நிகழ்காலம்
“யோவ் குண்டலகேசி ,பாத்ரூமில் தண்ணி வரல பாரு.மொட்டை மாடியில் போய் இந்த பசங்க வால்வ் ஏதாவது திருப்பி தொலைச்சு இருக்க பாருங்க..போய் என்னவென்று பாரு….”அவன் மனைவி லீலாவதி கத்தினாள்..
“என்னது…இந்த ராத்திரியில் நான் தனியா போகணுமா..நான் போக மாட்டேன்..”குண்டலகேசி அலறினான்.
“யோவ் மணி 10 தான் ஆகுது..பேய் எல்லாம் 12 மணிக்கு மேல தான் வரும்.தைரியமா போயிட்டு வா…”
“ஏன் அந்த வாட்ச்மேனை அனுப்ப வேண்டியது தானே….”
“யாரு அந்த நைட் ஷிப்ட் வாட்ச்மேனா… அவன் வேஸ்ட் அவனுக்கு ராத்திரியானா கண்ணே தெரியாது இந்த அறிவு பையன் வேற எங்கேயோ வெளியே போய் இருக்கான். நீ போய்ட்டு வா”
“ஐயோ எனக்கு பயமா இருக்கு நான் போக மாட்டேன்”
“இப்போ நீ போகலன்னா நான் உன்னை வெளியே தள்ளி தாழ் போட்டு விடுவேன் அப்புறம் இரவு முழுக்க நீ வெளிய தான் இருக்கணும்….”
“ஐயோ அந்த மாதிரி எதுவும் செஞ்சு விடாதே தாயி…நான் போயிட்டு வரேன்”
குண்டலகேசி பயந்து கொண்டே படிக்கட்டு மேலே ஏறினான்….
காத்தவராயன் ஆவி,யார் உடலில் எப்படி போகலாம் என்று மொட்டை மாடியில் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருந்தது…
“ராம கோபாலன் ஒரு சபல புத்தி உடையவன்..உடனே ஒப்புக்கொண்டான்.ஆனால் இன்னொருவன் எப்படி ஒப்பு கொள்வான்.அதுவும் பேய் என்றாலே பயந்து ஒடி விடுவார்களே….!.யாராவது அவள் மேல் ஆசைப்படுகிறார்களா என்று நோட்டம் விடுவோம்..சிக்கினால் அவர்கள் முன்னே தோன்றிவிட வேண்டியது தான்…என காத்தவராயன் ஆவி நினைத்தது….
குண்டலகேசிக்கு மொட்டை மாடி வந்த உடன் கரெண்ட் ஆகி விட்டது.அது இன்னும் பயத்தை கூட்டி விட்டது..இருட்டை பார்த்து இன்னும் பயம் வந்தது.கால்கள் நடுங்கியது.மொபைலில் டார்ச் அடித்து கொண்டு அடி மேல் அடி எடுத்து வைத்தான்.ஒரு கால் எடுத்து வைத்தாலும் மறுகால் பின் வாங்கியது.. தண்ணி டேங்க் பக்கத்தில் தான் இருந்தது.ஆனால் அதை நெருங்கவே அவனுக்கு பல வருடங்கள் ஆனது போல் தோன்றியது..
“என்ன இது,ரொம்ப நேரம் ஒரே இடத்தில் நடக்கிற மாதிரி ஃபீல் ஆவுது..எனக்கு..”
தட்டுத்தடுமாறி சென்று பார்க்க உண்மையில் வால்வ் close ஆகி இருக்க,ஆனால் கீழே ஒரே புகையா கிளம்பியது.. தூரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது..பயந்து கொண்டே நடுக்கத்துடன் ஓபன் செய்தான்.ஆனால் அது திரும்ப close ஆகியது…குண்டலகேசி திரும்ப”என்ன இது வால்வ் தானாக close ஆகுது என குரல் நடுங்க..”காக்க காக்க சூர்யா காக்க,நோக்க நோக்க வால்டர் வெற்றிவேல் நோக்க,தாக்க தாக்க அருண் விஜய் தாக்க….” என்று அவன் பயத்தில் உளற..
” அது காக்க காக்க கனகவேல் காக்க”என்ற குரல் பின்னாடி இருந்து வர,”யார் அது”என பயத்தில் கேட்டு கொண்டே திரும்பினான்..அங்கு ஒரு உருவம் இருட்டில் நின்று இருந்தது…
அவ்வளவு தான் குண்டலகேசி “பே…….”பயத்தில் அலறி அங்கேயே மயங்கி விழுந்து விட்டான்..
“இவன் வேலைக்கு ஆக மாட்டான்,சரியான பயந்தாங்கொள்ளி பய….”என காத்தவராயன் ஆவி மறைந்துவிட்டது..
குண்டலகேசி கண் விழிக்கும் போது அவன் வீட்டில் அவர் மனைவி,அனு,செக்கரட்டரி எல்லோரும் கட்டிலை சுற்றி நின்று இருந்தனர்..

Super