மன்னர் காலம்
காத்தவராயன் காளி கோவிலுக்கு சென்று பூஜை செய்ய ஆரம்பித்தான்..சில நாழிகைகளுக்கு பிறகு தேவி அவன் முன் பிரசன்னம் ஆனாள்..
“என்னை இப்போ எதற்கு அழைத்தாய் காத்தவராயா..”காளி அன்னை உக்கிரமாக கேட்டார்.
“தாயே…இப்படி போரின் முக்கியமான சமயத்தில் என்னை கைவிடுவது சரிதானா…?நான் யாகம் செய்து உங்களுக்கு பலி கொடுத்ததன் பலன் தான் இதுதானா?”
“நீ முன்பு எல்லாம் உள்ளார்த்தாமான பக்தியோடு என்னை பூஜித்தாய் காத்தவராயா…!அந்த பக்திக்கு உன்னை கேடயமாக இருந்து பாதுகாத்தேன்…ஆனால் உனக்கு தொடர்ந்து வெற்றி குவிய தொடங்கியவுடன் ஆணவத்தினால் என்ன கொடுத்தாலும் அதை இந்த காளி ஏற்று கொண்டு உனக்கு வரம் கொடுப்பாள் என்று நினைக்கிறாயா…?நீ இங்கு ஆடம்பரமாக செய்யும் பூஜைகள் என்னை எதுவும் கவராது.. அன்போடு ஒரு பூ வைத்து பூஜை செய்தால் கூட ஏற்று கொண்டு அருள்பாலிப்பாள் இந்த காளி…மேலும் என் பேச்சு எதையும் நீ கொஞ்சம் கூட மதிக்கவில்லை..”
“உங்கள் பேச்சை நான் எப்பொழுது மீறினேன் தேவி…”
“நான் என்ற ஆணவம் உன் கண்ணை மறைக்கிறது காத்தவராயா..மதிவதனியை தேடி சென்றால் அது உன் அழிவுக்கு வழிவகுக்கும் என ஆரம்பத்திலேயே எச்சரித்தேன்..ஆனால் காமத்தின் மோகத்தில் என் பேச்சை நீ மீறினாய்.நான் கொடுத்த ஆயதத்தை பெண்கள் மேல் பிரயோகிக்க கூடாது என சொல்லியே கொடுத்தேன்..ஆனால் அதையும் புறம் தள்ளினாய்.அந்த ஆயுதம் மதிவதனியை தாக்கி அழித்து இருக்கவேண்டியது..ஆனால் மதிவதனி புத்திசாலி,அந்த ஆயுதத்திடம் அவள் கை கூப்பி சரணடைந்து விட்டாள்.இதற்கு மேல் என்னால் உனக்கு உதவி செய்ய இயலாது..”
“தேவி,நான் ஒன்றும் ஆணவத்துடன் பூஜை செய்யவில்லை. .?”
“உனக்கு வார்த்தையில் சொன்னால் புரியாது.செயலால் எளிதாக புரிய வைக்கிறேன்.உன் தலையை வெட்டி உடனே என் காலில் இடு” என கட்டளையிட்டார்.
காத்தவராயன் உடைவாளை எடுத்தான்…கழுத்தில் கத்தியை வைத்தான்.அவன் மனதில் பல எண்ணங்கள் தோன்றியது..”நான் இப்போ தலையை வெட்டி என்னை நானே பலி கொடுத்து விட்டால் உயிர் இழந்து போவேனே.பிறகு எப்படி மதிவதனியை நான் தொட முடியும்..!அவளை மீண்டும் மீண்டும் ருசிக்க இந்த உயிர் வேண்டுமே..”என எண்ணிக்கொண்டு கத்தியை கீழே வைத்து விட்டான்..
ஹாஹாஹா…. காளி தேவி சிரித்தாள்…
இது தான் மனித இயல்பு..உனக்கு ஒன்றின் மேல் பற்று விட்டது..மாயை என்னும் உலகத்தில் ஆட்பட்டு விட்டாய்.இதுவே பழைய காத்தவராயனாக இருந்தால் இந்நேரம் தலையை வெட்டி என் காலடியில் சமர்பித்து இருப்பான்.விதி உன்னை மரணத்தின் பாதையில் கூட்டி செல்கிறது.ஆனால் உன் மரணம் எப்படி நிகழ போகிறது?என்பதை என்னாலும் கணிக்க முடியவில்லை..”
“ஏன் தேவி அப்படி சொல்கிறீர்கள்…”
தேவி அவனிடம்,”ஒவ்வொருவரின் மரபணு 2520 வருடங்களுக்கு ஒவ்வொரு முறை வெளிப்படும்.நீ இராவணன் மகன் இந்திரஜித் வம்சாவளியில் வந்தவன்.ஒவ்வொரு 2520 வருடங்களுக்கும் ஒருமுறை உன் முன்னோர்களில் ஒவ்வொருவருக்கும் அவன் மரபணுவோடு பிறந்துள்ளார்கள்..அந்த வழியில் தான் நீயும் இந்திரஜித்தின் மரபணுவோடு பிறந்து உள்ளாய். உன் முன்னோர்கள் வழியாக பரிமளித்து வந்த அவன் மரபணு தேய்ந்து,தேய்ந்து இப்போ கடைசியாக உன் மூலம் முடிவடைய இருக்கிறது..இந்திரஜித்தின் வஜ்ரம் போன்ற மார்பு தான் உனக்கு கவசமாக கிடைத்து உள்ளது..அதனால் தான் இதுவரை யாரும் உன் மார்பை துளைக்க முடியவில்லை புரிகிறதா..!மதிவதனி வைத்து இருக்கும் அஸ்திரங்கள் கூட உன் மார்பை துளைக்காது..எப்படி அவள் உன்னை கொல்ல போகிறாள் என்று என்னாலும் கணிக்க முடியவில்லை.இந்திரஜித்தை கொல்ல லக்ஷ்மணன் 16 வருடம் நித்திரையை தொலைத்து ஒரு தவம் போல வாழ்ந்ததால் மட்டுமே அவனால் கொல்ல முடிந்தது..அதுபோல உன்னை கொல்ல காலம் என்ன வழி வைத்து உள்ளதோ என்பதை நானறியேன்..”
“காலத்தை நடத்துபவரே நீங்கள் தானே தேவி,அதனால் தானே உங்களை காளி என்று அழைக்கிறார்கள்.தாங்கள் அறியாததா என்ன..?
“நீ சொல்வது உண்மை தான்..ஆனால் இந்த காளியை இயக்குபவர் அந்த பரமன்..அவருக்கு தான் அந்த ரகசியம் தெரியும்..”
“தேவி அது ஏன் 2520 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் இந்திரஜித் மரபணு தோன்றுகிறது….?2000 வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது 1000 வருடங்களுக்கு ஒருமுறையோ தோன்றகூடாதா?
“2520 என்பது ஒரு சிறப்பான எண்.அதற்கும் மரபணுவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது..ஒரு வருடத்திற்கு எத்தனை மாதங்கள் காத்தவராயா..?”
