இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என உணர்ந்த மதிவதனி,மோகனாஸ்திரத்தை மனதில் நினைத்து விண்ணில் எய்தாள்.அது அங்கு இருந்த எல்லா வீரர்களையும் மயக்கத்தில் ஆழ்த்தியது.எந்த எதிர்ப்பும் இன்றி மதிவதனியின் குதிரை மகேந்திரபுரி கோட்டைக்குள் நுழைந்தது.
குதிரையில் இருந்து தாவி நேராக மன்னன் அறைக்குள் சென்றாள்..
காவலாளிகள் தடுத்தாலும்,அவர்களையும் வாளினால் வெற்றி கொண்டு மன்னன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.
“தந்தையே”என்று அவள் அழைக்க,அவள் குரல் கேட்டு அவன் கண்களில் நீர் வழிந்தது.மகேந்திரவர்மனால் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை..
“மதிவதனி இங்கிருந்து உடனே சென்று விடு..இல்லையெனில் நானே உன்னை கொல்ல நேரிடும்..மகளையே கொன்ற பாவத்தை எனக்கு தந்து விடாதே..”
“உங்கள் கைகளால் மரணத்தை தழுவினால் எனக்கு அதை விட இன்பம் ஏது..?உங்கள் உடைவாளை எடுங்கள் தந்தையே..”
மன்னன் உடைவாளை எடுத்து திரும்ப,அவள் கோலத்தை பார்த்து கையில் இருந்த உடைவாளை நழுவ விட்டான்..
அவள் நெற்றியில் இருந்தும்,தோளில் இருந்தும் வழிந்த ரத்தத்தை பார்த்த உடன் பதறினான்..
“அரண்மனை வைத்தியரை உடனே வர சொல்லுங்கள்”என சங்கநாதம் செய்தான்..
மதிவதனி கலங்கிய கண்களுடன்,”அப்பா,என் உடம்பில் ஏற்பட்ட காயத்தை விட,தாங்கள் என் மனதில் ஏற்படுத்திய காயமே பெரிதாக இருக்கு.ஆனால் நான் உங்கள் நிலையில் இருந்து யோசித்தேன்.நீங்கள் செய்தது முற்றிலும் சரியே..இதோ என் உடைவாளால் என்னை வெட்டி வீழ்த்தி நம் வம்சத்தின் களங்கத்தை போக்கி கொள்ளுங்கள்.ஆனால் அதற்கு முன் என் நிலையையும் கொஞ்சம் சொல்ல அனுமதி கொடுங்கள்..”
மன்னன் அவள் உடைவாளை தட்டிவிட்டு,”உன்னை பார்த்த உடன் என் கோபம் எல்லாம் பஞ்சாய் பறந்து விட்டது கண்ணே..வா வந்து உட்காரு..முதலில் காயத்திற்கு மருந்து போட்டு கொள்..”
“ஆட்டை பலி கொடுக்க முன்,பூஜை செய்வார்கள் அது போலதான் இதுவா..!” என மதிவதனி கேள்வி கேட்க,
“அய்யோ வார்த்தைகளால் என்னை கொல்லாதே மகளே..”
அரண்மனை வைத்தியர் ஓடிவந்து அவள் காயங்களுக்கு மருந்து போட்டு விட்டு சென்ற உடன் ,மதிவதனி பேச ஆரம்பித்தாள்..
தான் எப்படி மாயமலையின்,மதிகெட்டான் சோலையில் மாட்டி கொண்டதும்,பின் அவள் தாயால் காப்பாற்றப்பட்டதையும் கூறினாள்.பிறகு இவையெல்லாம் காத்தவராயன் நயவஞ்சகம் என்பதை உணர்ந்து அவனை கொல்ல நேரிடும் பொழுது தவறி அவன் தாயை கொன்று விட்டதையும் கூறினாள்.
