அசுரன் Part 22 40

“12 மாதங்கள் தான் தேவி..?”

“சரி…ஒரு மாதத்திற்கு எத்தனை நாள்?”

“30 நாட்கள் தேவி..”

“நல்லது..ஒரு வாரத்திற்கு எத்தனை நாள் ?”

“குழந்தைக்கு கூட தெரியும்..7 நாட்கள் தேவி..”

“இப்பொழுது எல்லாவற்றையும் பெருக்கி பார் ..”

“12*30*7=2520 சரியாக வருகிறது தேவி…”

“ம்ம்..2520 எண்ணை நீ ஒன்றில் இருந்து பத்து வரை எந்த எண்ணால் வகுத்தாலும் மிச்சம் இல்லாமல் வகுக்கும்.”

காத்தவராயன் மனதில் கணக்கு போட்டான்

2520/1=2520
2520/2=1260
2520/3=840
2520/4=630
2520/5 = 504
2520/6 = 420
2520/7= 360
2520/8= 315
2520/9 = 280
2520/10= 252
“ஆம் அன்னையே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..”

“முன்னோர்களில் முதன்மை மரபணு ஒவ்வொரு தடவை இன்னொருவரின் மரபணுவோடு கலந்து தான் ஜீவன்கள் பிறக்கும்.அப்போது எல்லாம் முதன்மை மரபணுவோடு இன்னொரு மரபணு சேரும் பொழுது ஒன்று கூட அல்லது குறைவாக கலந்து கலப்பினமாக பிறப்பதால் முதன்மை மரபணுவின் தன்மை பிரகாசிக்காது.அதாவது 2000/3 என்றால் மிச்சம் வரும்..ஆனால் 2520 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் முதன்மை மரபணுவோடு,மற்ற மரபணுக்கள் சேர்ந்தாலும் அது வகுக்கப்பட்டு அதாவது முற்றிலும் மற்ற மரபணுக்கள் ஒழிக்கப்பட்டு மீதம் இல்லாமல் முதன்மை மரபணு மட்டும் பிரதிபலிக்கும்.இந்திரஜித்தின் முதன்மை மரபணு தான் உன்னில் உள்ளது.. லக்ஷ்மணை போல் அழிக்க மதிவதனியிடம் அஸ்திரங்களும் இல்லை..அவனின் யோக சக்தியும் மதிவதனியிடம் இல்லை.உன்னை அவள் தோற்கடிக்கலாம்..ஆனால் கொல்வது எவ்வாறு என எனக்கும் தெரியவில்லை.ஆனால் கண்டிப்பா அதற்கும் ஒரு வழி இருக்கும்..தந்தைக்காக உயிரிழந்த இந்திரஜித் என் மேல் மிகுந்த பக்தி உடையவன்.என் அன்பிற்கு உரியவன்.அவன் கொல்லப்படும் முன்பு என்னை நோக்கி நிகும்பலா யாகம் செய்ய வந்தான்.அவன் மட்டும் அந்த யாகத்தை செய்து முடித்து விட்டு இருந்தால் ராமாயண கதையே மாறி இருக்கும்.ஆனால் அந்த யாகம் கலைந்ததால் மட்டுமே அவன் வீரமரணம் அடைந்தான்..அவன் வம்சத்தில் வந்ததால் மட்டுமே எனக்கு உன் மேல் பிரியம். கடைசியாக ஒன்று சொல்கிறேன்.இப்பொழுது கூட நீ திருந்தி மதிவதனி உடன் சேர்ந்து வாழ முயற்சித்தால் உனக்கு எந்த தீங்கும் வராது.ஆனால் விதி உன்னை அதற்கு விடாது..விதி அதற்கான விளையாட்டை இன்னும் சிறிது நேரத்தில் துவங்கும்..எந்த உயிரும் ஒருநாள் மண்ணுக்கு செல்ல தான் வேண்டும்..சென்று வா”என கூறி காளி தேவி மறைந்து விட்டார்.

நடந்த உரையாடல்களை எல்லாம் இளைப்பாறுவதற்காக அங்கு கோவிலில் தங்கி இருந்த அகோரி ஒளிந்து இருந்து கேட்டான்..

“என்ன இந்திரஜித் வம்சம் இவனா..ஆகா அதிர்ஷ்டம் நம்மை தேடி வந்துள்ளது…இவனை வைத்தே என் எண்ணத்தை ஈடேற்றி கொள்ள வேண்டும்..”என அகோரி நினைத்தான்..

காத்தவராயனுக்கு காளி தேவி சொன்ன புத்திமதி எதுவும் மண்டையில் ஏறவில்லை.மதிவதனி தன்னை விட ஒருபடி மேல் இருக்கிறாளே என பொறாமையில் உள்ளுக்குள் குமைந்தான்.எந்த வீரர்கள் முன்னாடி நான் தோற்றேனோ..அவர்கள் முன்னாடியே நான் அவளை தோற்கடிக்க வேண்டும்..அப்பொழுது தான் பட்ட அவமானம் தீரும்.அவளை என் அடிமையாகவே வைத்து இருக்க வேண்டும்..”என நினைத்து கொண்டு கோவில் வெளியே வந்தான்..

அகோரி அவனை அழைத்தான்…

“மன்னர் மன்னா…”

காத்தவராயன் திரும்பி பார்த்து”யார் நீ ” என்று கேட்டான்..

“கால பைரவரையும், காளி தேவியையும் வழிபடும் அகோரி நான்.தங்களை சந்தித்தது என் பாக்கியம்.தாங்கள் அதிமகாரதி இந்திரஜித் வம்சம் அல்லவா…”

“அது என்ன அதிமகாரதி..”காத்தவராயன் புரியாமல் கேட்டான்.

“கர்ணன்,அர்ஜூனன் ஏன் இராவணன்,கும்பகர்ணன் கூட மகாரதி தான் மன்னா…அதாவது ஒரே நேரத்தில் 14 லட்சம் வீரர்களை எதிர்த்து போராட கூடியவர்கள்..ஆனால் உலகத்தில் இதுவரை தோன்றியது ஒரேயொரு அதிமகாரதி தான்..அவன் தான் இந்திரஜித்..ஒரு அதிமகாரதி 8 மகாரதிகளுக்கு சமம் ஆனவன்..அவனின் மரபணு தற்பொழுது உங்களில் தேய்ந்து மங்கி போய் இருந்தாலும்,சில யாகங்கள் செய்து அந்த மரபணுவின் சக்தியை பல மடங்கு கூட்ட முடியும்..அதன் மூலம் தாங்கள் இளமையை பெறுவதோடு,இந்திரஜித்திடம் இருந்த அதே சக்தியை பெறலாம்..பிறகு உங்களை யாராலும் அழிக்க முடியாது…”என அவன் கூற காத்தவராயன் கண்கள் ஒளிர்விட்டது..

“என்ன யாகம் செய்ய வேண்டும்?சீக்கிரம் சொல்லு..தேவையானவற்றை உடனே ஏற்பாடு செய்கிறேன்..என காத்தவராயன் கேட்க..

“அதை உடனே செய்ய இயலாது மன்னா…தேவையான பொருள் இன்னும் உலகத்திற்கு வரவில்லை.. அகோரி பாபா யாகத்திற்கு தேவையான பொருளை பற்றி சொல்ல சொல்ல,அதை கேட்டு காத்தவராயனுக்கு தூக்கி வாரி போட்டது..