28 வயது அழகுப் புயல் – பாகம் 34 135

இதற்குள் ராஜ் சீனுவின் சட்டையை பிடித்து தூக்கி அவன் கண்ணத்தில் மீண்டும் ஒரு குத்து விட…. அவனுக்கு பொறி கலங்கியது. கடவாயிலிருந்து ரத்தம் வழிய…. நடுங்கிப்போனான். சாவை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது.

ராஜ் தன் ரூம் கார்னரில் இருந்த பாத்ரூமை காட்டிச் சொன்னான். முகம் கழுவிட்டு என்கூட வா

சீனுவுக்கு அவனிடம் கேள்வி கேட்க பயமாக இருந்தது. முகம் கழுவி வாயை கொப்பளிக்க…. ரத்தம் ஓடியது. கர்ச்சீப்பால் வாயை ஒற்றிக்கொண்டே வந்தான்.

பேசாம என் பின்னாடி வரணும்… என்று சொல்லிவிட்டு ராஜ் நடக்க… சீனு தலையை குனிந்துகொண்டு அவன் பின்னாலேயே நடந்தான். ராஜ் அவனை காரில் ஏற்றிக்கொண்டு போய் தனது ஆட்கள் இருக்கும் பேட்டைக்குள் நுழைந்தான். ஷர்மாவிடம் தள்ளிவிட்டான்.

என்னா ஸார் இவனும் அந்த அரவிந்த் மாதிரியா?

ம்… என் தங்கச்சிக்கே ரூட்டு விட்டிருக்கான். அவ மனசை கெடுத்திருக்கான். இனிமே அவ முகத்துலயே முழிக்கமாட்டேன். அவ வாழ்க்கைல குறுக்கிட மாட்டேன்னு சொல்றவரைக்கும் அடிங்க. அதுவரைக்கும் பட்டினி போடுங்க. கை கால் மட்டும் உடையாம பார்த்துக்கோங்க

ஸார் ஸார்… நான் நிஷாவை நல்லா பார்த்துக்கறேன் ஸார் அவங்களை சந்தோஷமா வச்சிப்பேன் ஸார்…. அவங்களும் என்ன விரும்புறாங்க ஸார் ப்ளீஸ் ஸார் ப்ளீஸ்

எவ்ளோ தைரியம் இருந்தா கல்யாணம் முடிஞ்சி கணவனோடு வாழ்ந்துக்கிட்டிருக்கிற என் தங்கச்சியை நீ நல்லா பார்த்துக்கறேன்னு சொல்லுவ

கண்ணன் சாரைவிட நான் நல்லா பார்த்துக்கறேன் ஸார். நிஷாவுக்காக என்னனாலும் பண்ணுவேன் ஸார்

என்னனாலும் பண்ணுவியா? அப்போ சாவு

ராஜ் சிகரெட்டை எறிந்துவிட்டு காருக்கு வந்தான். ஷர்மா ஓடி வந்தான். அண்ணாத்த… அந்த அரவிந்த், என்ன விட்டுடுங்க விட்டுடுங்கன்னு சொல்லி கெஞ்சுனான். இவன் மேடத்தை நல்லா பார்த்துக்கறேன்னு திரும்ப திரும்ப சொல்றான்?

அப்படி சொல்றதை நிறுத்துறவரைக்கும் அடிங்க

ஆபிஸ் போனதும் காமினி வேகமாக வந்தாள்.

ராஜ்! சீனுவை எங்க கூட்டிட்டுப் போன?

சீனுவை நாலு நாள் அர்ஜென்ட்டா ஆபிஸ் ட்ரிப் அனுப்பியிருக்கோம்னு அவன் வீட்டுல சொல்லிடு.

ராஜ்…!

எஸ். ஷர்மாகிட்டதான் விட்டுட்டு வந்திருக்கேன்

காமினிக்கு கண்கள் கலங்கின. பேச முடியாமல் நின்றாள்.அதிகம் பேசினால் அப்படி என்ன சீனு மேல அக்கறை என்று கேட்பான். ராஜ் தொடர்ந்தான்.

அவனுக்கு நிஷா வேணுமாம்

நிஷா வேணும்னு அவன் கேட்டானா? இல்ல சீனுதான் வேணும்னு நிஷா கேட்டாளா?

ராஜ் மெளனமாக இருந்தான்.

ராஜ் அன்னைக்கு உன் வீட்டுல நானே பார்த்தேன். நிஷாவே அவன் கைபிடிச்சி இழுத்து அவனை கட்டிப்பிடிச்சிக்கிட்டதை நானே நேர்ல பார்த்தேன்

ராஜ்க்கு அதிர்ச்சியாக இருந்தது. பேசவில்லை. நிலமை முற்றியிருக்கிறது. காமினிக்குகூட தெரிந்திருக்கிறது.

ஏன் என்கிட்ட சொல்லல?

14 Comments

  1. Superb bro..nalla kondu poringa..update next part soon bro..

  2. Apo seenu avalo thanah , nisha kooda sera mattanahh ?????

  3. Next part please

  4. Unbelievable. … very good moving story. ..Racks….

  5. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் விஷாலி அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதை நன்றாக இருக்கும் நல்ல முடிவை கொடுக்கும்

  6. கதை ஆசிரியருக்கு சீனு திருந்துவது போல் எழுதி விடாதீர்கள் நிஷாவே அவனை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு செய்துவிடுங்கள் அப்போதுதான் கதைக்கு நல்ல முடிவாக கிடைக்கும்

  7. Page wrongly uploaded.. Page 24, 25 story over lap aguthu

  8. Vanni and kameni has help to Seenu to nesha to get married and get comeben sex to Gayathri…

    1. Except Kamini let them do threesime with Seenu without marry Nisha.. Nisha has to suffer what she did.. I do not think Kamini will do anything against Raju…

  9. சார் கதை அற்புதம் தயவு செய்து நிஷாவை அல்லது காமினியை சீனுவோடு சேர்த்து வையுங்கள் அல்லது சீனு ராஜுக்கு போட்டியாக கோடிஸ்வரணக்கி சீனு காலீல் விழா வையுங்கள்.

    1. இதை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என தெரியவில்லை.. கதாசிரியர் மிகச்சிற்ப்பாக கொண்டு போகிறார்… பார்க்கலாம்….

Comments are closed.