அதைக் கேட்டு, எனக்கு அந்த இருவரின் மேலும் நம்பிக்கையும், அன்பும் கூடியது. என்னைச் சரியாக லாவண்யா கணித்திருந்ததும், கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள், என்னிடம் அப்படி பேசியதும் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. ஏனோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதிற்குள் எழுந்தது.
வேண்டுமென்றே அன்று அவள் கிளம்பும் சமயத்தில் அவளைச் சீண்டினேன்.
நேத்து நான் சாப்ட்டுட்டேன். இப்ப, இது என் சொத்துதான? இப்ப நான் நினைச்சா உன்னை வர வேண்டாம்னு சொல்ல முடியுமில்ல என்று நக்கலாகக் கேட்டேன்…
இதுவரை தானாக பேசாத நான், அன்று பேசியது, அதுவும் வெறுமனே சீண்டலுக்காகத்தான் நான் பேசுகிறேன் என்று தெரிந்த என் அக்காவும், மிகவும் ஆச்சரியமாகி நின்றாள்.
சில நொடிகள் திகைத்த லாவண்யாவும், பின் சொன்னாள்.
சட்டம் தெரியாதா உனக்கு! சட்டப்படி, நீ இன்னும் மைனர். அதுனால டெசிஷன்லாம் நீ எடுக்க முடியாது தெரிஞ்சுதா. மேஜர் ஆன பின்னாடி, சொல்லு பாத்துக்கலாம்… என்று அவளும் சீண்டி விட்டுச் சென்றதைப் பார்த்து, என் அக்காவிற்கு இன்னும் ஆச்சரியமானது.
ஆனால், அவள் சென்றதையே பார்த்துக் கொண்டிருந்த என் உதடுகளில் பல நாட்கள் கழித்து ஒரு புன்னகை குடி வந்தது!
அதன் பின், நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், அவளது செயல்களை அவளையறியாமல் கவனிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவள் என்னுள் நிரம்ப ஆரம்பித்தாள். அடுத்து வந்த சின்னச் சின்ன நிகழ்ச்சிகளிலெல்லாம், அவளுடைய செயல்கள் எனக்குள் சின்னச் சின்ன சலனங்களை ஏற்படுத்தின. தினமும் அவளுடைய வருகையை நான் எதிர் நோக்க ஆரம்பித்திருந்தேன்.
நான் +2வில் எடுத்த மார்க்குக்கு வாழ்த்து சொன்னாள். அவளும், என் அக்காவும் படிக்கும் கல்லூரியில் சேரும் என் முடிவுக்கு மகிழ்ச்சியடைந்தாள். நான் அவளுடைய கல்லூரியை தேர்வு செய்ததற்கு அவளும் ஒரு காரணம்.
அவள் மேலான என் காதல் வலுப் பெறுவதற்கு மிக முக்கிய சம்பவம் அப்பொழுது மீண்டும் நிகழ்ந்தது.
நான் +2 முடித்து விட்டு என்னச் செய்யப் போகிறேன் என்று சொல்லி, இரண்டு நாட்கள் கழித்து…
அன்று தாத்தா ஏனோ மகிழ்ச்சியாக இருந்தார். என் அப்பாவும், அம்மாவும் ஏதோ அலுவலக விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்கள். அடுத்த இரு நாட்கள், வார இறுதி.
தாத்தா, என்னையும், என் அக்காவையும் கூப்பிட்டார். லாவண்யா சமயங்களில், அக்காவுடன் தங்கி விடுவாள். அன்று அவளும் இருந்தாள்.
தாத்தா கொஞ்சம் பீடிகையுடன் ஆரம்பித்தார். எனக்கு இத்தனை நாளா கவலையா இருந்துச்சு. எனக்கு அப்புறம், உங்களுக்குன்னு யாரு இருக்கான்னு! ஆனா, உன் அக்கா வந்தப்பவே பாதி கவலை தீந்துருச்சு. ரெண்டு பேரும், ஒருத்தருக்கொருத்தர் இருக்கீங்கன்னு. மீதி கவலையும் கூட நேத்து தீந்துடுச்சு!
How to submit the story on this site? help me