கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 81

“காவ்யா….” கைகளை பிடித்துக்கொண்டார்..
அவர் ஆதரவாக கைகளை பற்றிக்கொண்டதும், என் கண்களில் நீர் முட்டியது.
“நான் ஏதாவது தப்பா பண்ணிட்டனா காவ்யா?”
“அடிக்கடி black டீ கேக்குறீங்களே..” கண்களில் வந்த கண்ணீரை அடக்கிகொண்டே வெட்கத்தில் சிரித்தேன். இதைவிட இலைமறைகாயாக எனக்கு சொல்லதெரியவில்லை.
பக்கென்று சிரித்து கைகளை இறுக்கினார்.
“இல்லப்பா நான் serious ஆ சொல்றேன்..” “உங்களை எனக்கு அவ்ளோ பிடிக்கும்.. அதனால நீங்க கேட்டா முடியாது ன்னு என்னால சொல்லமுடியாது. but உங்களை இந்த நிலமைக்கு ஆளாக்கினது நானோ ன்னு ஒரு குற்ற உணர்வு..” வெடுக்கென்று அவன் அணைத்த அணைப்பு என்னை தடுமாற வைத்தது. குளமாகியிருந்த கண்கள் அதன் நீரை என்னவன் T-shirt ல் நனைக்க, நானும் அவனை கட்டிக்கொண்டேன்.
“நீ என் உயிரு காவ்யா” கட்டிக்கொண்டே அவன் கண்களை பார்த்தேன்.. “உன்ன பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட என்னால இருக்கமுடியல, அதான் உன்ன பாக்க அது இது ன்னு சாக்கு சொள்ளவேண்டியதாயிடிச்சு”
அவன் சொன்னதை கேட்டதும்..‘இவனுக்காக உயிர்கூட தரலாம்’ என்று தோன்றியது.
எனக்கு பட்டென்று கோயிலுக்கு போகவேண்டும் என்று தோன்ற…. “கோயிலுக்கு போலாமா?” என்று கேட்டேன்
“போலாமே…” என்றான் என் கணவன்..
மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது… நல்ல வேளையாக சுப்பிரமணி மாமா அங்கு எங்குமே தென்பட வில்லை. ஆதரவாக என் கைகளை பிடித்து மெல்ல அழைத்து சென்றார். மாமா வெளியில் நின்றுகொண்டிருந்தார். “கெளம்பிட்டீங்களா மா..” என்றார்..
“ஆமா மாமா..”
“சரி மா.. பாத்து போயிட்டுவாங்க” வழியனுப்பினார்..
பைக் ல் ஏறி அமர்ந்து அவருக்கு வழிகாட்டினேன்..
கோயில் வந்ததும்… நடை சாத்துவதற்குள் அவசரமாக பூஜை பொருட்கள் வாங்கி சென்றோம்.
பூஜை முடிந்து மெல்ல கோயிலை சுற்றி வந்தோம்..
“என்ன வேண்டிக்கிடீங்க?” சிரித்துக்கொண்டே கேட்டேன்..
“எத்தன ஜென்மம் எடுத்தாலும், நீ எனக்கு மட்டுமே கெடைக்கணும் ன்னு வேண்டிக்கிட்டேன்..”
“ஆஹா..” மனம் குளிர்ந்து..
வெளியில் வந்தோம்….. “பூ வாங்கிதரீன்களா?” ஆசையாக கேட்டேன்..
பூ வாங்கி தலையில் சூடிவிட்டான்
‘வாழ்ந்தால் இவனோடு தான் வாழவேண்டும்…. சுமந்தால் இவன் பிள்ளையை தான் சுமக்கவேண்டும்’ மனம் சொன்னது.
ஆசையாக பைக் ல் ஏறி புறப்பட்டோம்..