கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 3 15

சுகன்யா, தன் மூக்கு விடைக்க விம்மிக்கொண்டு வெளி வரத்துடித்த அழுகையை நெஞ்சுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, கேண்டீனிலிருந்து திரும்பி பார்க்காமல் விறுவிறுவென வேகமாக நடந்து சீட்டை அடைந்த போது சாவித்திரியும், மற்றவர்களும் அவரவர் வேலையில் மும்மரமாக மூழ்கி இருந்தார்கள்.
“சுகன்யா, உனக்கு ஏன் அழுகை வருது? உன் மனபலம் இவ்வளவு தானா? இது வரைக்கும் உன் காதல்ங்கற வண்டி சீராக ஓடிக்கிட்டு இருந்தது; செல்வாவோட இடமாற்றம் உன் கட்டுப்பாட்டுக்கு அப்பால இருக்கிற ஒண்ணு; திடீர்ன்னு நீங்க ரெண்டு பேருமே எதிர்பார்க்காத இந்த சின்னத் திருப்பத்தால், செல்வா வர திங்க கிழமைக்குள்ள புது இடத்துல போய்ச் சேர்ந்தாகணும்; உன் தரப்புலேருந்து இதுக்கு நீ என்ன செய்ய முடியும், அதை மட்டும் யோசி”.

“சாவித்திரியைப் பாத்து நீ ஏன் துவண்டு போறே? அவ போடற திட்டத்துல ஜெயிச்சு, செல்வாவை உன் கிட்ட இருந்து பிடுங்கிடுவாளோன்ற பயம் உனக்கு இப்பவே வந்துடுச்சு, உன் காதல் மேல உனக்கு நம்பிக்கையில்லயா? செல்வா உன்னை முழுமனசோட காதலிக்கிறானா? அவன் கடைசி வரைக்கும் உன் கூட வருவானான்னு நீ காலைல சந்தேகப்பட்டுட்ட; நீ என்ன சொன்னாலும் உண்மை இதுதானே? சந்தேகத்துலயும், பயத்துலயும் இருக்கற ஒருத்தரால காதல்ல எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?

“சுகன்யா, உன் கிட்ட இருக்கற அழகை வெச்சு முதல்ல இறுக்கமா அவனை உன் இடுப்புல முடி போட்டுக்கோ; முதல்ல பரஸ்பர உடல் கவர்ச்சியிலதான் எல்லா காதலும் ஆரம்பிக்குது; அப்புறம் உன் பாசத்தால, அன்பால, மனசால, அவனை கட்டி நிறுத்து. இப்போதைக்கு அவன் உன்னையும், உன் முந்தானையையும் தானே புடிச்சுக்கிட்டு சுத்தறான், இப்ப அவனே சோர்ந்து போய் இருக்கான்; சோர்ந்து போய் இருக்கறவனை நீயே உன் வார்த்தையால குத்தினா எப்படி?”
“சாவித்திரியும், செல்வாவின் அம்மாவும் சேர்ந்து அவனுக்கு வேப்பில அடிச்சுட்டா என்ன பண்றதுன்ற பயத்துல நீ அவனை வெட்டுவேன்னு சொன்னது நிச்சயமா அவனுக்கு கோபத்தை உண்டாக்கியிருக்காது, மாறா நீ அவனை சந்தேகபடற விதத்துல பேசினது அவன் கோபத்தை கிளறியிருக்கலாம்”.
“ஒரு விதத்துல நீ பேசினதும் சரிதான். நீ அவன் காதலி, அந்த உரிமையில பேசிட்ட, இவளை விட்டுட்டு சுலபமா ஓடிட முடியாதுன்னு, கொஞ்சம் மனசுல அவனுக்கும் பயம் வந்திருக்கும், உன் மனசுல வந்த பயத்தை செல்வாகிட்ட கொஞ்சம் மிருதுவாக நேரம் பாத்து சொல்லியிருக்கலாம்; பேசினது பேசியாச்சு.”
