அசுரன் Part 22 40

ஒவ்வொரு மகாரதிகளுக்கும் பிரத்யேகமான அஸ்திரங்களை பிரயோகித்தால் மட்டுமே கொல்ல முடியும் என மதிவதனிக்கு அவள் குரு சொல்லி இருந்தார்..கடோத்கஜனை அழிக்க சக்தி அஸ்திரத்தை கர்ணன் உபயோகித்தான்.அர்ஜுனனை அழிக்க கர்ணன் நாகாஸ்திரத்தை வைத்து இருந்தான்.கும்பகர்ணனை அழிக்க அக்னி அஸ்திரத்தை ராமர் உபயோகித்தார்..ராவணனை அழிக்க அகத்தியர் கொடுத்த பிரம்மாஸ்திரத்தை ராமர் பயன்படுத்தினார்..அதுபோல் காத்தவராயனை கொல்ல இரண்டு திவ்ய அஸ்திரம் தேவைப்படுகிறது.ஒன்று காத்தவராயன் வைத்து இருக்கும் வாயு அஸ்திரம்,இன்னொன்றும் அவனிடத்தில் தான் இருக்கிறது…வெளியில் அல்ல,உள்ளுக்குள்..?அதாவது ஆன்மாவில்..!அது என்ன?அவற்றின் ஒரு பகுதி தான் இரண்டு பெண்களுக்குள் சென்று உள்ளது..?காத்தவராயன் மதிவதனியுடன் உறவு கொள்ளும் போது செல்லாத அவன் சக்தி,அவன் ஆவியாக இருக்கும் பொழுது எப்படி மற்ற பெண்களுக்குள் சென்றது..ஏனெனில் மதிவதனி உடன் உறவு கொள்ளும் பொழுது உடலால் உறவு கொண்டான்..ஆனால் மற்ற பெண்களோடு உறவு கொள்ளும் பொழுது ஆன்மாவாக(காற்றாக)உறவு கொள்கிறான்..

மாயமலை எல்லை வந்த உடன் காத்தவராயன் வீரர்களிடம் “நீங்கள் செல்லுங்கள்.நான் ஒரு இடத்துக்கு போய்விட்டு வருகிறேன்”என குதிரையில் பறந்தான்..அவன் நேராக சென்ற இடம் காளி கோவில்.

கெட்டவன் கேடுகெட்டவன் ஆகிறான்..

நிகழ் காலம்

அறிவு ஏற்கனவே காண்பித்து இருந்த பகுதியை நோக்கி காத்தவராயன் ஆவி ரவுடி கஜாவை தேடி சென்றது.ஆனால் அறிவு சொன்ன ஏரியாவில் அவன் காணவில்லை.

ரவுடி கஜா,லிகிதா மருத்துவமனையில் இருக்கும் பொழுது ஃபோன் செய்தான்.

“என்ன குட்டி,நான் உனக்கு கொடுத்த ரெண்டு நாள் கெடு முடிஞ்சு போச்சு..ஆனா நீ ஆளே வரல..நான் சொன்னது தமாசா எடுத்துகிட்டே தானே…கொஞ்சம் கூட உனக்கு பயம் இல்லை.இன்னும் ரெண்டு மணி நேரத்தில் வந்து உன்னை தூக்கறேன் பார்..”என மிரட்ட

லிகிதா உஷாராகி,”என் ஃபோன் நம்பர் எப்படி கிடைச்சது சார் உங்களுக்கு..”

“உன்னோட ஜாதகமே என்கிட்ட இருக்கு கண்ணு,இன்னிக்கு நீ லைட் ப்ளூ எம்ப்ராய்டரி போட்ட சுடி போட்டு இருக்கே..அந்த கலருக்கு தோதா,வளையல்,கம்மல்,தலைக்கு கிளிப் போட்டு இருக்கே..ஷால் ரெண்டு பக்கம் போடாமல் ஒரு பக்கம் தொங்க விட்டு இருக்கே.. ஒரு சின்ன வட்ட போட்டு வச்சு,அதுக்கு கீழே பிறை நிலா மாறி வரைஞ்சு இருக்கே.இன்னிக்கு உதட்டுக்கு கலரிங் எதுவும் போடல.காலையில் ஹாஸ்டலில் சாப்பிடாமல் வரும் வழியில் ரெண்டு இட்லி,ஒரு பூரி,ஒரு வடை சாப்பிட்டே.நீ எங்கே போறே,எங்கே வரே என உன்னோட ஒவ்வொரு அசைவையும் நான் கண்காணிச்சிட்டே இருக்கேன்.இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல, ரெண்டு மணி நேரத்தில் ஒழுங்கா நான் இப்போ கொடுத்து இருக்கும் அட்ரஸ் வந்து சேரு..போலீஸ்.. கீலீஸ் கம்பளைன்ட் கொடுப்பது எல்லாம் உன் விருப்பம்.ஏன்னா நான் இப்போ இருப்பதே ஒரு மந்திரி கெஸ்ட் ஹவுஸ் தான்.எவனும் ஒரு மயிரும் புடுங்க முடியாது..சீக்கிரம் வந்து சேரு” என போனை வைத்து விட்டான்..

