வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் இரண்டு 84

மன்னிப்பு என்பது உன்மையானதாக இருக்க வேண்டும்! அப்போதைக்கு மன்னித்து விட்டு, பின், பல முறை சுட்டிக் காட்டுவது, தவறு செய்தவர்களுக்கு குற்ற உணர்ச்சியையும் போக்கி விடும், அப்படித்தான் செய்வேன், நீ யோக்கியமா போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி விடும்!

மாறாக, அதை முழுக்க மன்னித்து, மறந்து விடுவது, மறைமுகமாக, தவறு செய்தவர்களுக்கு, அவர்களது தவறை ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும்! இது வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான சூட்சுமம்!

இந்த சூட்சுமத்தை, நான் மிகச் சரியாக புரிந்து கொண்டேன், பிடித்துக் கொண்டேன்!

எல்லாவற்றுக்கும் மேல், என் ஹரீஸ், என் மேல் காட்டும் எல்லையற்ற அன்பைத் தவிர மிகப் பெரிய சந்தோஷம், வேறு என்ன எனக்கு இருக்கப் போகிறது?

நான் சரியாக நடந்து கொள்ளாதவளாக, எண்ணியிருந்த போதே, என் நலம் விரும்பிய, என்னை அமைதியாக திருத்த முயன்றவன், நான் தவறே செய்யாதவள் எனத் தெரியும் போது என்னை மகாராணியாகவே நடத்துவான்! அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்?

சுய மரியாதை பேசி, நல்ல வாழ்க்கையை இழப்பதுதான் புத்திசாலித்தனம் என்றால், விட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் அடையும் முட்டாளாகவே இருந்து விட்டுப் போகிறேன்!

எல்லாவற்றுக்கும் மேலாக, இதுவரை மற்றவர்களுக்கு அன்பை வழங்கியவளுக்கு, அள்ளி அள்ளி காதலை வழங்க, என் மணவாளன் காத்திருக்கும் போது, முடிந்து போன விஷயத்திற்க்காக ஏன் இந்த மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்?

என் மனம் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது! என் திருமண நாளில் இதைவிட மிகப்பெரிய பரிசு எதுவும் எனக்கு தேவைப்பட போவதில்லை! மீண்டும் ஹரீஸை முத்தமிட்டேன்! அவன் மார்பில் சாய்ந்திருந்த படியே சொன்னேன், ஹாப்பி வெட்டிங் டே!

அவன் விலகி என்னைப் பார்த்தான்.

தாங்ஸ்டா! ஹாப்பி அனிவர்சரி! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதை விட ஒரு பெஸ்ட் கிஃப்ட் எனக்கு என் வாழ்க்கைல எதுவும் இல்லை!

நான் அவனையே பார்த்தேன். நான், திருமண நாளில் இதை விட பெரிய கிஃப்ட் இருக்காது என்று நினைத்தால், அவன், வாழ்க்கைக்கே சேர்த்து யோசிக்கிறான்! நான் நினைத்த படியே, இனி அவன் எனக்காக வாழப்போகிறான். என் மகிழ்ச்சிக்காக யோசிக்கப் போகிறான். நான் பதிலுக்கு என்ன செய்யப் போகிறேன்???

பெண்ணை புரிந்து கொள்வது வேண்டுமானால் ஆணுக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், ஆணைப் புரிந்து கொள்வதெல்லாம் அவ்வளவு சிரமமில்லை! அதுவும் நல்ல பண்புகளோடு இருப்பவனுக்கு, மெனக்கெட வேண்டிய அவசியமேயில்லை! பெண் புத்திசாலியாக இருந்தால், அவனை எளிதில் தன் கைப்பிடிக்குள் கொண்டுவிடுவாள்.

