நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் End 27

போச்சு போச்சு எல்லாம் முடிந்தது என்று தோன்றியது, பெரிய ஆபத்தில் நான் இருக்கிறேன் என்பது விளங்கியது, கண்டிப்பாக நான் அவனுக்கு நான் கொலை செய்தது தெரிந்துவிட்டால் என் குடும்பத்தையே கொன்று புதைத்து விடுவான், பேசாமல் மனைவி, மகள் இருவரையும் வெளிநாடு அனுப்பிவிடுவோம், பிறகு வேணா நாம வேணா போய் அப்புறம் அவனை பார்க்கலாம் என்று யோசித்தேன், செரி என் மனைவி மகளிடம் என்ன காரணத்த சொல்வேன் என்று ஆயிரம் யோசனைகள்,

செரி என்ன ஆனால் என்ன, அவனை போய் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தேன், உண்மை கண்டிப்பாக தெரிய வாய்ப்பேயில்லை, அப்படி தெரிந்திருந்தால் அவன் வீட்டுக்கு தான் வந்திருப்பான், என்னை அழைக்க மாட்டான், எனவே கண்டிப்பாக ஒரு டவுட்டில் தான் கூப்பிடுகிறான் என்று முடிவு செய்தேன்,

கிளம்பினேன், அவன் வீட்டுக்கு போனேன், அங்கே யாரும் இல்லை, காவலாளி மட்டும் தான் இருந்தான், அவனுக்கு கால் செய்ய , ராஜா நான் உங்க வீட்டில் இருக்கிறேன் என்றேன், டாக்டர் மில்லுக்கு வாங்க என்றான், அது எங்கே என்றேன், பொள்ளாச்சி என்றான், ஒஹ் அங்கேயா, அட்ரஸ்ச security கிட்ட வாங்கிகொங்க என்றான், செரி என்றேன், பொள்ளாச்சி வரை போய் இருக்கிறான் என்றால், கண்டிப்பாக ஏதோ ஆபத்து இருக்கிறது என்று புரிந்துகொண்டேன், கிளினிக் சென்றேன், அங்கே போய் மூன்று kerchief முழுக்க chloroform ஊத்திக்கொண்டு, ஒரு polythene பையில் வைத்து கொண்டேன்,

2 மணிநேரத்தில் அங்கே சென்றடைந்தேன், அங்கே போனேன் பெரிய மில், அந்த மில்லை ஒட்டி ஒரு சின்ன வீடு நேராக அங்கே போனேன், ராஜா chairஇல் உட்கார, பவித்ரா அவள் பக்கம் இன்னொரு chair போட்டு உட்கார்ந்திருந்தாள், கூட ஒரே ஒருவன் தான் இருந்தான், கண்டிப்பாக அவன் driverஆக தான் இருக்க வேண்டும், வேறு யாருடனும் சொல்லி இருப்பான் என்று தோன்றவில்லை, நான் உள்ளே போக என்னை பார்த்ததும் பவித்ரா ஓடி வந்து என் கையை கோர்த்து நின்று கொண்டாள், என்னாச்சு என்று அவளை கேக்க, ஒன்னும் பதில் சொல்லவில்லை, நான் என்ன ராஜா இதெல்லாம் என்றேன், அவன் உட்கார்ந்த படியே நீங்க தான் சொல்லணும் என்றான்,

நான் என்ன சொல்றது, என்ன விஷயம்னு first நீங்க சொல்லுங்க என்றேன், செரி நேரா விசயத்துக்கு வர்றேன் முத்து எங்க என்றான், எனக்கு எப்படி தெரியும் என்றேன், வேணாம் டாக்டர் நான் மரியாதை குடுத்துட்டு இருக்கேன் கெடுத்துக்காதீங்க என்றான், அவன் உங்களை பாக்க வந்தது எனக்கு தெரியும், என்று அவன் டிரைவரை பார்க்க, அவன் தலை ஆட்ட, ஒஹ் இவன் தான் சொல்லி இருக்கிறான் என்று புரிந்துகொண்டேன், செரி இனி மறைப்பது ஆகாது என்று முடிவு செய்து, சொல்லலாம் என்றேன்,

அவன் யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தான் என்று புதிர் போட என்ன விஷயம் சொல்லுங்க என்று ஆர்வமாக கேட்டான், முத்துக்கும் அவன் மச்சானுக்கும் எய்ட்ஸ் வியாதி என்றேன், அவன் ஷாக்ஆகி கேட்டான், ஆமா night அவன் ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்து வந்து, என்னை காப்பாத்த முடியுமா பாத்து சொல்லுங்க டாக்டர் என்றான், நான் பாத்ததுல அவன் கடைசி கட்டத்தை நெருங்கிட்டான்னு தெருஞ்சிச்சு, இருந்தாலும் ஒரு நம்பிக்கைக்காக அவனை மெட்ராஸ்ல இருக்க ஒரு டாக்டரை போய் பாக்க சொன்னேன், அவன் சனிக்கிழமை அவன் மச்சானை கூட்டிட்டு பாக்கிறதா சொன்னான் என்றேன்.

