மன்னர் காலம் :-
பொழுது புலர்ந்தது.இடுப்பில் இருந்த காத்தவராயன் கையை எடுத்தாள். எழுந்து வெளியே வர,தேவதத்தனின் மனைவிகள் எதிரே வந்தனர்.
மதிவதனியின் முகத்தில் பொட்டு அழிந்து இருப்பதையும்,தலை முடி கலைந்து இருப்பதையும் பார்த்து கேலி பண்ணி சிரித்தனர்..
“இங்க பாருடி,நாமாவது கொஞ்ச நாட்கள் கழித்து தான் காத்தவராயனுக்கு முந்தி விரித்தோம்,ஆனால் இவ வந்த முதல்நாளே முந்தி விரித்து விட்டாள்” என சிரித்தார்கள்..
இன்னொருத்தியோ”ஒன்னும் தெரியாத பாப்பா,ராத்திரி போட்டாளாம் தாப்பா “என்று கேலி பண்ணினாள்..
“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்கல,வீண் கற்பனை வேண்டாம்” என மதிவதனி அவர்களிடம் சீறினாள்..
அப்பொழுது அங்கு காத்தவராயன் எழுந்து நடந்து வர,அவனை பார்த்தவுடன் மற்ற பெண்கள் பயந்து ஒடி விட்டனர்..
மதிவதனி அவனை பார்த்து கொஞ்சம் கூட பயப்படவில்லை.அவனை அலட்சியமாக பார்த்து கடந்து செல்ல,
“உன்னோட இந்த திமிர்தான்டி என்னை மீண்டும் மீண்டும் உன் பக்கம் இழுக்குது..சீக்கிரமே உன்னோட திமிரை கட்டிலில் அடக்கி காட்டுகிறேன் காத்திரு மதிவதனி…அது கூடிய விரைவில் நடக்க தான் போகிறது..”என மனதுக்குள் சொல்லி கொண்டான்..
சிறிது நேரம் கழித்து,அங்கு இருந்த ராணிகளிடம் மதிவதனி எங்கே?என்று கேட்க,”அவள் வடவாற்றில் இரண்டு பணிப்பெண்கள் உடன் குளிக்க சென்று இருக்கிறாள் மகாராஜா..என்று கூறினார்கள்.
காத்தவராயன் மதிவதனி அரண்மனையில் ஒளிந்து இருந்து பொழுது,அவள் குளித்த போது பார்த்த காட்சி நினைவுக்கு வந்தது..உடனே அதை மீண்டும் காணும் ஆவலில் விரைந்து சென்றான்..
காவலர்கள் அவசரமாக ஓடி வந்தனர்…
“மகாராஜா அனர்த்தம் நிகழ்ந்து விட்டது.. எங்கள் காவலையும் மீறி அகழியில் இருந்த சாம்பன் முதலை எப்படியோ தப்பி வடவாற்றில் கலந்து விட்டது…”என்று கூற
“முட்டாள்களே,அங்கு தானடா இப்பொழுது மதிவதனி குளிக்க சென்றாள்..காத்தவராயன் வடவாற்றை நோக்கி பறந்தான்..”
மதிவதனி இருந்த நாடு சமவெளி பகுதி,அங்கு ஒடும் ஆறுகள் வண்டல் மண் கலந்து கலங்கலாக இருக்கும்..ஆனால் மாயமலையோ மலைப்பகுதி, ஆறுகள் உற்பத்தி ஆகும் இடம்..அதில் ஒரு நீரோடை தான் வடவாறு..தெளிவான நீரை பார்த்ததும் மதிவதனிக்கு உற்சாகம் பொங்கி விட்டது..உடனே அதில் இறங்க நீர் பனியில் உருகிய நீர் போல் இருந்தது..உடனே மதிவதனி “அய்யோ ரொம்ப சில்லென்று இருக்குது”என ஓடையில் இருந்து காலை எடுத்து விட்டாள்..
உடன் வந்த பணிப்பெண்கள்,ராணி உள்ளே ஒரு முங்கு முங்கி எழுங்கள்.அப்புறம் குளிரே தெரியாது..என்று சொல்ல
மதிவதனி மீண்டும்,ஆற்றில் இறங்கி உள்ளே ஒரு முங்கி எழும் போதே காத்தவராயனால் இரவு உண்டான அனல் அவள் உடலில் இருந்த வெளியேறியது…
வடவாற்றின் நீர் புத்துணர்ச்சி தர,நீந்தி கொண்டே ஓடையின் மையப்பகுதிக்கு வந்து விட்டாள்.நீர் தெளிவாக இருந்ததால் முதலை மதிவதனியை நோக்கி நீந்தி வந்ததை பணிப்பெண்கள் பார்த்து விட்டார்கள்..
அவர்கள் ராணி,முதலை,முதலை என்று கத்தியதும்,மதிவதனி முதலையை பார்த்து விட்டாள்.முதலை பாய்ந்து மதிவதனியை கடிக்க வந்த ஒரு நொடியில் மதிவதனி கரைக்கு திரும்ப நேரம் இல்லை என்று உணர்ந்து கொண்டு ஆற்றுக்கு அடியில் செல்ல,அதை பார்த்து பணிப்பெண்கள் மூர்ச்சித்து விழுந்தனர்..
உள்நீச்சல் அடித்து கொண்டே மூச்சை அடக்கி செல்லும் பொழுது நீருக்குள்ளே இருந்த கொடியில் அவளது ரவிக்கை மாட்டி கொண்டது..மேலே வர முடியாமல் தத்தளிக்க வேறு வழியின்றி தன் ரவிக்கையை தானே கிழித்து விட்ட பிறகு தான் நீரின் மேற்பகுதிக்கு அவளால் வர முடிந்தது..மேலே வந்து மூச்சு விட மீண்டும் முதலை வாலை ஆட்டிக்கொண்டு திரும்பி தன் வாயில் உள்ள கோரப்பற்களை காட்டி கொண்டு தன்னை நோக்கி பாய்ந்து வருவதை பார்த்து “அவ்வளவு தான் தன் வாழ்க்கை முடிந்தது என ஒரு கணம் எண்ணி கண்ணை மூட காத்தவராயன் முதலைக்கும் அவளுக்கும் நடுவில் பாய்ந்தான்..

Super