வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் இரண்டு 89

அவன் என்னை இன்னும் இறுக்கி அணைத்தான்!

என்னமோ பெருசா சொன்ன, கல்யாணம் ஆன புதுசுல! இனிமே, நான் எப்பியும் சந்தோசமாத்தான் இருக்கனும்னு?! நான் இவ்ளோ வலியை, என்னிக்கும் அனுபவிச்சதில்லை தெரியுமா?

அவன் கைகள் என் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தது! அவன் உதடுகள், சாரிம்மா, ப்ளீஸ் மா என்று தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தது!

போடா! இப்ப எதுக்கு வந்த? போ! நான் அடிப்பதை நிறுத்தியிருந்தேன், என் கைகள் அவனை இறுக்கி அணைத்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பேச்சையும் நிறுத்தியிருந்தேன். எனது அழுகை, விசும்பல்களாக குறைந்திருந்தது! அவன் கைகள் இன்னமும் என் முதுகை தடவிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தன. அவன் இன்னும் சாரி சொல்லிக் கொண்டுதான் இருந்தான்.

திடீரென்றுதான் உணர்ந்தேன், எனது தோளில் விழுந்த துளி கண்ணீரை!

அவசரமாக விலகி, ஹரீசைப் பார்த்தேன். எவ்வளவு நேரம் அழுகிறானோ தெரியவில்லை, ஆனால், அவனது கண்களில் இருந்தும் கண்ணீர். நான் பயந்த மாதிரியே ஆயிற்று.

நான் அவனை மன்னித்தாலும், அவன் அவனை மன்னிக்க மாட்டான்! அவ்வளவு நல்லவன்!

ஹரீஸ்!

என்னை மன்னிச்சிடுவில்ல?

ஹரீஸ், அழாதீங்க ப்ளீஸ்! நான் பதறினேன்.

நீ…..நீ, என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு!

பெண்ணிடம், தன் தவறுக்காக, ஆண் விடும் கண்ணீருக்கு இணை எதுவும் இல்லை. அந்த அன்பு ஈடு இணையற்றது! அந்த அன்பை புரிந்து கொள்ளும் பெண் மிகுந்த புத்திசாலி.

அப்போதுதான் உணர்ந்தேன்! இது என் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகும் ஒரு முக்கிய தருணம் என்று. இப்போது, நான் எடுக்கும் முடிவு, நான் சொல்லும் என்னுடைய வார்த்தைகள், வாழ்நாள் முழுமைக்கும் வர வாய்ப்புண்டு!

நான் முடிவெடுத்தேன்! என் கண்களைத் துடைத்துக் கொண்டேன்! ஹரீஸை இழுத்து, என் மார்போடு அணைத்துக் கொண்டேன்! ஹரீஸீன் கண்ணீரைத் துடைத்து விட்டேன். என் கன்னத்தை அவனது தலை மேல் வைத்து, என் கையை, அவனது கன்னத்தில் வைத்து, அவனை இறுக்க அணைத்துக் கொண்டேன்!

ஹரீஸும், தாயின் மடி சேரும் குழந்தை போல், என்னிடம் சரண் புகுந்தான். அவன் கைகள் மீண்டும் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டன. நான் அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தேன்.

மெல்ல, அவன் தலைமேலாகவே என் முத்தங்களை வழங்கினேன். அவனது தலையைக் கோதிக் கொடுத்தேன். எனது செய்கைகள் அவனுக்கான ஆறுதலை மட்டும் தரவில்லை! அவனுக்கான செய்தியையும் தந்தது. நான் அவனை மன்னித்து விட்டேன் என்று!

அப்படியே நீண்ட நேரம் இருந்தோம். பின் ஹரீஸே விலகினான்! விலகியவன், என் கண்களையே பார்த்தான்!

எ… என்னை மன்னிச்சீட்டில்ல? இன்னமும் அவனிடத்தில் குற்றவுணர்ச்சி இருந்தது! அவன் குரல் நடுங்கியது.

மெல்ல பெருமூச்சு விட்டேன்! மெல்ல அவனது கன்னத்தை தொட்டேன்! ஹரீஸை நெருங்கினேன்! மன்னிப்புல்லாம் பெரிய வார்த்தைப்பா! நீங்களா தப்பு பண்ணீங்க? ம்? போதும் விடுங்க!

நீ, சொன்னதை நான் காது கொடுத்து கேக்கலியேம்மா! எனது வார்த்தைகள் அவனுக்கு ஆறுதலைத் தந்தாலும், குற்றம் செய்த மனது அவனை விடவில்லை!