ஆணுக்கு ஒரு சின்ன ஈகோ இருக்கும். அதை பதம் பார்க்காவிட்டால், அவன் சுத்தமாக ஈகோ பார்க்காமல், பெண்ணின் ஆளுகைக்குள் வந்து விடுவான்! ஓரிரு முறை, இது எனக்கு பிடிக்கவில்லை, இருந்தும் உங்களுக்காக ஒத்துக் கொள்கிறேன் என்றால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குப் பிடிக்காத விஷயங்கள், அவளைச் சுற்றி நடக்க விட மாட்டான்!

மாறாக, தொடர்ந்து நான் இப்படித்தான், எதுக்கு எனக்கு பிடிக்காததை செய்தாய் என்று பேசினால், ஆணின் ஈகோ வீறு கொண்டு விடும்! என்றாவது ஒரு நாள், எனக்காக என்ன கிழித்தாய் என்று திருப்பிக் கேட்கும்! பெண்ணின் விருப்பங்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவன் மனதில் ஏற்படாது!

சின்ன வயதிலிருந்து, அன்பு காட்ட யாரும் இல்லாமல், தனியே வளர்ந்த எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. அது, சுற்றியுள்ள மனிதர்களை கவனிப்பது! ஒரு முறை பெற்ற தாய், தந்தையிடமே ஏமாந்தது, என்னை விழிப்படைய வைத்தது. அது, மனோரீதியாக ஒவ்வொருவரையும் அலசிப் பார்க்கும் தன்மையை எனக்கு கொடுத்திருந்தது!

அந்தத் திறமைதான், தாத்தா, மதன், இப்பொழுது ஹரீஸ் ஆகியோரின் மீதான அளவற்ற அன்பை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.

எவ்வளவு கம்பீரமான, புத்திசாலியான பெண்ணும், தன் மனதுக்கு பிடித்தவனின் தோள் சாயும் போது, வெறும் பெண்ணாக, கொஞ்சம் குறும்பும், குழந்தைத்தனமும், செல்லம் கொஞ்சுபவளுமாக மாறி விடுவாள்!

எவ்வளவு அன்பை மற்றவர்களுக்கு வாரியிறைத்தாளும், தன் மணவாளனுடனான தனிமையில், அவள் ரிசீவிங் சைடில் இருக்க வேண்டும் என்றுதான் இருப்பாள்!

அதனாலேயே முடிவெடுத்தேன். நான் பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. நான் இயல்பாக இருந்தால் போதும்! ஹரீஸ், என் மேல் அளவற்றக் காதலைக் கொட்டப் போகிறான்!

அதை மகிழ்வாக அனுபவிக்கப் போகிறேன்! இது அவனை ஏமாற்றும் சூழ்ச்சியல்ல! அன்பைக் கொடுத்து, அன்பை வாங்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சாமர்த்தியம்! மியுச்சுவல் வின் வின்!

ஹரீஸையே பார்த்த படி ஏதேதோ நினைவுகளில் ஆழ்ந்த என்னை, ஹரீஸ்தான் உலுக்கினான்!

ஏய், என்னம்மா?

ப்ச்… ஒண்ணுமில்லை! சரி, கேட்கனும்னு நினைச்சே, உங்களுக்கு எல்லாம் எப்படித் தெரியும்? மதன் எப்ப மீட் பண்ணான் உங்களை?

ஹரீஸ், மதனுடன் நடந்ததை முழுதும் சொன்னான்!

பின் கடைசியாகச் சொன்னான், மதனுக்கு நாம ரெண்டு பேருமே கடமை பட்டிருக்கோம்மா! அவன் மட்டும் அன்னைக்கு உன்னை தடுத்திருக்காட்டி, இன்னிக்கு என்கிட்ட சொல்லியிருக்காட்டி….

7 Comments

  1. Rahi unaku than wait yen mail valavanmadhan gmail vantha pesu

  2. Entha kathai irukku Bor Vera kathai poodinga sex vendim

    1. Rahi commmnds paaru enta stroy iruku neriya

    2. Raji ma

    3. Raji unaku tha commmads reply pannu mail ku valavanmadhan at gmail y mail stroy anupuran

    4. Raji ma

Comments are closed.