கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 3 15

ஆபீசில் நுழைந்து பயோமெட்ரிக்கில் தன் வருகையை பதிவு செய்துவிட்டு, சொன்னாளே தவிர, செல்வா சொல்ல வந்த மேட்டர் என்னவாக இருக்கும், அவள் உள்ளம் அலை பாய்ந்து அவனை உடனே பார்க்க மனம் விழைந்து, அவன் ஹாலை நோக்கி நடந்தாள்…இல்லை ஓடினாள்; இருக்கை காலியாக இருக்கவே, தன் கேபினில் வந்து உட்கார்ந்து, வேகமாக நடந்து வந்ததால் வியர்த்த தன் பின் கழுத்தையும் முகத்தையும் அழுத்தி துடைத்துக் கொண்டாள். நெத்திப் பொட்டை சரியாக ஒட்டிக்கொண்டாள். அவளுக்கு லேசாக மூச்சிறைத்தது.

“ஏண்டிப் பொண்ணே, ஒரு முழுங்கு தூத்தம் குடிச்சுக்கோடி, வெயில்ல ஓடி வராய், இனிமே நீ ஜோடியா, அஷ்டலட்சுமி கோயில்ல அம்பாளை பாக்கறதோ, அங்க பீச்சுல நின்னு காத்து வாங்கிட்டே மொளகா பஜ்ஜி திண்ணறதோ முடியாதுடியம்மா,” சாவித்திரியின், குரலில் கொஞ்சம் கிண்டலும், மிகுதியாக விஷமமும் தொனித்தது, அவள் சுகன்யாவுடைய சீனியர், அந்த பிரிவின் சூப்பர்வைசர், வருடத்தின் முடிவில் அவளுடைய நன்னடத்தை மற்றும் அலுவலக செயல்பாடுகளைப் பற்றிய இரகசிய குறிப்பு எழுதப் போகிறவள். சுகன்யாவின் பணி நிரந்தரம் அவள் எழுதும் அறிக்கையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அந்த அலுவலகத்தின் முதல் மூன்று ஃப்ளோர்களின் வம்பு சங்கத்தின் எதிர்ப்பில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தர தலைவி, குண்டு மாமி என வயது வித்தியாசமில்லாமல் எல்லோராலும் அன்பாக விளிக்கப்படுபவள்.
“நீங்க என்ன சொல்றீங்க மேடம், எனக்கு ஒன்னும் புரியல” இவளுக்கு வேற யாரும் ஆள் கிடைக்கலயா இன்னைக்கு, என் தலையை போட்டு உருட்டறாளே, திகைப்புடன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“அப்படி போடு அருவாள, சும்மா படம் காட்டாதடியம்மா, உன் வயசுல நேக்கு ரெண்டு குட்டிகளாக்கும், நீ யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுண்டு இருக்கே, அவனும் தேமேன்னு உன் துப்பட்டாவை புடிச்சுண்டு உன் பின்னால சுத்திண்டுருந்தான், உங்க ஜோடி பொருத்தம் வேற நன்னா இருக்கு, சின்னஞ்சிறுசுங்க நீங்க சிரிச்சு பேசிட்டுருந்தேள், யார் கண்ணு பட்டுதோ, அந்த கிழ கோட்டான், உன் ஆளை பாண்டிசேரிக்கு ராத்திரியோட ராத்திரியா தூக்கி அடிச்சுப்ட்டான்?” சாவித்திரி நீட்டி முழக்கியதில், சுகன்யாவுக்கு செல்வாவின் மாற்றல் உத்தரவினால் அவள் உள்ளூர மிக்க சந்தோஷத்தில் இருப்பது போல் தோன்றியது.
