மன்னர் காலம்
மதிவதனி மகேந்திரபுரி எல்லையை நெருங்கினாள்..
அவள் மாயமலை வீரர்கள் உடன் வருவதை பார்த்த காவலாளிகள் உடனே ஓடிச்சென்று மன்னனிடம் தெரிவித்தனர்.
மன்னன் இதை கேட்டு,”என் மகள் என் மீது போர் தொடுத்து வந்துள்ளாளா..!”என அதிர்ச்சி அடைந்தான்.
“இல்லை மன்னா,எங்களுக்கு அப்படி தோன்றவில்லை..மொத்த வீரர்கள் நான்கே பேர் தான் வந்துள்ளனர்..இளவரசி உங்களை காண வந்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது..”
“வேண்டாம்… நான் அவளை பார்க்க விரும்பவில்லை.நேரில் பார்த்தால் கண்டிப்பா மனம் மாறி விடுவேன்.அவளை இங்கிருந்து போக சொல்.போக மாட்டேன் என அவள் முரண்டு பிடித்தால் நம் வீரர்களை அனுப்பி கொன்று விடு…”
“மன்னா…!” என அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..
மன்னன் கோபமாக”உடனே சென்று நான் சொன்னதை செய்யுங்கள்.இது என் உத்தரவு..”
அமைச்சர் ஒடி வந்தார்..
“மன்னா,இது நீங்கள் அவசரப்பட்டு எடுத்த முடிவோ என்று தோணுது..”
“எனக்கு வேறு வழி ஒன்றும் தோணவில்லை அமைச்சரே..”
கோட்டை வாசலில் வந்து நின்ற மதிவதனியிடம்,காவலாளி பறை முழக்கம் செய்தான்..
“இளவரசி,தாங்கள் உடனே இங்கிருந்து செல்ல மன்னர் ஆணை..”
மதிவதனி இடையில் ஒரு பொருளை எடுத்து வாயில் வைத்து அவனிடம்,”நான் என் தந்தையை பார்க்க வந்து இருக்கிறேன்.தயவு செய்து கோட்டை கதவை திறந்து விடுங்கள்..”என முழக்கம் செய்தாள்.
“முடியாது இளவரசி,மன்னர் உங்களை திரும்பி போக சொன்னார்..இல்லாவிடில் உங்களை கொல்ல சொல்லி ஆணை.”
எதிரி நாட்டு மன்னன் சொன்னது உண்மை தான் ..என மதிவதனி மனதுக்குள் நினைத்து கொண்டு,”என்னை கொல்வதனால் என் தந்தை அவர் கைகளால் கொல்லட்டும்.இப்பொழுது நீங்கள் கோட்டை கதவை திறக்காவிடில் நான் என் பாணத்தால் கோட்டை கதவை உடைக்க வேண்டி இருக்கும்.”என முழங்கினாள்.
போர் முரசு முழங்கி,கோட்டை கதவுகள் திறந்து படைகள் வெளியே வந்தன..
மதிவதனி நாட்டு படைகள்,மதிவதனியை எதிர்த்தே போர் செய்ய வந்தன..
முதல் தாக்குதல் வீரர்களிடம் இருந்து வர,தந்தையை காணும் வரை இவர்களால் கொல்லப்பட கூடாது என மதிவதனி நினைத்தாள்..
அவர்கள் தொடுத்த தாக்குதல்களை,அம்பு விட்டு மட்டுமே தடுத்து கொண்டு முன்னேறி வந்தாள்.அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கவே இல்லை..பல கோணங்களில் இருந்து சரமாரியாக அம்புகளும் வேல்களும் மழையாக மதிவதனி மீது பொழிந்தன…ஆனால் அவற்றை எல்லாம் தன் பாணங்களால் சிதறடித்து கொண்டே வந்தாள்..ஆனால் மகேந்திரபுரி வீரர்கள் விட்ட பாணங்களால் மதிவதனி கூட இருந்த மாயமலை வீரர்கள் பலியாகி விட்டனர்.
நான்கைந்து வீரர்கள் ஒன்று சேர்ந்து பெரிய பாறையை தூக்கி அவள் மீது வீசி எறிந்தனர்..
அதை தன் அம்பினால் அவள் அடித்து நொறுக்கினாலும்,சிதறிய பாறைத்துண்டு அவள் நெற்றியை பதம் பார்த்தது.மேலும் கண்ணில் தூசி விழ கண்ணை மூடினாள்.இன்னொரு வீரன் அவளை குறி பார்த்து வேலை எறிய,அது அவள் தோள் பட்டையை பதம் பார்த்தது..