பெருமூச்சு விட்டான், ஒரு டாக்டருக்கும் patientக்கும் நடந்த சந்திப்பு தான் இது, நாங்க என்ன பேங்க் கொள்ளை அடிக்கவா பிளான் போற்றுப்போன்னு நெனைக்கிறீங்க, கேட்டு இருந்தா சொல்லிருக்க போறேன், அதுக்குள்ள ஏன் இவ்ளோ பெரிய வேலை பண்ணி வெச்சிருக்கிங்க ராஜா என்று சிரித்தபடியே கேட்டேன், மன்னிச்சுருங்க டாக்டர் கொஞ்சம் அவசரபட்டுட்டேன் என்றான், செரி நான் கெளம்பட்டுமா என்றேன், டாக்டர் என்று அவன் கூப்பிட நான் என்ன என்று கேட்டேன், ஆமா அந்த பொண்ணு யாரு என்றான், பவித்ரா பக்கம் இருந்ததால் நான் அப்பறம் சொல்லுவதாக கண் அடித்தேன், அவன் புரிந்து கொண்டு செரிபோய்ட்டு வாங்க என்று சொல்லி சிரித்தான்.

பவித்ராவை கூட்டி கொண்டு வேகமாக காருக்கு சென்றேன், relax ஆகிக்கொண்டேன், நல்லவேளை தப்பித்தேன் என்றேன், இனி எந்த பிரச்சனையும் இருக்காதா என்றாள், இனிமே தான் எல்லா பிரச்சினையும் ஆரம்பிக்க போகுது என்று சொல்ல பயந்தாள், ஆனால் ஒன்று அவன் யோசிக்க தெரியாதவன், மூளை மழுங்கியவன் அவனை செரியாக குழப்பிவிட்டால் நாம தப்பித்து கொள்ளலாம் என்றேன்.

உணக்கொன்னும் ஆகலைல என்றேன், இல்லை ஆனா நீ வரல, எதாவது ஆயிருக்கும் என்றாள், கண்ணாலேயே என்னை திங்கற மாதிரி அப்படி பாக்கிறாணுக, பயந்து நடுங்கியே போய்ட்டேன், நான் கூட என்னை பழி வாங்க தான் இவனுகல கடத்த வெச்சுருக்கன்னு நெனச்சுட்டேன் என்றாள், அப்படி பண்ணா உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றேன், ஏதும் பேசாமல் அமைதியாக வந்தாள், என் மனதில் ஓடிக்கொண்டிருந்த விஷயம் என்னவென்றால், நான் சொன்ன பொய் எத்தனை நாள் தாங்கும் என்று தெரியாது, இனி பவித்ராவை அங்கே வைத்திருப்பது ஆபத்து என்று புரிந்தது, கண்டிப்பாக நான் வேறு எதாவது யோசிக்க வேண்டும்,

செரி பவித்ராவை நம்ம வீட்டிலேயே தங்க வைத்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன், என் மனைவி மகள் வெளியே போயிருந்த சமயம், அவளை மொட்டை மாடியில் இருக்கும் ரூமில் தங்கவைத்தேன், புது கவலையால் இரவு தூக்கமில்லை, காலை பொழுது விடிந்தது, பார்த்தால் அதிர்ச்சி என் வீட்டு சோபாவில் உட்கார்ந்து tea குடித்து கொண்டிருந்தான் ராஜா, அருகே என் மனைவி நின்று பேசிக்கொண்டு இருந்தாள்,

எனக்கு தூக்கி வாரி போட்டது, என்னை பார்த்ததும் ஏங்க உங்களை பாக்க தான் வந்திருக்காரு என்றாள், செரி நான் பாத்துக்கிறேன் நீ போமா என்று அனுப்பி வைத்தேன், நான் பேசும் முன்னாடியே அவன் பேச ஆரம்பித்தான், நான் உங்க பழைய கிளினிக் போட்டுதான் வரேன் அங்கே இருப்பீங்கன்னு நெனச்சேன் என்றான், நான் சிரித்தேன், அந்த புள்ள கூட அங்க இல்ல போல என்றான், ஆமா அவ கெளம்பிட்டா என்றேன், கொஞ்சம் தயங்கியபடி அது அந்த மாதிரி பொண்ணா என்றான், இல்லல்ல அது பயிற்சி மருத்துவர் என்றேன், ஒஹ் அப்படியா என்று சொல்லி சிரித்தான்.

