விக்கி பொண்ணு அழகாவும் உனக்கு பிடிச்ச மாதிரி இருந்தா கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிடுடா என்றான் அவன் டாக்டர் நண்பன் .டேய் எனக்கு அதாலம் ஒத்து வராதுடா என்றான் விக்கி .ஏண்டா இன்னும் நீ பழச மறக்கலையா என்றான் .
மறந்துரக்கூடாதுன்னு தான் கல்யாணம் வேணாம்ன்னு நினைக்கிறேன் என்றான் விக்கி வருத்ததோடு .டேய் எல்லா பொண்ணுகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டங்கடா அதனால நம்ம ஊரல நடந்தத மறக்கிரதுதான் நல்லது உனக்கு என்றான்
சரிடா எங்க அப்பா இன்னும் உன்கிட்டதான் செக்ஆப் க்கு வராரா என கேட்டான் விக்கி .ஆமாடா போன வாரம் கூட உங்க அப்பாவும் உன் தம்பியும் வந்தாங்க அதலாம் உங்க அப்பா நார்மலாதான் இருக்காரு என்றான் .
சரி என் விசயம் எதுவும் அவர்கிட்டே உளறி கொட்டிடாத என்றான் .டேய் நான் டாக்டர்டா ரகசியத்த எப்படி பாதுகாக்குறதுன்னு நல்லாவே தெரியும் எனக்கு நீ மட்டும் இனிமேல ஆச்சும் செப்டியோட பண்ணு என்றான் .
சரிடா என்று அவன் போனை வைக்கவும் .
மணி உள்ளே வந்தான் .என்னடா பிஸியா என்றான் .இல்ல சும்மா ஊர்ல ஒரு பிரண்ட் கிட்ட பேசிகிட்டு இருந்தேன் என்றான் .
அப்புறம் என்ன எதுவும் புதுசா என்றான் மணி .ஐயோ இந்த ஓட்ட வாயனுக்கு ஏதும் தெரிஞ்சுடுச்சா வந்து புதுசு கிதுசு கிரான் என்று யோசித்தான் .
இல்லடா எதுவும் புதுசு இல்ல அதே மாதரித்தான் என்றான் விக்கி .ம்ம் எனக்குதாண்டா இப்ப எல்லாமே புதுசா இருக்கு என்றான் மணி .என்னது என்று பயத்தோடு கேட்டான் .அதாண்டா வள்ளி கர்ப்பமா இருக்கதால எல்லாமே புதுசா இருக்கு என்றான் .
அந்த கர்ப்பம் என்ற வார்த்தையை கேட்டதும் விக்கிக்கு வயற்றை கலக்கியது போல இருந்தது . அவ கர்ப்பமா இருக்கதால புதுசா எனக்கு பொறுப்பு வந்தா மாதிரி இருக்கு.
வீட்ல குழந்தை வர போறதால இன்னும் நிறைய உழைக்கனும் போல இருக்கு என்று உற்சாகத்தோடு சொல்லி கொண்டு இருந்தான் மணி .
ஆனால் இந்த கர்ப்பம் ,குழந்தை போன்ற வார்த்தைகளை கேக்க கேக்க விக்கிக்கு அப்படியே இதயம் படக் படக் என்று அவனை அறியாமல் ஒரு பயத்தில் அடித்தது .அதனால் அவன் மணி பேசுவதற்கு வெறும் ம்ம் மட்டும் போட்டு கொண்டு இருந்தான் .
அவளுக்கு இப்ப ஆறவாது மாசம் ம்ம் இதே நம்ம ஊரா இருந்தா அவளுக்கு அடுத்த மாசம் கிராண்டா சொந்தகாரங்களோட வளைகாப்பு கொண்டாடி இருக்கலாம் அது மட்டும்தான் அவளுக்கும் எனக்கும் வருத்தமா இருக்கு என்றான் .
ஐயோ இவன் கிட்ட யாராச்சும் என்னயே காப்பாத்துங்களே என்று அவன் நினைத்த போது
விக்கியை தேடி பியூன் வந்தான் .அப்படா என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் விக்கி .ஆனால் பியூன் சார் உங்கள தேடி சுவாதின்னு ஒரு மேடம் வந்து இருக்காங்க என்றான் .அதை கேட்டதும் இதுக்கு இவன் கிட்டவே இருந்து இருக்கலாம் என்று நினைத்தான் .
