விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த் டே 115

“நோ நோ! ஐ யாம் சீரியஸ்.. நீ என்னை கல்யாணம் செய்ஞ்சுக்கிறேன்னு மட்டும் சொல்லு, நான் எல்லா பொறுக்கி தனத்தையும் விட்டுட்டு.. நீ எது சொன்னாலும் கேட்க தயார்..உன்னை ராணி மாதிரி வச்சு பார்த்துக்குவேன்..” என்றான்.

சீரியஸாக தான் பேசுகிறான் என்று அறிந்த நான், “வேண்டாம் ராஜா.. இதெல்லாம் சரி வராது. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்குது.. அது மட்டுமில்லாமே உன் வயசு என்ன? என் வயசு என்ன?” என்றேன்.

“அது எல்லாம் பிரச்சினையே இல்லை. நீ சொன்னா நாம குழந்தையே பெத்துக்க வேணாம். உன்னோட குழந்தையையே என்னோட குழந்தையா நான் ஏத்துக்க தாயார். மத்த படி வயசு .. அது இதுன்னு எதைப்பத்தியும் எனக்கு கவலை இல்லை! பிகாஸ் ஐ லவ் யூ சோ மச்..” என்று என் உதட்டில் இச் என்று முத்தம் பதித்தான்.

“சரி நம்பரேன் நான்.. ஆனா இப்ப இல்லை.. உனக்கு இப்ப என்ன வயசு ஒரு 21 இல்ல 22? உனக்கு ஒரு 25 வயசு ஆகட்டும்.. அதுக்கு அப்புறமும் உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கனுமின்னு தோனிச்சுன்னா.. சொல்லு.. நான் பண்ணிக்கிறேன்..அது வரை பிரண்ட்ஸா இருப்போம்..” என்றேன்.

தினங்கள் மாதங்களாயின.. மாதங்கள் வருடங்கள் ஆயின…! நாங்கள் அதற்கு அப்புறம் கல்யாணத்தை பற்றி பேசவே இல்லை!

எங்கள் உறவு மட்டும் தொடர்ந்துக்கொண்டே இருந்தது!!

இன்று அவனுக்கு 25ஆவது பிறந்த நாள்! அவனுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ.. ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் அவன் என்னை கல்யாணம் செய்துக்கொள்ள அனுமதி கேட்டது மட்டும் என் உள்ளத்தில் ஆழ பதிந்து இருந்தது. மறக்க முடியுமா அந்த நாளை!

அதோ வருகிறான் ராஜாராமன்! நிஜமாகவே இத்தனை வருடங்களில் அவன் ராமனாகவே மாறி இருந்தான். என்னைத் தவர அவன் வேறு எந்த பெண்ணையும் ஏறிட்டு பார்த்ததில்லை. பெரும் பணக்காரனாக இருந்தாலும் சொந்தமாக வேலை செய்யவேண்டும் என்று நினைத்து இப்போது பெங்கலூரில் Oracleல் வேலை செய்து வருகிறான். எங்களுடைய சந்திப்புகளும் வெகுவாய் குறைந்து தான் போய் விட்டன.

அவன் அருகில் வந்ததும், “விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த் டே..” என்றேன். ரெஸ்டாரண்டில், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு என்னை இழுத்து அணைத்து என் உதடுகளில் முத்தம் இட்டவன், “என்னை கல்யாணம் பண்ணிக்கிறையா..?” என்று கேட்டான். நான் அவனது கண்களுக்குள் பார்த்த படியே, ‘ஆம்’ என்பது போல தலையை ஆட்ட, அவன் மீண்டும் என்னை முத்தம் இட்டான். என்னுடைய 8 வயதான ஒரே பெண் குழந்தை ஆச்சரியமாக எங்களைப் பார்த்துக்கொண்டு இருக்க, என் கையை நீட்டி அவளையும் எங்களுடன் சேர்த்து அணைத்துக்கொண்டேன். அவள் என் இடுப்பை கட்டிக்கொண்டாள். எனது குடும்பம் முழுமை பெற்றது. ஒரு நாள் அவளுக்கு எல்லாவற்றையும் எடுத்து சொன்னால், அவள் புரிந்துக்கொள்ள மாட்டாளா என்ன?

முற்றும்.

1 Comment

Comments are closed.