நீங்க கேக்காதது எனக்கு வருத்தம்தான். அதுக்காக? நீங்க தப்பு பண்ணலியே? தகுதியில்லாதவங்க மேல அன்பை வெச்சீங்க, அவ்ளோதானே? ம்ம்? விடுங்கப்பா! இப்போது என் இரு கைகளும் ஹாரீஸீன் கன்னத்தை ஏந்தியிருந்தன. அவனது கை, என் கையைப் பற்றியது!

இப்பிடிப் பட்டவங்கன்னு கனவுல கூட நினைச்சுப் பாக்கலைம்மா! அவன் இன்னமும் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான்! எனக்கு சொல்வதை விட, அவனுக்கு அவனே, சொல்லிக் கொள்கிறான் போலும்! அவனுக்கும் இது அதிர்ச்சிதானே?! என் அன்னை, தந்தை பற்றிய உண்மை தெரிய வந்த போது, எனக்கு இருந்த அதிர்ச்சி இவனுக்கும் இருக்கும்தானே? இப்பொழுது இவனை சமாதானப்படுத்துவது மிக முக்கியம்!

மெல்ல அவனை அணைத்தேன்! விட்டுத் தாள்ளுங்க! அந்தத் தகுதி இல்லாதவங்களைப் பாத்தி பேசக் கூட இனி எனக்கு விருப்பமில்லை! உங்களேயே ஏமாத்த எப்புடி மனசு வந்துச்சு? நீங்களும் இனி அதைப் பத்தி பேச மட்டுமில்லை, நினைக்கக் கூட கூடாது! ஓகே?! இனி நம்ம வாழ்க்கைல எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கு! இதுவும் நல்லதுக்கேன்னு நினைச்சுக்கோங்க! ஓகே???

ஹரீஸ் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தான்! எனது வார்த்தைகள், அன்பு, மன்னிப்பு எல்லாம், அவனுக்கு பெரிய ஆறுதலைத் தந்தது! அவன், ஆவேசமடைந்தான். என்னை இறுக்கி அணைத்து, என் முகமெங்கும் முத்தங்களை வாரியிறைத்தான். முத்தங்களுக்கு நடுவே, தாங்ஸ்டா என்று சொன்னான்! பின், மிக அழுத்தமாக, என் உதட்டில் ஒரு முத்தம் வைத்தான்.

பின் என் கண்களைப் பார்த்துச் சொன்னான்! தாங்ஸ்டா! ஐ லவ் யூ சோ மச்! இட் மீன்ஸ் அ லாட்!

என் கண்களிலேயே மெல்லிய கண்ணீர் வந்தது! கண்களில் கண்ணீரும், உதட்டில் சிரிப்புடன் அவனையே பார்த்தேன்.

மீண்டும் என் கண்களில் கண்ணீரைப் பார்த்தவன் பதறினான்! ஹேய், என்று அதை துடைக்க வந்தான்!

அவனைத் தடுத்தேன். இது சந்தோஷம்! எனக்கு இது இருக்கட்டும்! விடுங்க என்றேன்! அவன் மீண்டும் என்னை இறுக்கத் தழுவிக் கொண்டான்! நான் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்த உச்சத்தில் இருந்தேன்.

இந்தத் தருணத்தில் வெளிப்படும் கண்ணீர்த்துளி சொல்லும் உணர்வுகள் ஓராயிரம்!

ஒரு சில கணவன், மனைவிகள் இது போன்றதொரு சூழ்நிலையைச் சந்திருப்பார்கள்! ஓரளவேனும் குற்ற உணர்ச்சி உள்ள, நல்ல தன்மை கொண்ட, ஆணையோ, பெண்ணையோ, அவர்கள் அறியாமல் செய்து வருந்தும் ஒரு பெருந்தவறுக்காக, அவர்கள் வருந்தும் சமயத்தில், வழங்கப்படும் மன்னிப்பும், ஆறுதலும், அவர்கள் மனதிற்குள் தங்களது துணைக்கு ஒரு தனி உயர்ந்த இடத்தைக் கொடுத்து விடும்!

அது முதல், அவர்கள், தங்கள் துணை சொல்வதை தட்ட மாட்டார்கள். அவர்களது முதன்மை நோக்கம், தனது துணையின் மகிழ்ச்சியாக மாறிவிடும்! அப்படி ஒரு தருணத்தில், மிகச் சரியாக செயல்படும், ஆணும், பெண்ணும், மிகுந்த புத்திசாலிகள்!

7 Comments

  1. Rahi unaku than wait yen mail valavanmadhan gmail vantha pesu

  2. Entha kathai irukku Bor Vera kathai poodinga sex vendim

    1. Rahi commmnds paaru enta stroy iruku neriya

    2. Raji ma

    3. Raji unaku tha commmads reply pannu mail ku valavanmadhan at gmail y mail stroy anupuran

    4. Raji ma

Comments are closed.