விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த் டே 116

திரும்பி வந்து பார்த்த போது என் கணவர் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் படுக்கவே பிடிக்கவில்லை. தரை ஒரு போர்வையை எடுத்து போட்டு படுத்துக்கொண்டேன். என் நெஞ்சில் துயரமும் துக்கமும் அடைத்துக்கொள்ள, நான் தூக்கம் வராமல் அழுதுக்கொண்டே இருந்தேன். “ச்சே! என்ன மனுஷன் இவர்? என்ன சொல் சொல்லிவிட்டார்..!” என்று நினைத்து நினைத்து மனம் புழுகினேன். எப்போது தூங்கினேன் என்றே தெரியாது.

“ஏய்! எழுதிரு..! நேரம் ஆவறது தெரியலை..” என்று என் கணவர் என்னை எழுப்பினார். என்னால் கண்களையே திறக்க முடியவில்லை. ஒரு வழியாக எழுந்து அறக்க பறக்க காலை வேலைகளை செய்தேன். தனக்கு பிறகு எழுந்து வந்ததிற்காக என் மாமியார் முகத்தை காலையிலேயே கருகரு என்று வைத்துக்கொண்டு இருந்தாள்.

கல்லூரிக்கு சென்று என் வண்டியை நிறுத்தினேன். வழக்கமாக நான் பதில் அளிக்கும், ‘குட்மானிங் மேடம்’ க்கு பதில் அளிக்காமல் நான் போய்க்கொண்டு இருந்தேன். தூரத்தில் ராஜாராமனும் அவனது வானர பட்டாளமும் தெரிந்தது.

“டேய் மச்சி.. நீ ஒன்னை கவனிச்சையா..” என்று பேச்சை எடுத்த ராஜாராமன், சட்டென்று நிறுத்தினான். அவனது முகத்தில் குழப்பம் தெரிந்தது. மேலே எதுவும் பேசாமல், அவன் என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். நான் மேலே நடந்து சென்றேன். ஆசிரியைகளின் ஓய்வு அறையை அடைந்தேன். அங்கே அலமேலு டீச்சர் இருந்தாள். அவள் என்னைப் பார்த்ததுமே பதறிப்போய், “ஏய்! ராணி! என்னாச்சு உனக்கு..? ஆர் யூ ஓகே? முகம் எல்லாம் சிவந்து வீங்கி போய் இருக்கு. கண்ணும் சிவந்து இருக்கு..! வாட் ஈஸ் த பிராபிளம்..!” என்று கேட்ட படியே என்னை மெதுவாக அணைத்துக்கொண்டாள்.

அது வரை யாரிடமும் சொல்லாமல், என் மனதிலேயே அடைத்து வைத்து புழுங்கிக்கொண்டு இருந்த எனக்கு அலமேலுவின் பதற்றமும் அணைப்பும், ஆதரவைத் தர, நான் அவள் தோளில் சாய்ந்துக்கொண்டு “ஓஓஓஓஓஓஓஓ..” என்று அழத்தொடங்கினேன். எதுவும் பேசாமல் என்னை சில நிமிடங்கள் அழ விட்ட அலமேலு, பின்னர், “ஏய் என்னாச்சு..! சொல்லு..” என்று கேட்டாள். நான் ஒரு வழியாக என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, என் கணவரிடம் நான் பேசியதையும், அவர் என்னை எப்படி இழிவு படுத்தினார் என்பதை சொல்லவும், அலமேலு அமைத்தியாக கேட்டுக்கொண்டு இருந்தாள்.

பின்னர், “இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான்! ஒரு பெண்ணோட மனசை ஒரு வார்த்தையில கொன்னுடுவானுங்க..! உங்கிட்ட நான் இது வரைக்கு சொன்னது இல்லை.. ஆனா இப்ப சொல்லறேன். உன் புருஷன் உன்னை வேசின்னு தானே சொன்னான். ஆனா என் புருஷன் இருக்கானே.. ஊர்ல தான் பெரிய மனுஷன்.. ஆனா வீட்டுக்குள்ளே ரொம்ப மோசம். தினமும் குடிச்சு வந்து என்னவெல்லாம் பண்ணுவான்..! அப்பப்பா..” என்ற அலமேலுவின் உடல் அவளையும் அறியாமல் சிலிர்த்துக்கொண்டது.

1 Comment

Comments are closed.