அசுரன் Part 7 71

“ஆமா அண்ணே” என்று சொன்னேன்.

“அட அது,ஒரு மாசம் முன்னாடி லாரியில் அடிப்பட்டு செத்து போன பொண்ணுப்பா…அது எப்பவும் வந்து தண்ணி தண்ணி என்று கேட்கும்.நீ எத்தனை முறை போய் கொடுத்தாலும் அது திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கும்..நீ கொடுப்பதை மட்டும் நிப்பாட்டினே ,அப்புறம் பளாரென்று என்று அறையும்..நீ அங்கேயே மயங்கி விழ வேண்டியது தான்.. என்று அந்த கடைக்காரர் சொல்ல,அப்புறம் நான் வேறு வழியா சுத்திட்டு வீடு வந்து சேர்ந்தேன் சார்..அதுக்கு அப்புறம் மதிய வேளை மட்டும் நான் அந்த பக்கம் போறதே இல்ல…

குண்டலகேசி அதை கேட்டு வாயை பிளந்து மேலே பார்த்து கொண்டு இருந்தார்…

“சார்…சார்….”என்று அறிவு தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினான்..

மயக்கம் தெளிந்து குண்டலகேசி “அடேய் அறிவு,நான் உனக்கு என்னடா துரோகம் பண்ணேன்…!எனக்கு பேய் பயம் போக்கறேன் என்று சொல்லிட்டு இப்போ கூட்டி விட்டுட்டீயே…அய்யோ இப்போ என் பொண்டாட்டி வேற மதியத்திற்கு பரோட்டாவும்,கொத்து கறியும் பாண்டியன் ஓட்டலில் வாங்கிட்டு வர சொன்னாளே..மணி வேற இப்போ 12..அதே உச்சி வேளை…இப்போ நான் வாங்க வேணும்னா அதே நாலு மூலை ரோட்டு பக்கம் தான்டா…போய் ஆகணும்.நான் என்ன பண்ணுவேன்…!வாங்கிட்டு போகவில்லை என்றால் என்னை என் பொண்டாட்டி பரோட்டா மாதிரி தட்டி,உருட்டி,பெரட்டி கொத்து கறி போட்டுடாவாளே..அந்த செத்து போன பொண்ணு வேற என்னை, ரா ரா ரா சரசுக்கு ரா ரா என்று கூப்பிடுகிற மாதிரியே இருக்கே…என்று புலம்பினான்..

“சார்,ஒன்னு பண்ணுங்க..என்னை மாதிரி சுத்திட்டு போய் வாங்கிட்டு வாங்க சார்…”

“டேய் சுத்திட்டு போனா அந்த வழியாகவும் சுடுகாடு இருக்கே…நான் போக மாட்டேன்..ஒழுங்கா நீ போய் வாங்கிட்டு வா..”

“சார் நான் போய்ட்டா,அப்புறம் இங்கே யார் வாட்ச்மேன் வேலை பார்ப்பது…”

“அப்படியே அய்யா,கஸ்டம்ஸ் வேலை பார்க்கிறார்..இவரு இல்லன்னா..அப்படியே இங்கே நூறு கோடி ரூபாய் தங்கம் கடத்திட்டு போய்ட போறாங்க.போ,இருக்கிறது வெறும் எட்டு ஃபேமிலி தான்..போடா போய் வாங்கிட்டு வா.நான் பார்த்துக்கிறேன்..”

“சார்,பத்திரமா பார்த்துங்க சார்.. எங்கேயும் எழுந்து போய்டாதீங்க”

*போடா,போடா நீ வருகிற வரை நான் இங்கே தான் இருப்பேன்…”

அறிவு ,பாண்டியன் ஓட்டலில் பரோட்டாவும், கொத்துகறி வாங்கி திரும்பி சைக்கிளில் வந்து கொண்டு இருந்தான்..”ஒரே முறை உன் தரிசனம்,உலா வரும் நம் ஊர்வலம்”என பாட்டு பாடி கொண்டே சைக்கிள் மிதித்தான்..

சுடுகாடு அருகே வந்த உடன் அவன் சைக்கிள் கொஞ்சம் கூட நகரவில்லை..யாரோ இழுத்து பிடித்து இருப்பது போல் தோன்றியது..மெதுவாக திரும்பி பார்த்தான்..ஏதோ புகை போல ஒரு உருவம் நின்று இருந்தது..பார்த்து அலறி கீழே விழுந்து விட்டான்..

“நீ தானப்பா தரிசனம் கேட்டே,நான் கொடுத்து விட்டேன்..உலா போலாமா” என்று காத்தவராயன் ஆவி கேட்டது..

“அய்யோ எங்கே”என அறிவு அலறினான்.

“என்னோட வீடு சுடுகாட்டுக்கு தான்”

“அய்யோ நான் வர மாட்டேன்..”

“என்னப்பா நீ, ஏதோ ஆவி உன் முன்னாடி வந்தா செல்ஃபி எடுப்பே என்று சொன்னே வா செல்ஃபி எடுக்கலாம் ..” என்று காத்தவராயன் ஆவி கூப்பிட்டது…

“ஏங்க ஏதோ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா…. உடனே புறப்பட்டு வந்துவிட்டால் எப்படிங்க…?”

“நீ தானாப்பா சாப்பிட கூப்பிட்ட..!வந்துட்டேன் வா சாப்பிடலாம்…”

“அய்யோ நீங்க வேணும் என்றால் என் சாப்பாட்டை எடுத்துக்கோங்க.ஆனா என்னை விட்டுடுங்க…”என அறிவு கெஞ்சினான்..

“ம்.. அப்ப சரி..எனக்கும் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு..ஆனால் எனக்கு சாப்பிட ஒரு உடம்பு வேணும்.நான் உன் உடம்பில் இருந்து சாப்பிட்டு போய் விடுகிறேன்..”

“அய்யோ நான் மாட்டேன்,எனக்கு பயமாயிருக்கு…”

“இங்க பாரு..எனக்கு உன் அனுமதி எல்லாம் தேவை இல்ல.நான் இப்போ நினைத்தால் உன் உடம்பில் புகுந்து என்ன வேண்டுமானால் செய்ய முடியும்.உன் குடும்பத்தை கூட நிர்மூலமாக்க முடியும்..ஆனால் நான் உன்கிட்ட அனுமதி தான் கேட்கிறேன்..நான் சாப்பிட்டு விட்டு அமைதியா வந்த வழியே போய் விடுவேன்.போகும் போது உனக்கு ஒரு பரிசும் தந்து விட்டு போவேன்..”

1 Comment

  1. Super

Comments are closed.