அவன் அகோரியிடம்,”நீ சொல்வதை நான் எப்படி..?அதுவும் என் கையால் செய்வது…!”
“செய்து தான் ஆக வேண்டும் மன்னா,உன் இளமை திரும்பி விட்டால் பிறகு கவலை என்ன எத்தனை முறை வேண்டுமானால் உன் ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம்..அப்புறம் நீ நினைத்தது எல்லாம் நடக்கும்..”
காத்தவராயன் யோசித்தான்.இப்போது எனக்கு இருக்கும் பலமே பல இளைஞர்களின் சக்திக்கு ஈடானாது.அதுவே என் வாலிப பருவமும்,கூட இந்திரஜித் முழு சக்தியும் கிடைத்தால்…..!” என யோசிக்கவே அவனுக்கு இன்பமாக இருந்தது..
காத்தவராயன் அகோரியிடம்,”எல்லாம் சரி,ஆனால் மதிவதனி என்னை தோற்கடித்த பின் அவளை ஏதாவது செய்ய வேண்டும் என என் மனம் துடிக்கிறது..”
அகோரி சில நிமிடம் யோசித்தான்..பிறகு அகோரி சில விசயங்களை சொல்ல சொல்ல காத்தவராயன் முகம் மலர்ந்தது..
“ஆகா அற்புதமான யோசனை…உடனே அதை செய்..பிறகு அவள் மாயமலை வரட்டும். நான் என் செயலை காட்டுகிறேன்..”காத்தவராயன் தன் மாளிகையை நோக்கி விரைந்தான்..
நான் சொன்னவை யாவும் உண்மை என்று நம்பி விட்டாய் காத்தவராயா..அது தான் இல்லை.நடக்க போகும் யாகம் உன் நன்மைக்கு அல்ல என் நன்மைக்கே… என சிரித்தான்..
அகோரி காத்தவராயனிடம்,என்ன பொருள் யாகத்திற்கு வேணும் என கேட்டான்..? இந்த உலகத்திற்கு ஏன் இன்னும் அந்த பொருள் வரவில்லை என்று சொன்னான்…?
மதிவதனி குதிரையில் வாயு வேகத்தில் மாயமலை திரும்பி கொண்டு இருந்தாள்.
மாயமலை உள்ளே பிரவேசித்த உடன் அவளை அழைக்கும் குரலை கேட்டு குதிரையை உடனே
நிறுத்தினாள்..ஓடிச்சென்று அவர் காலில் விழுந்து வணங்கினாள்..
“குருவே…இந்த இடத்தில் தாங்கள் எப்படி..?”
“காலம் என்னை உன்னிடம் அனுப்பித்தது மதி…”
“தாங்கள் எனக்கு குருவாக வந்தது என் பெரும் பாக்கியம்..ஏற்கனவே எனக்கு கற்று கொடுத்து நிறைய உதவி செய்து உள்ளீர்கள்..”
“என் அப்பா துரோணருக்கு அர்ஜுனன் போன்ற சிறந்த மாணவன் கிடைத்தான்.அது போல தான் எனக்கு நீ.அன்று நீ குரு தட்சணை தருவதாக சொன்னாய்..எனக்கு உன் வில் வேண்டும்”
மதிவதனி எந்த மறுபேச்சு பேசாமல் அவள் வில்லை எடுத்து அஸ்வத்தாமன் காலடியில் சமர்பித்து விட்டாள்..
“மிக்க சந்தோசம் மதி,இது தான் உண்மையான சிஷ்யைக்கு அழகு..உன்னை சிஷ்யையாக அடைந்ததிற்கு நான் பெருமைப்படுகிறேன்..அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்..நீ காத்தவராயனுக்கு அவன் வம்சம் விளங்க வாரிசை பெற்று தந்து விட்டு உயிரை துறப்பதாக எண்ணி உள்ளாய் சரியா..!”
“ஆம் குருவே..நீங்கள் நினைத்தது சரி தான்.அவனால் கறைப்பட்ட இந்த உடம்பை வைத்து கொண்டு வாழ எனக்கு விருப்பமில்லை..”
“ஆனால் உன் வயிற்றில் இன்னும் அவன் கரு உருவாகவில்லை.அது மட்டுமல்லாமல் அவன் உன்னிடம் தோற்ற அவமானத்தில் உன்னை வெறுத்து விலகி இருக்க போகிறான்..”
“அய்யோ அப்படியெனில் நான் எப்படி அவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி என் உயிரை துறப்பது குருவே..”
“உன் அழகை வைத்து தான் நீ அவனை தூண்டி உடலுறவு கொள்ள வைக்க வேண்டும் மதி.அப்பொழுது தான் உன் எண்ணம் ஈடேறும்..”
“உத்தரவு குருவே…”என அவள் விடைபெற்றாள்.
அவள் குதிரை கண்ணில் மறைந்த பிறகு,அஸ்வத்தாமன் உருவில் இருந்த அந்த மாயாவி தன் பழைய உருவிற்கு மாறினான்..அந்த அகோரி தான் அதுவே..
“காத்தவராயா தெய்வீக வில்லை அவளிடம் இருந்து பறித்து விட்டேன்.இப்போ அவளாகவே உன்னை தேடி வரும்படி செய்தும் விட்டேன்..போரில் மிஞ்சிய அவள்,இப்போ உன்னிடம் கெஞ்ச போகிறாள்..”
அகோரி அந்த வில்லை தூக்க முயற்சி செய்தான்.ஆனால் அவனால் கொஞ்சம் கூட தூக்க முடியவில்லை..அதை அழிக்க காய்ந்த இலை தழைகளை வில் மேல் போட்டு தீப்பற்ற வைத்தான்..தீ கொழுந்து விட்டு எரிந்தது..
“உன்னோட தெய்வீக வில் இப்போ பஸ்மம் ஆகிவிட்டது மதிவதனி..காத்தவராயா உன்னை அழிக்கும் வில்லை அழித்து விட்டேன்.அவன் சிசு அவள் வயிற்றில் வளர்வது கூட தெரியாமல் அவனுக்கு மீண்டும் மீண்டும் முந்தி விரிக்க போகிறாள் மதிவதனி.. “ஹா ஹா….வென அந்த காடே அதிரும்படி சிரித்தான்..
ஆனால்…..அந்த வில்….
அடுத்து மன்னர் காலமா..?நிகழ் காலமா ?? Dodgy
குறிப்பு : இங்கே மரபணு என்று குறிப்பிட்டு இருப்பது ஜீன்..
