கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 3 15

வெய்யில் தாழ்ந்து கொண்டிருந்தது, காற்றடிக்கவில்லை என்ற போதிலும் வெளியில் புழுக்கம் அதிகம் இல்லை. வானம் முழு நீலமாக, மேகங்களின்றிருக்க, தூரத்தில் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சுகன்யா, காலையிலிருந்த மனப்பதட்டம் சற்றே குறைந்து, அமைதியாக செல்வாவுக்காக நடைபாதையில் காத்துக் கொண்டிருந்தாள். பொதுவாக அவன்தான் இவளுக்காக காத்திருப்பது வழக்கம். சுகன்யா தன் கையைத் திருப்பி வாட்ச்சில் நேரத்தைப் பார்க்க, மணி ஆறாகி பத்து நிமிடங்களைத் தாண்டியிருந்தது. சுகன்யா, தன் உடல் பளுவை, இரு கால்களிலும் மாற்றி மாற்றி தாங்கி நிற்பதனால், கணுக்காலில் மெல்ல மெல்ல ஏறத் தொடங்கிய வலி, சாலையில் செல்லுபவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல், அவள் உடம்பை கண்களால் துளைப்பது, அவர்கள் பார்வையில் நிறைந்திருந்த சபலம், காத்திருப்பதில் உள்ள சிரமம் அவளுக்குப் மெதுவாக புரிய ஆரம்பித்தது. செல்வா, பாவம் தனக்காக அதிகமாக அலுத்துக்கொள்ளாமல் எப்போதும் காத்திருப்பதை நினைத்து அவள் மனதில் அவனுக்காக பரிதாபப்பட்டாள். எங்கே போனான் இவன்? செல்லில் அவனைக் கூப்பிடலாமா? தன் நிற்க முடியாத இயலாமையை அவனுக்கு இனங்காட்ட விருப்பமின்றி, சரி … இன்னும் ஒரு அஞ்சு நிமிடம் அவனுக்காக காத்திருந்து பார்க்கலாமென யோசித்துக் கொண்டே நின்றாள் சுகன்யா.
“தான் ஏன் இந்த காதல் என்னும் புதிய பந்தத்தில் அவனுடன் சிக்கிக் கொண்டோம். இந்த புதிய பந்தத்தால் இன்று இவனுக்காக காத்து நிற்க வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இனி என் வாழ்க்கையில் நான் என் விருப்பங்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து, அடுத்தவர்களுக்காக, அவர்கள் போடும் ஆட்ட விதிகளுக்குட்பட்டுத்தான் வாழவேண்டுமா? இருவருக்குமிடையே ஏற்படும் விருப்ப முரண்பாடுகளினால், அதனால் ஏற்படும் மன அழுத்தங்களில் நான் உழலத்தான் வேண்டுமா? தன் சுதந்திரம் மொத்தமாக பறி போகவில்லை என்றாலும், தான் ஒரு விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதான ஒரு உணர்வு அவளை அலை கழிக்க ஆரம்பித்தது”. தன் தாய், அடுத்து தன் மாமா முதற்கொண்டு, இப்போது வேணி, செல்வா, சாவித்திரி, அந்த கிழக்கோட்டான் என ஒவ்வொருவராக தன் வாழ்க்கையில் நுழைகிறார்களே? இன்னும் எத்தனை பேரின் ஆதிக்கத்துக்கு தான் உட்ப்பட வேண்டும் என்று நினைத்த போது, இது என்ன காதல், கத்திரிக்காய் என்று நான் என் நேரத்தையும், மன அமைதியையும் இழந்து கொண்டிருக்கிறேன்; தீடிரென அவளுக்கு ஆயாசம் பொங்க தன் மீதே எரிச்சல் வந்தது.