அசுரன் Part 2 74

“என் ஒருவனுக்கு மட்டுமே அங்கு அனுமதி தேவி,மேலும் அங்கு ஒரு வைர சுரங்கமே இருக்கிறது.அதில் நான் கொண்டு வந்த வைரத்தை விட இன்னும் உயர்தர வைரங்கள் கிடைக்கின்றன.ஆனால் அவர்கள் அந்த வைரங்களை வெளியில் விற்பது இல்லை.”

ஏன் ?என மதிவதனி கேட்க,

அந்த மாதிரி உயர்ந்த ஜாதி வைரங்களை அந்த நாட்டு மக்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டுமாம்.அதனால் இரண்டாம் தர வைரங்களை மட்டுமே விற்கிறார்கள்.யாராவது படை எடுத்து அந்நாட்டு மன்னனை வெற்றி கொண்டால் மட்டுமே அந்த வைரங்களை அடைய முடியும்.ஆனால் அந்நாட்டு மன்னன் காத்தவராயனை இதுவரை யாருமே வெற்றி கொண்டது இல்லை.

என்ன உளறுகிறாய் ? சிறிது நாட்களுக்கு முன் தான் அவன் படையை நான் வெற்றி கொண்டு அவன் மகனை கொன்றேன்.?தெரியாதா உனக்கு?

எனக்கு தெரியும் தேவி,ஆனால் இன்னும் அவன் நாடு காத்தவராயன் வசம் தானே உள்ளது.நீங்கள் அவன் இடத்தில் சென்று நாட்டை கைப்பற்றினால் தானே முழு வெற்றியாகும்.?மேலும் உங்களுக்கு காத்தவராயனை பற்றி தெரியவில்லை?அவன் மார்பில் போரில் ஏற்பட்ட காயங்களின் வடு மட்டும் 72.ஆனால் உங்கள் மேனியில் ஒரு காயம் ஏற்பட்டதற்கான ஒரு சிறு காயம் கூட இல்லை.அவன் தன் படையை முன் நின்று போர் செய்பவன்.ஆனால் தாங்கள் படைக்கு பின்னால் இருந்து பாதுகாப்பாக போர் செய்பவர் என கூறி அவள் தன்மானத்தை சீண்டினான்.

மதிவதனி முகம் கோபத்தால் சிவந்தது.

“என்ன வார்த்தை கூறினாய்?”என்று அவள் வாளை எடுக்க,

“பொறுங்கள் தேவி,நான் உண்மையை தானே சொன்னேன். ஒரு சாதாரண கிழட்டு வியாபாரி என்னிடம் உங்கள் வீரத்தை காட்ட வேண்டாம்.சென்று உங்கள் வீரத்தை அந்த காத்தவராயனிடம் காண்பித்து அவனை வெற்றி கொண்டால் என்னிடம் உள்ள மொத்த ரத்தினங்களை உங்களிடமே எந்த வித காசும் வாங்காமல் கொடுத்து விடுகிறேன்” என்று அவன் சொல்ல மதிவதனி அமைதி ஆனாள்.

“கூடிய விரைவில் அந்த காத்தவராயனை போரில் கொன்று விட்டு உன்னை சந்திக்கிறேன் வியாபாரி” என மதிவதனி கூற,

“சரி “என அவனும் விடை பெற்றான்.

அடுத்து காத்தவராயன் செய்த செயல் மதிவதனியை மாயமலையை நோக்கி படை எடுக்க செய்தது.அது என்ன?

நண்பர்களே,நேற்று ஒரு “நினைவோ ஒரு பறவை” போல ஒரு காதல்கதை கரு கிடைத்தது.உடனே எழுத வேண்டும் என்று என் மனதை உந்தி தள்ளியது.ஆனால் இந்த கதையை எழுத தொடங்கி விட்டபடியால் இதை விட்டு அதை எழுத தோன்றவில்லை.இந்த கதை முடித்த பிறகு அதை எழுத தொடங்க வேண்டும்.கதையின் பெயர் “உயிராக வந்த உறவே” என்று வைக்கலாம் என்று இருக்கிறேன்.நாயகி பெயர் தாரிணி.நாயகன் பெயர் சிவா.நினைவோ ஒரு பறவையில் வரும் ராஜா ,சஞ்சனா கேரக்டரை ஒரு guest ரோலாக பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

காத்தவராயன் அடுத்த திட்டத்தை செயல்படுத்தினான்.

மாலை தேவராட்டம் நாடகம் ஒன்று அரண்மனை திடலில் நடந்தது.அதை பார்க்க மக்களும்,மன்னரும்,இளவரசி மதிவதனியும் வந்து இருந்தனர்.
முதலில் முருகபெருமானின் புகழ் கூறும் குறவன் குறத்தி நாடகம் நடைபெற்றது.அதை எல்லோரும் ரசித்து பார்த்தனர்.முருகன் வந்து வள்ளியிடம் காதல் விளையாட்டு புரிந்தது,கவர்ந்து சென்றது,பின் வேடர்களிடம் நடத்திய திருவிளையாடல் எல்லாம் மேடையில் அரங்கேறியது.கடைசியில் வேலன் வந்து தேவராட்டம் ஆடும் நிகழ்ச்சி.காத்தவராயன் மாறுவேடத்தில் வந்து வேலனாக வந்து வெறியாட்டம் ஆடினான்.அவன் ஆடிய ஆட்டத்தை பார்த்து எல்லோரும் பயந்தனர்.கடைசியாக வேலனுக்கு ஆட்டின் இரத்தத்தை படையலாக படைப்பது வழக்கம்.அதை அவன் குடித்த பிறகு மக்கள் ஒவ்வொருவராக சென்று குறி கேட்பர்.வெறியாட்டம் ஆடிய பிறகு காத்தவராயன் இரத்தத்தை கேட்க,ஆட்டின் ரத்தம் அவனுக்கு கொடுக்கப்பட்டது.அதை வெறி கொண்டு அவன் மடக் மடக்கென்று‌ குடிப்பதை பார்த்து பாதி பேர் மயங்கினர்.மதிவதனிக்கு அதை பார்த்து வாந்தியே வந்து விட்டது.அவன் குடித்து முடித்து வெறி அடங்கி விகாரமாய் சிரித்தான்.

மக்கள் ஒவ்வொருவராய் வந்து குறி கேட்டு திருப்தியாக செல்ல,கடைசியாக அமைச்சரும் வந்தார்.நாட்டின் நலன் பற்றி கேட்க,அவன் ஆக்ரோஷமாய் சிரித்து கூற தொடங்கினான்.