக்கு எப்படி தெரியும் என்று.
கையில் வாங்கியபின் மெல்ல கேட்டேன், “உங்களுக்கு எப்படி தெரியும்?”
விடை தெரிய அவர் கண்களை கூர்ந்து நோக்கினேன்.
“பொண்ணு பாக்க வந்தப்போ உங்க வீட்ல kitkat கவர் தான் நிறைய இருந்திச்சு”
கேட்டதும், பக் என்று சிரித்து விட்டேன்.
மெல்லிய புன்னகையோடு, “உன்ன பத்தி தெரிஞ்சி வச்சிக்ரதுல தப்பில்லல்ல” என்றார்.
எனக்கு மனம் நிறைய சந்தோஷமும் காதலும் பெருகி வழிந்தது. அப்போதே அவன் கன்னத்தில் ஒரு மெல்லிய முத்தம் கொடுக்க தோன்றியது.
“உங்களுக்கு என்ன சாக்லேட் பிடிக்கும்?” மென்மையாக குரல் நடுங்க கேட்டேன். காதல் ஜுரம் ஆக இருக்கலாம். குளிர துவங்கியது.
“எனக்கும் kitkat தான்”, கண்களை பார்த்து புன்னகைத்தான்.
“same pinch” என்றேன் சிரித்துக்கொண்டே.
“எங்கே கிள்ளவே இல்ல” என்றார் சிரித்துக்கொண்டே.
இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
மனதுக்குள், “எனக்காக பிறந்தவனே, பேரழகா ” என்று பாட்டு ஓடியது.
எனக்கு திடீர் என்று தோன்ற, அவர் தந்த kitkat ஐ பிரித்து, பாதி முறித்து அவரிடமே தந்தேன். இருவரும், சிரித்துக்கொண்டே சாப்பிட்டோம்.
“காவ்யா” அம்மா அழைத்தாள்.
“வந்துட்டேன் மா” பதிலுரைத்தேன்.
“கோயில் போக நீங்க ready ஆ”.. மனம் ஏனோ குதூகலித்தது; பதில் தெரிந்தும் கேள்வி கேட்டேன்.
“Ready..” மீண்டும் புன்னகைத்து, என் முகத்தில் வெட்கப்புன்னகை படரவிட்டான்.

ஒன்பது மணிக்கு tata sumo வில் எங்கள் பயணம் தொடர்ந்தது.
முன்னிருக்கையில் அப்பா, நடுவில் நாங்கள், பின்னிருக்கைகளில் அம்மாவும், பாட்டியும்.
வழிநேடுகவே அம்மாவும் பாட்டியும் அவரிடம் கேள்வி கேட்டும் காமெடி என்ற பெயரில் ஏதோ சொல்லி சிரித்தும் என்னை பேசவிடாமல் பண்ணி விட்டனர்.
ஒரு மணி நேரத்தில் கோவில் வந்தடைந்தது. கோவில் ஒரு மலை மேல் இருந்தது. அப்பா கோவில் குருக்களை பார்க்க வேண்டும் என்று கடகடவென்று ஏறி விட்டார். நானும், என்னவரும், பாட்டியும், அம்மாவும் மெல்ல ஏற ஆரம்பித்தோம். அவருடன் பேச ஆசையாக இருந்ததால் அவர்களை முன்னே ஏற விட்டு, நான் மெல்ல பின்வாங்கினேன். அந்த மரமண்டைக்கு புரிந்ததாக தெரியவில்லை. என்னவென்றே தெரியாமல் முழித்தான்.
அம்மாவும், பாட்டியும், “என்ன காவ்யா” என்று கேட்க, “கஷ்டமா இருக்குமா” என்று இவரை பார்த்துக்கொண்டே சொன்னேன். இப்போது புரிந்திருக்குமா என்று தெரியவில்லை.
“நான் கூட்டிட்டு வரட்டுமா அத்தை” என்று அவர் என் அம்மாவிடம் கேட்க. “சரி தம்பி, நீங்க பொறுமையா வாங்க” என்று சொல்லிவிட்டு மெல்ல மேல்நோக்கி நடந்தனர்.
நான் ஏற கஷ்டபடுவதை போல பாவ்லா காட்டி, பாசமாக அவனை பார்க்க. தன் கைகளை அவன் நீட்டினான். சின்ன தயக்கத்தோடு அவன் கைகளை பிடிக்க, என்னை கை பிடித்து அழைத்து சென்றான்.
இனி காதல் ஆரம்பம்.
நான் மெல்ல ஆரம்பித்தேன் “நீங்க இந்த மாதிரி மலை எல்லாம் ஏறி இருக்கீங்களா?”
“ஹ்ம்ம்.. நாங்க friends சேந்து அடிக்கடி ட்ரெக்கிங் போவோம், பட் அது காட்டுக்குள்ள போவோம்.”
“ஓஹோ.. அப்போ அது தான் உங்க fitness ரகசியமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க..
“ஓஹ்.. அப்போ பிட் ஆ இருக்கேனா?” மெல்லிய புன்னகையோடு என் கண்களை பார்த்துக்கொண்டே கேட்க.. நான் திரும்பவும் clean bowled..
படிகளை பார்த்துக்கொண்டு வெட்கத்தில் சிரித்துக்கொண்டே நடந்த என்னிடம், அடுத்த கேள்வி கேட்டார்..
“என்னை பிடிச்சிருக்கா?”
ஒரு கணம் நின்று ஓரக்கண்ணால் பார்த்தேன்.. என் முகத்தையே கூர்மையாக பார்த்தான்..
“ஹ்ம்ம்..” தலைகுனிந்தே தலையாட்டினேன்.
ஒரு நிமிட மௌனம்.. படிகளை பார்த்தே நடந்தோம் இருவரும்.. நான் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்று அவனுக்கு நான் சொல்லாமலேயே புரிய வேண்டும் என்று மனம் ஏங்கியது.
என் கைகளை இறுக்க பிடித்தான்.. அவன் கண்களை பார்த்தேன்.. “உன்னை முதல் தடவ பாக்கும்போதே எனக்கு உன்ன பிடிச்சு போச்சு காவ்யா”