கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48 19

“அவளுக்குத்தான் புத்தியில்லே.. சின்னப்பொண்ணு… உங்கிட்ட எதையாவது அர்த்தமில்லாத உளறினான்னா… நீ என்னடாப் பண்ணியிருக்கணும்? எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல்லியா? அவளை கண்டிச்சு இருப்பேன்ல்லா… உனக்கு எங்கடாப் போச்சு புத்தி…?”

“அம்ம்மா… மீனாவைத் திட்டாதீங்கம்மா… அவ பாவம்ம்மா…”

“என் பொண்ணை திட்டு… திட்டாதேன்னு சொல்றதுக்கு நீ யாருடா?”

“என் மனசுக்குள்ள எனக்கேத் தெரியாம அவ மேல ஒரு ஆசையிருந்திருக்கும்மா… அதான் நானும் சரீன்னு சொல்லிட்டேன்…”

“ஆசை… தோசை.. நீ இங்க வாடா மொதல்லே.. உன் தோலை உரிக்கணும்ண்டா?”

“அம்மா.. நான் நேர்லேயே வந்து உங்கக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடறேம்ம்மா… இப்போதைக்கு அப்பாகிட்ட மட்டும் இந்த விஷயத்தைப் போட்டுக் குடுத்திடாதீங்கம்மா” சீனு குரலில் நடுக்கத்துடன் பேசினான்.

“எந்த அப்பாகிட்ட சொல்ல வேணாம்…?” போலியான கோபத்தைக்காட்டினாள், மல்லிகா.

“நீங்க என் அம்மான்னா.. மிஸ்டர் நடராஜன் என் அப்பாதானேம்மா?” தூண்டிலில் கொழுத்தப் புழுவை குத்தி, அதை வளைத்துப் போட்டான் சீனு…

“ஏன்டா… எப்போதுலேந்துடா நீ என் புருஷனுக்கு மிஸ்டர் போட ஆரம்பிச்சிருக்கே?” தன் புருஷனை சீனு அப்பாவென அழைத்ததும், மல்லிகாவுக்கு உச்சி குளிர்ந்து போனது.

“அம்ம்மா… எது சொன்னாலும் இப்படீ நீங்க என்னை கேட்டு போட்டு மடக்கினா நான் என்னாப் பண்ணுவேம்மா… நீங்களே சொல்லுங்கம்மா?” சீனுவின் குரல் கரகரப்பாக வந்தது.

“ஏன்டீ அவனை சும்மா கலாய்க்கறே… நீ? சட்டுன்னு அவனை கிளம்பி வரச்சொல்லுடி… எனக்கு நேரமாவுது… நான் கிளம்பணும்…”

நடராஜன் மல்லிகாவின் பக்கத்திலிருந்து பேசியது, சீனுவுக்கு தெளிவாகக் கேட்டதும்… அவனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்து. மல்லிகா தன்னை கலாய்த்துக்கொண்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்ததும், அவனுக்கு போன மூச்சு திரும்பி வந்தது.

மல்லிகாம்மா பேசறதைக் கேட்டு நான் ரொம்பவே பயந்து போயிட்டேனே? செல்வாவோட அப்பா நார்மலாத்தானே பேசறார்! அப்படீன்னா என் காதலுக்கு அங்கேயும் கீரின் சிக்னல்தானா? தன் உதட்டை மடித்து நீளமாக தன் மனசுக்குள்
“விஷ்” ஷென நீளமாக ஒரு விசில் அடித்தான், சீனு.

மீனாதான் லவ்வை மொதல்லே சொன்னான்னு அனாவசியமா அம்மாக்கிட்ட அவளைப் போட்டுக்குடுத்துட்டேனே… என்னை நம்பி என் கையைப் புடிச்சவளை அவசரப்பட்டு மாட்டிவுட்டுட்டேனா? இந்த மேட்டர் அந்த குட்டி பிசாசுக்கு தெரிஞ்சா என்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவாளே… சை.. என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்.. பக்கத்துல இப்ப அவளும்தானே இருப்பா..?

அம்மா பவுலிங்கை முடிச்சதும்.. பொண்ணு ஆரம்பிப்பாளா…? சரி நடக்கறதெல்லாம்… நல்லதுக்குத்தான் நடக்குது… தலைக்கு வருதுன்னு நினைச்சேன்.. ஆனா தலைப்பாவோட போயிடிச்சி… மீனாகிட்டவும் ஒரு கும்பிடு போட்டுட வேண்டியதுதான்…

‘சனி பகவான்’ ஆரம்பத்துல தொந்தரவு பண்ணுவான்… ரொம்பவே சோதிப்பான்… ஆனா கடைசீல எப்பவும் நல்லதைத்தான் பண்ணுவான்னு பெரியவங்க சொல்லி கேட்டிருக்கேன்… என் விஷயத்துல இது கரெக்டா இருக்குதே…

இப்பவே நேரா போய் ஆசீர்வாதம் பண்ணுங்கம்மான்னு மல்லிகாம்மா கால்லே விழுந்துட வேண்டியதுதான்… இதைவிட்டா எனக்கு ஒரு நல்ல சான்ஸேக் கிடைக்காது…

டேய் சீனு… பைத்தியக்காரா.. இன்னும் அம்மா என்னடா அம்மா…
“அத்தே’ன்னு உறவைச் சொல்லி கூப்புடுடா… அவங்க வீட்டுல நுழையும் போதே அத்தேன்னு கூப்பிட்டுக்கிட்டே மாப்பிள்ள மாதிரி உரிமையா நுழைடா… சீனு குதூகலமானான்.

“அம்மா.. டிஃபன் கிஃபன் பண்ணீட்டிங்களா? இல்லே வர்ற வழியிலே எதாவது புடிச்சிக்கிட்டு வரவா? சீனு தன் வழக்கமான பாணியில் மல்லிகாவிடம் குழையடிக்க ஆரம்பித்தான்.

“டேய்… என்னடா சொல்றே?”

“லீவு நாள்லே.. நீங்க காலையில கிச்சனை ஒட்டடை அடிச்சி… நல்லாத் தொட்சி… தரையெல்லாம் க்ளீன் பண்ணுவீங்க… டிஃபன் வெளியிலேருந்துதானே வாங்கிட்டு வருவான் செல்வா.. அதான் கேட்டேன்..” அந்த வீட்டின் நடைமுறையெல்லாம் தெரிந்த அவன் மனதுக்குள் மகிழ்ச்சியுடன் குழைந்தான்.

1 Comment

  1. கதையில‌, கதை அதிகமாகவும் காமம் கம்மியாவும் இருக்கு but நல்லாதான் போய்க் கிட்டுருக்கு.
    இடையில் ஒரு நாலு நாள் கேப் விட்டுட்டீங்க.continue a எழுதுங்க.
    வாழ்த்துக்கள்.

Comments are closed.