கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48 25

பத்து, பனிரெண்டு குடும்பங்கள், அவர் வயதையொத்த நண்பர்கள், தங்கள் குடும்பத்தினருடன் சிறிய டெம்போ ட்ராவலரை ஏற்பாடு செய்து கொண்டு, மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று சென்னையைச் சுற்றியிருக்கும் வைஷ்ணவ தலங்களுக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

“வந்துட்டேன்ண்ணா.. டேய் சீனூ… பிளாஸ்க்ல காஃபி போட்டு வெச்சிருக்கேன்… தோசை மாவு இருக்கு… மொளகா பொடி இருக்கு… டிஃபனுக்கு ரெண்டு தோசையை ஊத்திக்கடா…” உஷா வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தாள்.

சீனு, மீனாவின் இடுப்பில் தன் கையைப் போட்டவாறு, கொடைக்கானலில் உல்லாசமாக சுற்றியலையும்போது, அவனைத் தட்டி எழுப்பி, அவனுடைய இனிமையான விடியல் நேரத்து இன்பக்கனவை கலைத்துவிட்ட அத்தையின் மேல் அவனுக்கு தாங்க முடியாத எரிச்சல் கிளம்பியது.

“ஒரு செட் சாவியை எடுத்துக்கிட்டீங்கள்லா…?” தெருவில் இறங்கி நடந்தவர்களிடம் கூவினான், சீனு.

“இருக்குடா…” ராகவன் தலையை ஆட்டிக்கொண்டே நடந்தார். தெரு முனையில் அவர்களுக்காக டிராவலர் காத்துக்கொண்டிருந்தது.

தெருக்கதவை தாழிட்டுக்கொண்டு வந்த சீனு மீண்டும் ஹாலில் சோஃபாவில் நீளமாகப் படுத்துக்கொண்டான். உஷா அவனை முதுகில் ஓங்கி அறைந்து எழுப்பிய போது, சீனு தன் இளம் மனைவி மீனாவுடன் தேன்நிலவிற்காக, ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்தான். ஊட்டியில் ரெண்டு நாட்களை கழித்தப்பின் அங்கிருந்தே மைசூர் போகவும் அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.

சோஃபாவில் படுத்துக்கொண்டு, பாதியில் விட்ட இடத்திலிருந்து தன் கனவைத் தொடங்க நினைத்த சீனுவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மீண்டும் கனவு வருவேனா என முரண்டு பிடித்தது. கனவுதான் வரலே. தூக்கமாவது வந்து தொலைக்கக்கூடாதா? அவன் தன் கண்ணை இறுக மூடிக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தான். தூக்கமும் வந்தபாடில்லை.

விடியற்காலையில கண்ட கனவு பலிக்கும்ன்னு சொல்லுவாங்களே. கனவுல, மீனாவும் நானும் ஹனிமூனுக்கு போயிருந்தோம்ன்னா, மீனா வீட்டுல எந்தப் பிரச்சனையும் எழாம, எங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுப் போச்சுன்னுதானே அர்த்தம். இதை நினைக்கும் போதே அவனுக்கு மனசெல்லாம் இனித்தது. இன்னைக்கு மீனாவைப் போய் பாத்துட்டு வரலாமா?

சீனுவுக்கு எழுந்திருக்கவும் மனம் வரவில்லை. சோஃபாவில் படுத்தபடியே ரிமோட்டை எடுத்து டீ.வி.யை ஆன் செய்தான். ஒரு சேனல் பாக்கியில்லாமல், எல்லாச் சேனல்களிலும், கழுத்தில் கொட்டையைக் கட்டிகொண்டு, பட்டையடித்து இருந்தவர்கள், நெற்றியில் நாமத்தை சூட்டியிருந்தவர்கள், பச்சை, ஆரஞ்சு, கருப்பு, நீலம் என வித விதமான வண்ணங்களில், இடுப்பில் வேட்டி அணிந்தவர்கள், வெள்ளை, கருப்பு, ஸ்படிகம், என கழுத்தில் மணிமாலைகளை அணிந்து கொண்டு, தங்கள் ஞானப்பழங்களிலிருந்து, பக்தி ரசத்தை பிழிந்து எடுத்து, பக்தகோடிகளின் இக பர நல்வாழ்க்கைக்காக, ஆறாக வெள்ளமாக, ஓடவிட்டுக்கொண்டிருந்தார்கள். கேள்விகளை அவர்களே கேட்டு, பதிலையும் அவர்களே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

சில சேனல்களில் வயதானவர்கள், ஆண் பெண் என்ற வித்தியாசமே இல்லாமல், ஒரு பெரிய பந்தலின் கீழ், தனித் தனியாக பிளாஸ்டிக் பாய், அதன் மேல் பெட்ஷீட் விரித்துக்கொண்டு, பெரிய பெரிய தொப்பைகளுடன் ஆண்களும், நடப்பதற்கே சிரமப்படும் பிருஷ்டம் பெருத்த பெண்களும், கும்பலாக நின்றும், கிடந்தும், ஓடிக்கொண்டும், குதித்துக்கொண்டும், யோகா என்ற பெயரில் தங்கள் உடம்பை வருத்திக்கொண்டிருந்தார்கள்.

