அசுரன் Part 2 74

“கெட்ட காலம் இன்னும் ஏழு நாட்களில் இந்த நாட்டிற்கு வரப்போகுது.இந்த நாட்டின் இளவரசி படுகோரமாய் மாயமலை நாட்டின் இளவரசனை கொன்றதால் அந்த நாட்டின் மன்னன் பழிதீர்க்க , விரைவில் இந்த நாட்டின் மீது படை எடுத்து வர போகிறான்.வெறி கொண்டு வரும் அவன் இந்த நாட்டின் மக்களை கொன்று குவித்து கோட்டையை சின்னாபின்னாமாக்கி ஒவ்வொரு உயிரையும் தேடி தேடி கொல்ல போகிறான்.உங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் உடனே அவன் நாட்டின் மீது படை எடுத்து அவனை வெற்றி கொள்ள வேண்டும்.இல்லையேல் உங்கள் நாடு அழிய போவது உறுதி” என கத்தி கொண்டே மயங்கி விழுந்தான்.

அனைவர் முகத்திலும் கவலை ரேகை படர்ந்தது.மன்னர் உடனே அமைச்சரவை கூட்ட ஏற்பாடு செய்தான்.காத்தவராயன் வந்த வேலை முடிந்தது என புரவியில் ஏறி தன் நாட்டை நோக்கி பறந்தான்.

அமைச்சரவை கூட்டத்தில் மன்னர் பேச தொடங்கினார்.

அமைச்சரே,இதுவரை வேலன் சொன்ன குறி எல்லாம் சரியாக பலித்து உள்ளதே…!இப்பொழுது வரவிருக்கும் ஆபத்தை எப்படி தடுப்பது? என மன்னர் கேட்டார்.

அது தான் எனக்கும் புரியவில்லை மன்னா,காத்தவராயன் மகன் உயிரோடு இருந்திருந்தால் அவனை முன் நிறுத்தி படையெடுத்து வர போகும் காத்தவராயன் கோபத்தை கொஞ்சமேனும் தணிக்கலாம்.அவன் வெல்வதற்கு எந்தவித மாயதந்திரங்களையும் தயங்காமல் செய்வான்.அவன் நாட்டிற்கு சென்று அவனை தாக்க நினைப்பது யமபுரிக்கே சென்று யமனை எதிர்ப்பதற்கு சமம்.
அவனை தடுக்க எனக்கும் வழி ஏதும் புலப்படவில்லை.

மதிவதனி உடனே,”எனக்கு உத்தரவிடுங்கள் தந்தையே,நான் சென்று யாரும் வெல்லாத அந்த மாயமலையை வென்று விட்டு வருகிறேன்.”

மன்னர் எது நடக்க கூடாதோ என்று நினைத்தாரோ அதுவே நடந்து கொண்டு இருப்பதை நினைத்து வருந்தினார்.மதிவதனி ஜாதகத்தில் தன்னை விட மூன்று மடங்கு வயது அதிகம் உள்ள நபரிடம் தான் கன்னி தன்மையை இழப்பாள் என்று ஜோசியர் கூறியது திரும்ப திரும்ப நினைவுக்கு வந்தது.தன்னையும் மீறி விதி விளையாடி கொண்டு இருப்பதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

மதி, நீ கொஞ்சம் அமைதியாக இரு,உன்னால் தான் இவ்வளவு பிரச்சினையும்.அமைச்சரே,நம் நாட்டின் பாதுகாப்புக்காக படையின் ஒரு பகுதியை மட்டும் காவலுக்கு வைத்து விட்டு மீதி மொத்த படையையும் கொண்டு மாயமலையை தாக்க சொல்லுங்கள்.கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைக்கும்.தளபதி வீரசேனன் தலைமையில் படைகள் அணிவகுத்து செல்லட்டும் என்று மன்னர் கட்டளை இட,

வீரசேனன் உடனே,”மன்னா தாங்கள் எந்த நாட்டிற்கு வேணுமானால் என்னை அனுப்புங்கள்.ஆனால் தயவுசெய்து மாயமலைக்கு மட்டும் அனுப்ப வேண்டாம்.அங்கு சென்றால் திரும்பி வரவே முடியாது.அதுவும் சிக்கினால் மற்ற மன்னர்களை போல் அல்லாமல் காத்தவராயன் கொடுக்கும் தண்டனை மிக கொடூரமாக இருக்கும்,என அவன் பின்வாங்கினான்.

அப்பொழுது ஒரு ஓலையை ஒற்றன் வந்து கொடுத்தான்.

என்ன இது? என்று மன்னர் கேட்க,

மன்னா,எதிரி நாட்டு மன்னன் காத்தவராயனிடம் இருந்து ஓலை வந்துள்ளது.

மன்னர் அதை பிரித்து படித்து பார்க்க,அவர் கண்கள் சிவந்தன.

என்ன மன்னா?ஓலையில் வந்த தகவல் தான் என்ன? தாங்கள் கோபம் அடைய காரணம் என்ன?

அமைச்சரே,காத்தவராயன் ஏற்கனவே நம் கோட்டையின் உள்ளே வந்து உளவறிந்து சென்று இருக்கிறான்.காலையில் நம் கோட்டையில் உள்ள ஆலயத்தில் பத்து,பதினைந்து வீரர்களிடம் சண்டையும் போட்டு மதிவதனியிடம் வியாபாரியாக நடித்து ஏமாற்றியும் இருக்கிறான்.ஒரு அந்நிய நாட்டு மன்னன் உள்ளே வந்து நோட்டம் விடும் வரை உங்கள் காவல் வீரர்கள் இந்த அளவு முட்டாள்களாக உள்ளார்களே ..! என கிண்டல் பண்ணி எழுதி உள்ளான்.விசயம் கைமீறி போய் விட்டது.அவன் எந்நேரமும் படை எடுத்து திரும்பி வர கூடும்.நானே படைகளுக்கு தலைமை தாங்கி அவன் நாட்டின் மீது போர் தொடுக்கிறேன் என்று மன்னர் சொல்ல

மதிவதனி கொதிப்படைந்து “வேண்டாம் பொறுங்கள் தந்தையே,எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.காத்தவராயன் மார்பை துளைக்கும் வித்தை என்னிடம் மட்டுமே உள்ளது.அவன் நாட்டை வென்று நான் திரும்புவது உறுதி “என்று கூறினாள்.