டாக்டர் nightலாம் தூக்கம் இல்லை, ஒரே படபடப்பா பயமா இருக்கு என்றான், என்னடா
நான் சொல்லவேண்டியத இவன் சொல்லிட்டு இருக்கான் என்று நினைத்துக்கொண்டேன், சொல்லுங்க என்றேன், முத்துவும் நானும் சேர்ந்து தான் இருப்போம் என்றான், எனக்கு விளங்கல புரியற மாதிரி சொல்லுங்க என்றேன், அவன் கூச்சப்பட்டபடியே முத்து தான் அந்த மாதிரி பொண்ணுங்கள கூட்டிட்டு வருவான், நானும் அவனும் தான்…. என்று இழுத்தான் எனக்கு புரிந்தது, செரி மேல சொல்லுங்க என்றேன், இப்போ அவனுக்கு எய்ட்ஸ் இருக்குனா எனக்கும் இருக்குமோன்னு பயமா இருக்கு டாக்டர் என்றான், எனக்கு உள்ளுக்குள்ளே செரியான சிரிப்பு.

சிரிப்பை அடக்கிக்கொண்டு ஒஹ் நீங்க அப்படி சொல்ல வரீங்களா, நான் ஒரு டாக்டரை refer பன்றேன் என்றேன், டாக்டர் வேணாம் யாருக்கும் தெரியவேணாம், நீங்களே எல்லா டெஸ்டடும் எடுத்து பாத்துட்டு சொல்லுங்க என்றான், ஆனா என் ஒடம்புக்கு இதுவரை ஏதும் வந்தது இல்லை என்றான், உங்க எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கவரை ஏதும் பண்ணாது, அது குறைஞ்சா தான் வேலையை காட்டும் என்றேன்.

அவனுக்கு ஒன்றும் இருக்காது என்று எனக்கு தெரியும், இருந்தாலும் சும்மா அவன் ரத்தத்தை சிரிஞ்சில் எடுத்து கொண்டேன், டெஸ்ட் வர்ற ரெண்டு நாள் ஆகும் என்றேன், டாக்டர் உடனே தெரியாதா என்றான், உடனே தெரியணும்னா ஊட்டில டெஸ்ட் எடுத்துக்கலாம் ஆனா உங்களை பத்தி சொல்ல வேண்டி வரும் என்றேன், வேணாம் வேணாம் என்றான் செரி அப்போ நான் கோயம்புத்தூர் அனுப்பனும், வநத ஒடனே நானே வந்து பாக்றேன், நீங்க இங்கே வர்ற வேணாம் என்று சொல்லிவிட்டேன், அவனும் ஒரு பயத்துடனே கிளம்பினான்,

அவன் போன பிறகு என் மனைவி வந்து என்ன என்று கேட்டாள், ஏதோ வியாதியாம் test எடுக்க வந்தாரு என்றேன், செரி என்று அவள் உள்ளே போனாள். நான் கொஞ்சம் relax ஆனேன்..

என் மனைவி கிளீன் செய்கிறேன் பேர்வழி என்று, மேல் ரூம் வரை போய்விட்டாள், நான் உடனே போய் கதவு முன்னால் நின்று கொண்டேன், நல்ல வேலை கதவை திறக்க முயற்சிக்க வில்லை, அப்பறம் செய்து கொள்ளலாம் என்று என் மனைவியை அனுப்பி விட்டேன், முதலில் பவித்ராவை இங்கே வைத்திருப்பது நல்லது இல்லை என்று தோன்றியது, அவள் இங்கே இருப்பதால் என்னால் வெளியே கூட போகமுடியவில்லை, வெளியும் தங்கவைக்க முடியாது,

3 Comments

  1. Admin mannichidunga raam story 12 cont..

  2. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் நெக்ஸ்ட் பார்ட் எப்போ அட்மின்

  3. Crime and father stroy not sex story

Comments are closed.