கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48 19

“டேய் சீனு.. நான் உங்கிட்ட சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன்.. உன் கொழையடிக்கற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே… அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்…” மல்லிகா சிரிக்க ஆரம்பித்தாள்.. அவளால் அதற்கு மேல் சீனுவின் மேல் கோபமாக இருப்பதைப் போல் நடிக்க முடியவில்லை.

“பசிக்குதும்மா…” சீனு தன் ட்ராக்கை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

“சீனூ… உனக்கு இன்னைக்கு ஆஃபீஸ் லீவுதானே… உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா… உனக்கு இல்லாத டிஃபனா? டிஃபன்ல்லாம் நான் பண்ணித்தர்றேன்.. சீக்கிரம் வாடா..” மல்லிகாவின் குரலில் மிதமிஞ்சியப் பாசம் எட்டிப்பார்த்தது.

“எம்மா… ஒண்ணு ரெண்டுன்னு எண்ணிகிட்டே இருங்க… தோம்ம்மா… குளிச்சிட்டு பதினைஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்…” சீனு பாத்ரூமை நோக்கி தன் கால்கள் தரையில் பாவாமல் ஓடினான்.

மீனாவுக்குப் பிடித்த அடர்த்தியான நீல நிற ஜீன்சையும், வெள்ளை நிற காட்டன் சட்டையையும், அணிந்து கொண்டான் சீனு. போட்டிருந்த பனியனும், அதன் மேல் தொங்கும் மெல்லிய செயினும் சட்டை வழியாக வெளியில் தெரிந்தன.

கைகளை முறுக்கி,
“மீனா உன்கிட்ட விழுந்ததுலே என்னடா ஆச்சரியம்… கட்டாத்தான்டா வெச்சிருக்கே நீ உன் பாடியை’ கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்த சீனு தன் உடலழகை ஒரு வினாடி மெய் மறந்து ரசித்தான். மனசுக்குள் சிறிய கர்வம் சட்டென எழுந்தது.

வெளியில் அடித்துக்கொண்டிருந்த புழுதிக்காற்றையும், மூடிக்கொண்டிருக்கும் வானத்தையும் நோக்கிய சீனுவின் மனதில்
“மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே’ மனசுக்குள் பாட்டு ஒலிக்கத் தொடங்க பாடி ஸ்ப்ரேயை அடித்துக்கொண்டான்.

பைக்ல போனா மூஞ்சி பூரா மண்ணு அடிக்கும்… வண்டி ஓட்டற மூடே கெட்டுப் போயிடும்… ம்ம்ம்.. கார்லே போயிடலாமா… ஒரு வினாடி யோசனைக்குப் பின் தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிவப்பு நிற ஐ-டென்னை கிளப்பி தெருவில் நிறுத்தியவன், வீட்டுக்கதவை பூட்டிக்கொண்டு, பூட்டை ஒரு முறை இழுத்துப்பார்த்தான்.

காரை வேகமாகக் கிளப்பி பறந்தவன் சுந்தரம் அய்யர் மெஸ்ஸுக்கு முன்னாடி நின்றான். அரை டஜன் மெது வடை சட்னி, சாம்பர் பேக் பண்ணிக்கொண்டான். மீனா… டார்லிங்க்… உனக்குப் பிடிச்ச மெதுவடையோட உன் மாமன் வந்துட்டேன்டீச் செல்லம்… மீண்டும் காரில் உட்கார்ந்து சீறிப்பறந்தான் சீனு.

அவனுடைய வருகைக்காகவே காத்திருப்பதுபோல் மல்லிகா, நடராஜன், செல்வா, அனைவரும் ஹாலில் உட்க்கார்ந்திருந்தனர்.
“வெளியிலே கிளம்பற மாதிரி தெரியுது?’ கையிலிருந்த வடைப்பார்சலை டீபாயின் மேல் வைத்தான். நடராஜனையும், மல்லிகாவையும் ஒரு முறைப்பார்த்தான்.

‘அம்மா… என் மேல கோவமாம்மா… நீங்களே என் மேல கோச்சிக்கிட்டா நான் எங்கம்மா போவேன்…?”

தன்னுடைய முதல் பிட்டைப் போட்டுக்கொண்டே, மல்லிகாவின் காலடியில் தரையில் உட்க்கார்ந்துகொண்டு அவள் மடியில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டான். அவள் தாய்மை அந்தத் தருணத்தில் விழித்தது. தன் வலது கையால், சீனுவின் தலையை வருடிக்கொண்டே, வலது கையால் அவன் முதுகில் பொய்யாக அடித்தாள்.

“இந்த சினிமா டயலாக்கெல்லாம் என் கிட்ட வேணாம்… உன்னைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்…” மல்லிகா தன் முகத்தில் கோபத்தை கொண்டு வர முயற்சி செய்து முற்றிலுமாக சீனு தன் மீது வைத்திருக்கும் பாசத்தின் முன் தோற்றுப்போனாள்.

“என்னைப்பத்தி உங்களுக்குத் தெரியும்ன்னா… அப்புறம் எதுக்கு…” வார்த்தையை முடிக்காமல், தன் தலையை நிமிர்த்தி மல்லிகாவின் முகத்தைப் பார்த்தான். நடராஜன் முகத்தில் சிறிய புன்முறுவலுடன் அங்கு நடக்கும் டிராமாவைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“எழுந்திருடா…”

“என்னம்மா..?”

“எழுந்திருடான்னா…”

“ம்ம்ம்…” முனகிக்கொண்டே எழுந்தான் சீனு.

“இப்படி சோஃபாவுல உக்காரு…” தன்னருகில் உக்கார்ந்த சீனுவின் தோளில் ஆசையுடன் தன் கையைப் போட்டுக்கொண்டாள்.. அவன் முகத்தைப் பாசம் பொங்கப் பார்த்தாள்.

“அம்மா… மீனா மாதிரி ஒரு நல்லப் பொண்ணை, அதுவும் என்னை ஆசைப்படற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருக்கலாம்ன்னு நினைச்சேம்ம்மா… அது தப்பாம்ம்மா..”

சீனு தன்னுடைய அடுத்தப் பிட்டை எடுத்து அழகாக வீசினான். அவன் எதிர்பார்த்தபடியே அந்த பிட்டும் தன் வேலையைச் சரியாக செய்தது. மல்லிகா உதடுகளால் எதுவும் பேசமுடியாமல் அவன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நடராஜனும் வாயைத் திறக்காமல் மனதுக்குள் நெகிழ்ந்து கொண்டிருந்தார். மீனா தன் அறையிலிருந்து வெளியில் வந்து தன் தந்தையின் பக்கத்தில் நின்றாள்.

“மீனா இப்படி வாயேன்.. அம்மா, அப்பா, நீங்க ரெண்டு பேரும் எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்களேன்..” சீனு சட்டென எழுந்து, மீனாவின் வலது கையைப்பிடித்தான். மீனாவும் அவனும் ஒருவரை ஒருவர் நெருங்கி நின்று அவர்கள் முன் குனிந்தார்கள்.

1 Comment

  1. கதையில‌, கதை அதிகமாகவும் காமம் கம்மியாவும் இருக்கு but நல்லாதான் போய்க் கிட்டுருக்கு.
    இடையில் ஒரு நாலு நாள் கேப் விட்டுட்டீங்க.continue a எழுதுங்க.
    வாழ்த்துக்கள்.

Comments are closed.