சை.. என்னக் வேடிக்கைடா இது…? நொந்துகொண்டான் சீனு. இந்த சேனல்களை பாக்கற கோமாளிங்ககூட நாட்டுல இருக்கானுங்களா..? சீனு வியப்படைந்தான். கையிலிருந்த ரிமோட்டை எதிரிலிருந்த டீபாயின் மேல் வீசியெறிந்தான். வெறுப்புடன் எழுந்து டீ.வியை அணைத்தான்.

வாயைக்கொப்பளித்துக் கொண்டு, டைனிங் டேபிளின் ஓரத்தில், பளபளக்கும் பிளாஸ்கில் நிறைக்கப் பட்டிருந்த ஆவி பறக்கும், பில்டர் காஃபியை, ஒரு சில்வர் டம்ளர் நிறைய ஊற்றிக்கொண்டு, வெராண்டாவிற்கு வந்தான். குளிர்ந்த காற்று முகத்தில் வேகமாக வந்து அடிக்க மனசுக்குள் ஒரு நிம்மதி படருவதை உணர்ந்தான். நீளமாக காற்றை நெஞ்சுக்குள் இழுத்து வெளியேற்றினான்.

மீனாவின் சிரித்த முகம் அவன் கண்ணில் வந்து நின்றது. மீனா தூங்கி எழுந்துட்டு இருப்பாளா… ஒரு வாரமாச்சு அவளைப் பாத்து… வெளியில வர்றியாடீன்னு கூப்பிட்டுப் பாக்கலாமா? இனிமே பீச்சுக்கு வரமாட்டேன்னு தீத்து சொல்லிட்டா.. சினிமாவுக்கு வருவாளா? அங்கே இருட்டாத்தானே இருக்கும்…? சீனு.. உனக்கு மண்டையில களிமண்ணுடா.. பரிட்சைக்கு படிச்சுக்கிட்டு இருக்கறவ வெளியில உன் கூட வருவாளா?

போன வாரம் எவ்வளவு ஜாலியா இருந்திச்சி.. அவ வீட்டுக்குப் போய் மீனாவை கூப்பிட்டதும், ஒரு கேள்வி கேக்காம செல்வா அவளை என் கூட அனுப்பி வெச்சான். அதே மாதிரி அவளோட அம்மா அனுப்பி வெப்பாங்களா?
ஆயிரம்தான் இருந்தாலும் என் நண்பன் செல்வா.. செல்வாதான்.. செல்வா ஜிந்தாபாத்.. செல்வா ஜிந்தாபாத்.. சீனுவின் மனம் அவனுக்கு நன்றி சொல்லியது.

சே.. பாவம் படிக்கறவளை எதுக்காக தொந்தரவு பண்ணணும்..? மீனாவை பார்க்க அவன் மனம் துடித்தது. செல்வாவை போய் பாக்கற சாக்குல, தோட்டத்துல, கூடத்துல, இல்லே மாடியிலேன்னு மீனாவை எங்கேயாவது அவ வீட்டுலேயே மடக்கி, சட்டுன்னு கட்டிப்புடிச்சி, சின்னதா ஒரு கிஸ் அடிச்சுட்டு, அவகிட்டேருந்து ஒரு கிஸ் வாங்கிட்டு வந்துடலாமா?

மீனாவின் வலுவான தேகமும், அவள் அங்கங்களின் மென்மையும், குழந்தைத்தனமான அவள் விழிகளின் வெளுப்பும், கருமையும், கூந்தல் வாசனையும், அவளுடைய உடலின் மென்மையான சந்தன வாசனையும் அவனை அமைதியாக இருக்கவிடவில்லை.

சுகன்யா ஊர்லேருந்து வந்துட்டா.. கம்மினாட்டி செல்வா அவளை தள்ளிக்கிட்டு அவ பின்னால எங்கேயாவது சுத்தப் போயிடுவான்.. இன்னைக்கு எப்படி பொழுதை ஓட்டறது… சீனு தன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தான். வீட்டுலதான் யாரும் இல்லே… சரி.. வேலாயுதத்தை கூப்பிடலாமா? சீனுவுக்கு சட்டென அவன் ஞாபகம் வந்தது.

வேலாயுதத்தை நினைத்தவுடன் அவன் கை அரித்தது. மனதுக்குள் ஒரு ஏக்கம் வேகமாக எழுந்து உடலெங்கும் ஒரு நமைச்சல் எடுத்தது.. ஒரு மாசமாச்சு.. கட்டிங் வுட்டு.. இந்த எண்ணம் மனதில் வந்த அடுத்த நொடி கடந்த சண்டே அன்று மீனா தன் வீட்டிலிருந்தே, தன் செல்லில், வேலாயுதத்துக்கு லாடம் கட்டிய சீன் அவன் ஞாபகத்துக்கு வந்தது…

1 Comment

  1. கதையில‌, கதை அதிகமாகவும் காமம் கம்மியாவும் இருக்கு but நல்லாதான் போய்க் கிட்டுருக்கு.
    இடையில் ஒரு நாலு நாள் கேப் விட்டுட்டீங்க.continue a எழுதுங்க.
    வாழ்த்துக்கள்.

Comments are closed.