அசுரன் Part 22 40

மதிவதனி அவனிடம் சிவந்த முகத்துடன் “போர் உடை அணிந்து வந்து நிற்கும் என்னை பார்த்து,சமாதானம் பேச வந்ததாக நினைத்தால் உன்னை விட முட்டாள் யாரும் இல்லை காத்தவராயா…என் தந்தையையோ,என் வீரர்களையோ நீ தொட வேண்டும் என்றால் அது என்னை தாண்டி தான் தொட முடியும். பேச்சை நிப்பாட்டி விட்டு உன் வில்லை எடுத்து அம்பை தொடு..நீ ஒத்தையாக வந்தாலும் சரி,உன் படையாக வந்தாலும் சரி.நான் தயார்.”என நாணின் ஓசை எழுப்பினாள்..

“என்ன மதிவதனி,பிறந்த வீடு வந்த உடன் கணவனை மறந்து விட்டாயோ..”காத்தவராயன் எகத்தாளாமாய் கேட்க,

“நீ என் கணவனா…நாம் செய்தது பைசாச விவாகம் மட்டுமே..இதில் கணவன் நலன் சார்ந்து எதையும் மனைவி செய்ய தேவையில்லை..நம்மோட ஒப்பந்தம் உனக்கு நான் குழந்தை பெற்று தருவதோடு மட்டும் தான்..வீண் பேச்சு ஏன்..?இன்று உனக்கு சரியான போட்டியை காண போகிறாய்..?”

“நான் ஏற்கனவே மஞ்சத்தில் எனக்கு சரியான போட்டியை உன்னிடத்தில் கண்டு விட்டேன் மதி,இப்போ போர் களத்திலா…!அதையும் பார்க்கலாம்.”என வில்லை எடுத்தான்..

காத்தவராயன் அம்புகளை தொடுக்க,பதில் கணைகளை விட்டு மதிவதனி தடுத்தாள்.என்ன முயன்றும் மதிவதனியை வீழ்த்தவே முடியவில்லை..இலக்கை அம்பின் குறியின் திசையை மாற்றி மகேந்திரபுரி வீரர்களை நோக்கி குறிவைத்து காத்தவராயன் எய்த அம்பை அடித்து நொறுக்கினாள்..

இவளை நேரடியாக வெற்றி கொள்ள இயலாமல் தவித்து சாரதியை இடம், வலம் என மாறி மாறி காத்தவராயன் ரதத்தை ஓட்ட சொல்லி அம்புகளை விட,அதை புரிந்து கொண்ட மதிவதனி அதே போல வலம்,இடம் என ரதத்தை ஓட்ட செய்து அம்புகளை விட்டு அவன் திட்டத்தை முறியடித்தாள்.

அம்புகளை சரம் சரமாக விட்டு இருவரும் போரிடுவதை இரு நாட்டு வீரர்களும் வாயை பிளந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தனர்.அம்புகள் ஒன்றையொன்று உரசி தீப்பொறிகள் பறந்தன..
மன்னரும் தன் மகளின் போர் திறமையை கண்டு பெருமிதம் கொண்டார்..அவருக்கே தெரியாத பலவித வித்தைகளை மதிவதனி தெரிந்து வைத்து இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார்..

மதிவதனி வில்லின் நாணை(நூல்)காத்தவராயன் அறுத்து தள்ளினாலும்,அவன் அடுத்த அம்பு விடுவதற்குள் நாணை ஏற்றி விட்டாள்.என்ன ஒரு வேகம் என அவன் அதிசயப்பட்டு பார்ப்பதற்குள் அவன் வில்லின் நாணை மதிவதனி அறுத்து தள்ளி விட்டாள்..அவன் நாணை ஏற்றி முடிப்பதற்குள் அவன் கை,தொடை,மார்பு என மூன்று அம்புகளை எய்து காயப்படுத்த ,மகேந்திரபுரி வீரர்கள் கரகோஷம் எழுப்பினர்..

கோபத்தில் காத்தவராயன் கண்கள் சிவந்தன.. வலியை பொறுத்துக் கொண்டு அம்பை விடுவதற்குள்,மதிவதனி விட்ட அம்பு அவன் வில்லை அடித்து தூள் தூளாக்கியது.ரதத்தில் இருந்த இன்னொரு வில்லை கையில் அவன் எடுத்தது தான் தாமதம்,அதையும் மதிவதனியின் அம்பு அடித்து தூளாக்கியது.கையில் கிடைத்த ஒவ்வொரு ஆயுதமாக அவன் எடுத்து வீச வீச எல்லாவற்றையும் மதிவதனி விட்ட அம்புகள் பதம் பார்த்து விட்டன.