“அவனுடன் மீண்டும் தனித்து நான் போர் செய்தேன் தந்தையே,ஆனால் என் வாள் அவன் மார்பில் இறங்கவே இல்லை..என்னை சாதாரணமாக வெற்றி கொண்டான்.எப்படியாவது என் கற்பை காப்பாற்றி கொண்டு அங்கிருந்து வெளியேற வேண்டும் என நினைத்து அவன் வைத்த போட்டிக்கு ஒப்புக்கொண்டேன்..ஆனால் அதிலும் தோற்று என்னை அவனிடம் இழக்க வேண்டியதாகி விட்டது.அவன் தாயையும்,மகனையும் நான் கொன்றதால் கொஞ்சம் அவன் மீது இரக்கப்பட,அதை அவன் பயன்படுத்தி கொண்டு என்னை அவன் அடைந்து விட்டான்.இப்போ அவன் வம்சத்திற்கு நான் குழந்தை பெற்று கொடுக்க வேண்டும் என்பது தான் போட்டியின் ஒப்பந்தம்..கொடுத்த வாக்கை காப்பாற்றுவது தானே நம் வம்சத்திற்கு அழகு..நான் அவன் வம்சம் தழைக்க குழந்தை பெற்று கொடுத்த உடன் அவனால் கறைபட்ட இந்த மேனியை அழித்து விடுவேன்..என்னை கொல்லும் பாவம் உங்களுக்கு வர வேண்டாம்..”
காத்தவராயனிடம் முடிந்த வரை தன் மகள் போராடி உள்ளாள் என்று அறிந்து மன்னன் பெருமிதம் கொண்டார்.முக்கியமாக அவனுடன் உடலுறவு கொண்டால் பெண்கள் அவன் படுக்கையில் மயங்கி கிடப்பர்..ஆனால் தன் மகள் கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டு உயிரை மாய்த்து கொள்வதாக கூறுகிறாள்..இது போதுமே.என் மகள் மேன்மையானவள் என்று…!என நினைத்தார்.
மன்னன் உடனே,”உன் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம் மதிவதனி,நீ திரும்ப மாயமலை செல்ல வேண்டாம்.இங்கேயே இரு.அவனின் கரு தான் உன் வயிற்றில் வளர்கிறதே..!என ஜோசியர் சொன்னார்.குழந்தை பெற்ற உடன் அவன் நாட்டுக்கு கொடுத்து விடலாம்..”
மதிவதனி கலகலவென சிரித்தாள்..
“தந்தையே நானும் அவனும் கூடி சில நாட்கள் தான் ஆகிறது..அவன் கரு என் வயிற்றில் வளருதா என்று தெரியல..அது உருவாகும் வரை மீண்டும் மீண்டும் நாங்கள் இணை சேர வேண்டியது அவசியம்.எவ்வளவு சீக்கிரம் என்னில் கரு உருவாகிறதோ,அவ்வளவு சீக்கிரம் அவனிடம் இருந்து எனக்கு விடுதலை கிடைக்கும்.மேலும் உங்களுக்கு ஒரு அவமான சின்னமாக இங்கே இருக்க நான் விரும்பவில்லை..சரி..! தந்தையே நான் கிளம்ப வேண்டிய தருணம் வந்து விட்டது..காத்தவராயன் நாடு திரும்புவதற்குள் நான் அங்கே இருக்க வேண்டும்.”
“பொறு மதிவதனி,இவ்வளவு தூரம் ஒரு நாள் முழுக்க குதிரை ஒட்டி வந்துள்ளாய்.இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்து கொண்டு திரும்பி செல்.”
“உங்கள் பேச்சை புறக்கணித்ததன் விளைவு தான் என்னோட இந்த நிலைக்கு காரணம்..இம்முறை உங்கள் பேச்சை தட்ட போவதில்லை நான்.இரண்டு நாள் இருந்துவிட்டு போகிறேன்.”..
காத்தவராயன் மாயமலையை திரும்பிய உடன் நடந்த விசயங்களை கேள்விப்பட்டு கோபத்தின் உச்சிக்கே சென்றான்..மகேந்திரவர்மன் சொல்லி குந்தவை நாட்டு மன்னன் படை எடுத்து வந்ததை தளபதி கூறினான்.மதிவதனி தான் போரிட்டு இந்த நாட்டை காப்பாற்றியதை அறிந்து சந்தோஷப்பட்டாலும், தன் அனுமதி இல்லாமல் அவள் மகேந்திரபுரி சென்றதை அறிந்து கோபம் கொண்டான்..உடனே மகேந்திரபுரி மீது போர் தொடுக்க தயாராக சொன்னான்…