“ நீ தான் அவன் கிட்ட சாரி சொல்லிட்ட, ஈவினிங், அவனை பாக்கும் போது இன்னொரு தரம் சாரின்னு சொல்லிடு, இனிமே யோசிக்காம பேசாதே; அவ்வளதான், இப்ப உன் வேலையை கவனி, ஆபீஸ் வேலைல உன்னை குறை சொல்லற மாதிரி சாவித்திரிக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காதே, இது ரொம்ப முக்கியம்”. சுகன்யா, தன் மனதுடன் வாக்கு வாதம் நடத்தி சற்றே தெளிவடைந்தாள். கிடுகிடுவென அன்று அக்கவுண்ட்ஸ்க்கு அனுப்ப வேண்டிய பேப்பர்களை தயார் செய்து, எடுக்க வேண்டிய நகல்களை எடுத்து ஒரு முறை சரி பார்த்தாள். லஞ்சுக்கும் போகாமல் அவள் விடுமுறையில் சென்ற போது, அவளுக்கு மார்க் பண்ணப்பட்ட விஷயங்களுக்கும் குறிப்பெழுதி, கோப்புகளை சரஸ்வதியின் டேபிளில் தானே கொண்டு போய் வைத்துவிட்டு நிமிர்ந்தபோது மணி மதியம் மூணு ஆகியிருந்தது.
“சீக்கிரம் வாடிம்மா, வேலை கொஞ்சம் ஜாஸ்தின்னு சொன்னேன்; உண்மைதான்; அதுக்காக சாப்பிடாமக் கூட நீ இந்த ஆபீசுக்கு உழைக்க வேண்டாண்டி; உனக்கு இளம் ரத்தம்; எல்லாத்தையும் நீ சீரியஸா எடுத்துக்கறே! இங்க யார் வேலை செய்யறா, யார் ஒப்புக்கு மாரடிக்கறா, எல்லாம் நேக்குத் தெரியுண்டி”, சாவித்திரி அந்த நேரத்தில் உண்மையான கரிசனத்துடன் சொன்னாள்.
“தேங்க்யூ மேடம் … காலைல டீ டயம்ல்ல செல்வா, ரெண்டு வடை ஆசையா வாங்கிக் கொடுத்தார், சாப்பிட்டேன், அதுவே நெஞ்சை கரிச்சுது, வேலையை முடிச்சுட்டு நிதானமா சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்” உதட்டை சுழித்து இயல்பாக சொல்லுவது போல் சொல்லிக்கொண்டே அவளை ஆழம் பார்த்தாள். சாவித்திரியின் முகம் சட்டென இருண்டது. காலையில இவ எரிச்சல் மூட்டி உன்னை அழவெச்சா. உன் காதல் விவகாரத்தை சாவித்திரி ஆபீஸ்ல்ல போட்டு உடைச்சுட்டா, உன்னை அவன் கூட இவளே ஜோடி சேத்துட்டா! உன் காதலை ரகசியமா வெக்கறதுல இனி எந்த பிரயோசனமும் இல்லை. செல்வாவின் இட மாறுதலை உன்னால இப்போதைக்கு நிறுத்த முடியாது. ஆனா செல்வாகிட்ட உனக்கு இருக்கற உரிமையை இவளுக்கு காட்ட முடியுமே! செல்வாவை இங்க கூப்பிடு. உங்க நெருக்கத்தை இவளுக்கும் உன் செக்ஷனுக்கும் கோடி காட்டு. நாளைக்கு உன் கூட வேலை செய்யற இவங்க உன் பக்கம் நிப்பாங்க.
“சுகன்யா…,” முகத்துல எரிச்சலையோ, கோபத்தையோ காட்டாதே. நீ இவளை இவ வழியிலே போய் மடக்கு. முள்ளை முள்ளால மெதுவா எடுடி. குத்தின இடத்துலயும் வலிக்கக் கூடாது, முள்ளு முனையும் உடையக்கூடாது. சாவித்திரி ஒரு காயை நகர்த்தி உன்னை மடக்கியிருக்கா. உன் காயை நீ நிதானமாக நகர்த்து. அவள் உள் மனம் பேசியது. செல்லை எடுத்து செல்வாவின் நம்பரை அழுத்தினாள்.