காத்தவராயன் அணிந்து இருந்த கவசத்தை ஆக்நேயா அஸ்திரம் மூலம் மதிவதனி உடைத்தாள்..ஆயிரக்கணக்கான பேரை கொல்லும் பலம் வாய்ந்த அந்த அஸ்திரம் அவன் மார்பில் உள்ள கவசத்தை மட்டுமே உடைத்தது..

உடைந்த கவசத்தை இரு கைகளால் அவன் பிடுங்கி எறிய,அவன் பரந்த மார்பு வெளிப்பட்டது.அவன் பரந்த மார்பில் இருந்த முடிகளில் எல்லாம் அவள் இதழ்கள் முத்தம் இட்டது ஞாபகம் வர,ஒரு நிமிடம் தடுமாறினாள்..ஆனால் உடனே சுதாரித்து அவனை பார்ப்பதை தவிர்த்து விட்டு,அவன் ரதத்தின் கொடியை அறுத்து தள்ளினாள்..மதிவதனி ரதத்தின் சக்கரத்தை உடைக்க காத்தவராயன் மண்ணில் விழுந்து உருண்டான்.அவன் கிரீடம் மண்ணில் விழுந்தது..

மகேந்திரபுரி வீரர்கள் கைகொட்டி சிரிப்பதை பார்த்து அவனுக்கு வெறி வந்தது..இதுவரை யார் மீதும் பிரயோகிக்காத காளி கொடுத்த ஆயுதத்தை மனதில் தியானிக்க அது அவன் கைகளில் வந்தது..அதை மதிவதனி நோக்கி எறிந்தான்..அதற்கு பதில் அஸ்திரம் மதிவதனியிடம் இல்லை..அது காளி தேவியின் அஸ்திரம் என்று அவளுக்கு புரிந்தது.உடனே வில்லை போட்டு விட்டு தாக்க வந்த அஸ்திரம் முன்பு கைகூப்பி வணங்கினாள்..உடனே அந்த அஸ்திரம் அவளை நெருங்கி வந்து தாக்காமல் அப்படியே நின்றது..பின் மறைந்தும் போனது..

அப்பொழுது அசரீரி ஒன்று கேட்டது.

“முட்டாளே,இந்த அஸ்திரத்தை பெண்கள் மீது பிரயோகிக்க கூடாது என்று சொல்லியே உனக்கு கொடுத்தேன்..ஆனால் அதையும் மீறி தொடுத்து விட்டாய்..இதற்கு மேல் இந்த அஸ்திரத்தை பிரயோகிக்கும் தகுதி உனக்கு கிடையாது…”

இது காளி தேவியின் குரல் என்று காத்தவராயனுக்கு தெரிந்தது..இருந்த ஒரே அஸ்திரமும் அவனை விட்டு போனது..

இரத்தம் ஒழுக நிராயுதபாணியாக மீசையில் மண் ஒட்டி காத்தவராயன் தலை தொங்கி போய் கீழே இருந்தான்..

மதிவதனி அவனிடம்,”நிராயுதபாணியான உன்னிடம் இப்போ எனக்கு போர்புரிய எண்ணமில்லை.நீ இன்று போய் நாளை வந்தாலும் சரி,இல்லை..நான் உனக்கு கொடுத்த வாக்குப்படி இரு தினங்களில் உன் நாட்டுக்கு வருவேன்.அங்கு நம் யுத்தத்தை வைத்து கொண்டாலும் சரி.உன் விருப்பம்” என அவனை வழியனுப்பி வைத்தாள்..

“எத்தனையோ மன்னர்களை கொன்று குவித்த என்னை அநாசயமாக என்னை தோற்கடித்து விட்டாளே..இப்போ நான் எப்படி என் வீரர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்.”என தலை தொங்க போட்டு கொண்டு திரும்பி சென்றான்..

அவன் அரக்க மனம் ” விடாதே அவளை,நீ பட்ட அவமானத்திற்கு கட்டிலில் அவளை பழி தீர்த்துக் கொள்”என்றது..

மதிவதனி தனிமையில் ,”என்னுடைய அம்புகள் காத்தவராயன் நெஞ்சை துளைக்க வில்லையே..ஏன்..?ஆக்நேயா அஸ்திரம் விட்டும் பயன் இல்லையே..ஒருவேளை குருநாதர் சொன்ன மகாரதி இவனோ..?இவனை அழிக்க தனிப்பட்ட பிரத்யேகமான அஸ்திரம் உள்ளதோ..?”என சிந்தித்து கொண்டு இருந்தாள்..