“சீக்கிரமா வந்து சேருடியம்மா, வேலை தலைக்கு மேல கிடக்கு, இப்ப நேரா அவனை தேடிக்கிட்டுப் போயிடாதே” சுகன்யா பாட்டிலை எடுத்துக்கொண்டு வாட்டர் டிஸ்பென்சரை நோக்கி சென்ற போது, சாவித்திரி அவள் முதுகுக்கு பின்னால் குரல் கொடுத்தாள். சுகன்யாவின் மனதில் லேசாக கோபம் தலையெடுக்க தொடங்கியது. முழுவிவரம் தெரியாமல் இவளிடம் பேசக்கூடாது, அவள் தன் பல்லைக் அழுத்திக் கடித்துக்கொண்டாள். சீட்டுக்குத் திரும்பி வரும் போது, செல்வாவை அவன் செல்லில் கூப்பிட்ட போது, அவன் தொடர்பு எல்லையில் இல்லை என முகம் தெரியாத ஒருத்தி சுகன்யாவுக்கு அனுதாபம் தெரிவித்தாள். லேசாக அவளுக்கு நெற்றி புருவங்களுக்கு அருகில் விண் விண்ணென்று தெறிப்பது போல் இருந்தது.
“என்னை ஏன் இவள் நேராக சீண்டுகிறாள்? நான் செல்வாவை காதலிப்பதில், அவனோடு சுத்துவதில், இவளுக்கு என்னப் பிரச்சனை? இதில் இவள் எங்கு வருகிறாள்” சுகன்யாவுக்கு இது சாதாரண வம்பாகத் தோன்றவில்லை. செல்வாவின் புலம்பலுக்கும், இவர்களின் காதலுக்கும், சாவித்திரியின் எக்காளத்திற்கும் ஏதாவது சன்னமான தொடர்பு இருக்கிறதா?, நேரடியாக அவளிடமே கேட்டுவிடலாமா?, விஷயம் விளங்காமல் அவள் குழம்பியதால் தலை வலிக்க ஆரம்பித்தது. அவளைத் தவிர மற்றவர்கள் டீ ப்ரெக்கில் கேண்டீனுக்கு போயிருக்க, மனம் வேலையில் லயிக்க மறுத்தது.
“இவன் எங்கப் போய்த்தொலைஞ்சான்” செல்வாவின் மேல் லேசாக எரிச்சல் பட்டாள்.
“சுகு, எனக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர்ஸ் போட்டாச்சு; நான் அங்க போய் ஜாய்ன் பண்ணத்தான் வேணும், நம்ம சீஃப்யையும், நான் இப்பத்தான் பாத்து பேசினேன், அந்த கடங்காரன் நான் கொஞ்ச நாள் அங்க போய்த்தான் ஆகணுங்கறான், உன் செக் ஷன் ஹெட், அதான் அந்த குண்டு சாவித்திரிதான் என் பேரை ஃபைல்ல, ப்ரொபோஸ் பண்ணியிருக்கா, ட்ரான்ஸ்பர்ஸ் அண்ட் போஸ்டிங்ஸ் கமிட்டில அவ ஒரு மெம்பர், அந்த நாய் கொஞ்ச நாளாவே என் மேல ரொம்ப எரிச்சலா இருந்தா” செல்வா தொங்கிய முகத்துடன், அவளுடைய ஹாலில் நுழைந்தவன், அங்கு அவளைத் தவிர யாரும் இல்லாததால் அவள் கையை பிடிக்க முயற்சித்தான்.
“செல்வா, இது ஆபீஸ், பிஹேவ் யுவர்செல்ஃப்”, முகத்தை சுளித்து அவன் கையை உதறியவள், செல்வா, காலையிலேருந்து நான் ஒன்னும் சாப்பிடலை,” இது டீ டயம் தானே, நீ போய் காபியோட, எனக்கு ரெண்டு வடையும் சேத்து வாங்கு, கேண்டீனுக்கு போயிருக்கிற யாரவது ஒருத்தர் இங்கே திரும்பி வரட்டும், நான் உன் பின்னாலேயே கேண்டீனுக்கு வரேன், அங்க வெச்சு பேசிக்கலாம்.” அவள் முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமில்லை. ****