“செல்வா, சுகன்யா பேசறேன் … என்ன பண்றே?” அவன் பேரை அழுத்தி உரிமையுடன் சாவித்திரிக்கு கேட்கும்படி சொன்னாள்.
“என்ன வேணும் உங்களுக்கு” செல்வாவின் பேச்சில் மரியாதை கூடியிருந்தது – முதல் முறையாக அவளிடம் போசுவது போல் பேசினான். குழந்தை ரொம்ப கோபமா இருக்கு அதான் நீங்க… வாங்க போடுது … சுகன்யாவின் உதடுகளில் முறுவல் விரிந்தது.
“நீ என் செக்ஷனுக்கு கொஞ்சம் வரயா” … சுகன்யா வேண்டுமென்றே
“நீயில்” அழுத்தம் கொடுத்தவள், இன்னைக்கு எலுமிச்சம் சாதம் செய்தேன், உனக்கும் சேத்து கொண்டுக்கிட்டு வந்தேன் … உனக்குத்தான் லெமன் ரைஸ் பிடிக்குமே … ரெண்டு ஸ்பூன் எடுத்துக்கயேன்” சொல்லிக் கொண்டே தன் டிஃபன் பாக்ஸைத் திறந்தாள். எலுமிச்சை வாசம் கம கமவென ரூமை நிறைத்தது.
“நான் சாப்பிட்டுட்டேன் … இப்ப கொஞ்சம் பிஸி … நீங்க சாப்பிடுங்க பிளீஸ்” அவன் மனதில் கோபம் இன்னும் தணியவில்லை.
“ரெண்டு நிமிஷம் எனக்காக கீழ வரக்கூடாதா … அவ்வளவு பிஸியா” கேட்டவாறே களிப்புடன் சிரித்த சுகன்யா, சாவித்திரியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்க்க, அவள் முகம் லேசாக நிறமிழந்து கொண்டிருந்தது.
“லுக் சுகன்யா, நீங்க எந்த உரிமையில இப்படி என்னை வா… போன்னு … பேசிகிட்டு இருக்கிறீங்கன்னு எனக்கு புரியல” அம்மாவிடம் கோபம் கொண்ட ஒரு சின்னக் குழந்தையைப் போல் இன்னும் அவளிடம் முறுக்கிக்கொண்டிருந்தான் அவன்.
“செல்வா”… தன் குரலைத் தாழ்த்திக் கொண்ட சுகன்யா பேசினாள், –
“பீச்சுல நாலு பேர் பாக்கறதை கூட சட்டை பண்ணாம, உன் மடியில என்னை போட்டுகிட்டு, எந்த உரிமையில என் மூஞ்சி பூரா முத்தம் கொடுத்தியோ, அந்த உரிமையில நான் உங்கிட்ட பேசறேன் … இப்ப நீ வரயா … இல்ல நான் உன் ரூமுக்கு வரவா” புன்னகை தவழும் முகத்துடன் செல்லை கட் பண்ணினாள்.
“வணக்கம் மேடம்” சுகன்யாவின் ஹாலில் நுழைந்த செல்வா சாவித்திரியை விஷ் செய்து கொண்டே சுகன்யாவை நோக்கி நடந்தான். செல்வாவை பார்த்த சுகன்யாவின் நெஞ்சு விம்மியது. இவன் என் பேச்சைக் கேக்கறவன், இவன் எனக்கு சொந்தம், இவனை யாரும் எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது.
“ம்ம்ம்… எப்பா செல்வா, உனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் ஆபீசுல கிடைச்சிருக்கா, வீட்டுல இருந்து கலந்த சாதம் பண்ணிக் கொண்டாந்து உன்னை கூப்பிட்டு குடுக்கற … அவளை மாதிரி ஒரு பொண்டாட்டியும் உனக்கு கூடிய சீக்கிரமே வரட்டும்பா … நல்ல மனசோட சொல்றேன், தப்பா எடுத்துக்காதே”, சொன்ன சாவித்திரியின் முகம் இறுகியிருந்தது.