அசுரன் Part 7 71

“வாங்க சார்,..வேலை ஒன்னும் இல்ல,மொபைலில் ஒரு படம் ஒன்னு டவுன்லோட் பண்ணி வச்சு இருக்கேன்..அது தான் பார்க்க போறேன்..”

“அப்படியா… என்ன படம் அறிவு..?”

“கார்த்திக் நடிச்ச சொல்ல துடிக்குது மனசு படம் சார்…கார்த்திக் பேயா வருவார்…சூப்பரா இருக்கும்..”

“என்னது பேயா…நான் வரேன்பா…”

“வாங்க சார்…இந்த படம் ஒன்னும் அந்த அளவுக்கு பயமா ஒன்னும் இருக்காது..இந்த மாதிரி பேய் படம் எல்லாம் அப்பப்ப பார்த்தால் தான் உங்களுக்கு பயம் எல்லாம் விலகி போகும் சார்…”

“ஏம்ப்பா ஒன்னும் ஆகாது தானே…”குண்டலகேசி திரும்ப கேட்டார்..

“அட ஒன்னும் ஆகாது சார்…நீங்க தைரியமா வாங்க….”அறிவு அழைத்தான்.

“உனக்கு பேய் பயம் எல்லாம் இல்லையா அறிவு…”

“எனக்கு அதெல்லாம் இல்ல சார்,பேய் மட்டும் வந்தால் அது கூட செல்ஃபி எடுத்து விருந்தே சாப்பிடுவேன்…”என அறிவு தெனாவெட்டாக கூறினான்..

“அப்படியா….”குண்டலகேசி ஆச்சரியப்பட்டார்..

“ஆமா சார், நிஜமாத்தான் சொல்றேன்…!

“நானும் உங்களை மாதிரி தான் பேய் என்றால் பயந்து கொண்டு தான் இருந்தேன்.அப்புறம் பேய் படமா பார்த்து பார்த்து தான் இப்போ பேய் பயம் போய்டுச்சு.”

அறிவு தன் மொபைலை ப்ளூடூத் ஸ்பீக்கர் மூலம் கனெக்ட் செய்தான்..

“ஏம்ப்பா அறிவு,ப்ளூடூத் ஸ்பீக்கர் எல்லாம் வேண்டாம்.மொபைல் சவுண்டே போதும்ப்பா..,இதுக்கே நான் உச்சா போய்டுவேன்..”

“சும்மா இருங்க சார்,சரியான பயந்தாங்கொள்ளியா இருக்கீங்க..இப்படி பார்த்தால் தான் பயம் போகும்…”

இருவரும் சேர்ந்து படம் பார்த்து முடித்தார்கள்..

“பரவாயில்லைப்பா ,இந்த படம் அவ்வளவா ஒன்னும் பயமா இல்ல..”குண்டலகேசி கொஞ்சம் தைரியமாக சொன்னான்..

“சார் இந்த படம் ஒண்ணாங்கிளாஸ் மாதிரி தான்..படிப்படியா உங்களுக்கு EVIL DEAD RAISE,CONJURING படம் எல்லாம் போட்டு காண்பிக்கிறேன்..அப்புறம் எல்லாம் போய்டும்…”

“என்னது உசிரா…?”

“இல்ல சார்..பயம்..”

“அப்படியா…நீ பேயை பார்த்து இருக்கியா அறிவு..!”

“ஒருமுறை பார்த்து இருக்கேன் சார்..,நம்ம அபார்ட்மெண்டில் இருந்து நேரா போனால் மெயின் ரோடு வருமே சார்…”

“ஆமா வரும்…”

“அங்கே ஒரு பொண்ணு ரோடு கிராஸ் பண்ணும் போது அடிப்பட்டு செத்து போச்சு….”

“அய்யயோ அப்புறம்….”

“அது சாகும் போது தாகமா இருக்கு தண்ணி தண்ணி என்று சொல்லிட்டே செத்து போச்சாம்…”

“அப்புறம்…..”குண்டல கேசி ஆர்வமாக கேட்டார்

ஒருநாள் மதியவேளை உச்சி வெயில்…நான் அந்த பக்கம் வரும் பொழுது ஒரு பொண்ணு தலையில் இரத்தம் வழிய நின்னுட்டு இருந்துச்சு.. நான் பதறி போய் “அய்யோ வாம்மா உடனே ஹாஸ்பிடலுக்கு போலாம் என்று கூப்பிட்டேன்…அந்த பொண்ணு அதற்கு”அண்ணே, தண்ணி கொடுங்க தாகமாக இருக்கு என்று கேட்டுச்சு..நானும் கொடுத்தேன்.இன்னும் வேணும் என்று சொல்லுச்சி.சரி நானும் இரும்மா போய் எடுத்துட்டு வரேன் என்று அவசரமா ஓடிப்போய் பக்கத்தில் 1கிமீ தூரத்தில் ஒரு பெட்டிக்கடை இருந்துச்சு.போய் அங்கே இருந்தே பெட்டிக்கடைக்காரரிடம்,”அண்ணே ஒரு பொண்ணு அடிப்பட்டு கிடக்கு,கொஞ்சம் தண்ணி கொடுங்க என்று கேட்டேன்..ஆனா அவர் ஒரு விசயம் சொன்னார்,அதை கேட்ட உடனே எனக்கு திக்கென்று ஆகிவிட்டது,என அறிவு கொஞ்சம் அமைதியாக இருந்தான்

“ஏம்ப்பா கேப் விடுற…திக் திக்குன்னு இருக்குல்ல,மேலே சொல்லு…”குண்டலகேசிக்கு பயத்தில் உடம்பு வேர்க்க தொடங்கியது..

அறிவு பேச ஆரம்பித்தான்..”கடைக்காரர் என்னை ஏற இறங்க பார்த்திட்டு ஏம்ப்பா அந்த நாலு மூலை ரோட்டில் தானே சொல்றே…”என கேட்டார்..

1 Comment

  1. Super

Comments are closed.