“சார்…”என லிகிதா சொல்லி முடிப்பதற்குள் அவன் போனை வைத்து விட்டான்..

காத்தவராயன் ஆவி அவனை தேடி சோர்ந்து தன் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தது..

லிகிதா தன் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தாள்.கஜா எங்கிருந்து கண்காணிக்கிறான் என்று தேடி பார்த்தாள்.ஆனால் கஜா அங்கே எங்கும் இல்லை.

என்ன செய்வது? என யோசித்து அறிவு தனக்கு உதவி செய்வதாக கூறியது நினைவுக்கு வர உடனே ஃபோன் செய்தாள்.அறிவை தூக்கிய காத்தவராயன் ஆவியிடம் தான் அவன் ஃபோன் இருந்தது..அழைப்பது லிகிதா என புரிந்து கொண்ட காத்தவராயன் ஆவி,உடனே அவள் மூலம் கஜாவை அடைய அந்த செல்ஃபோன் சிக்னல் வழியே பயணம் செய்து லிகிதா இருந்த மருத்துவமனையை அடைந்தது.

“மானே தன் இருப்பிடத்தை புலிக்கு காட்டி கொடுத்து வரவழைத்து விட்டது…”

காத்தவராயனுக்கு இன்னொரு அழகான பட்சி சிக்கி விட்டது…இந்த அழகான பட்சி மூலம் தான் அவன் தன் நெடுநாளைய வேட்கையான மதிவதனியின் மறுபிறவியையும் அடைய போகிறான்..

லிகிதா அழகில் காத்து மயங்கினான்..

ஆவியான என்னையே மயக்கும் இவள் அழகு,அந்த ரவுடியை மயக்கியதில் வியப்பென்ன..!ஆகா அவள் இதழ்கள் உருகி அமுதம் வழிகிறதே..என்ன ஒரு கட்டுக்கோப்பான உடலமைப்பு.அந்த ரவுடியின் உடலில் இருந்து அல்லவா இவளை அணுஅணுவாய் அனுபவிக்க வேண்டும்…

“ம்ம்ம்…சரி..சரி..இப்போ அந்த ரவுடியை கண்டுபிடிக்க வேண்டுமே…காத்து இருப்போம்”என அருகில் இருந்த மருத்துவமனையில் இருந்து அவளை கண்காணித்தது.

சரியாக ரெண்டு மணிநேரம் கழித்து கஜா அவளுக்கு போன் செய்தான்..

“என்ன குட்டி,கொஞ்சம் கூட உனக்கு பயம் இல்ல..ரொம்ப தான் தெனாவெட்டு உனக்கு”

“இங்க பாரு கஜா சார்,நான் வரமாட்டேன்…அதை போன தடவையே நான் சொல்வதற்கு முன் நீங்க போனை கட் பண்ணிட்டீங்க..உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ”

“நான் ஏற்கனவே செய்ய வேண்டியது எல்லாம் செய்ஞ்சிட்டேன் கண்ணு..”

“என்ன பண்ணே…எனக்கு ஒன்னும் புரியல”

“அன்னிக்கு உன் கூட ஒரு பொண்ணு கூட வந்ததே…அது உன் உயிர் தோழி தானே..”

“ஆமா,அவளுக்கென்ன…?”

“நீ போனை கட் பண்ணிட்டு வாட்ஸ்அப் வீடியோ காலில் உடனே வா”

லிகிதா பதறி உடனே அழைக்க,வீடியோ காலில் அவள் தோழி அரைகுறை ஆடையில் அலங்கோலமாக கட்டிலில் கட்டப்பட்டு இருந்தாள்.

“தயவுசெய்து அவளை விட்டுடுங்க..அவ அம்மாவுக்கு அவளை தவிர வேறு துணை யாருமே இல்லை..”

“இங்க பாரு கண்ணு,வைரம் இருக்கிறப்ப யாராவது தகரத்தின் மேல் ஆசைப்படுவாங்களா‌…!நான் வைரம் என்று சொன்னது உன்னை தான்.உன் கால்கள் என் பங்களா வாசல்படி மிதித்த அந்த நொடியே உன் தோழி உடனே விடுவிக்கப்படுவாள்.அப்பவும் நீ வரவில்லை என்றால் உன் தோழியின் உடல் நாளை எங்காவது உடலில் ஒட்டுத்துணி இல்லாமல் கரை ஒதுங்கும்..எப்படி வசதி…!”

“சார் பிளீஸ் அவளை எதுவும் செய்து விடாதீங்க”என அழுதாள்..