கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 22 9

“மச்சான், நான் கிளம்பறேன்; மதிக்காதவங்க வீட்டு வாசலைக் கூட மிதிக்க கூடாதுன்னு, எங்க அம்மா எனக்கு சொல்லிக் குடுத்திருக்காங்க. மதிப்பில்லாத வீட்டுக்குள்ள கால் வெக்கறது தப்புன்னு இப்ப எனக்கு ஃபீல் ஆவுது. இதுக்கு மேல, இங்க யாருக்கும், நான் எந்த விதத்துலயும் தொந்தரவு கொடுக்க மாட்டேன். இன்னைக்கு இந்த மாதிரி ஒரு சீன் இங்கே நடக்கறதுக்கு, ஒரு விதத்துல நான் காரணங்கறது உண்மைதான். அதுக்காக நான் நிஜமா வருத்தப்படறேன்.” சீனு செல்வாவைப் பார்த்து மெல்ல முனகினான்.

“மிஸ் மீனா, அயாம் சாரி பார் தட், அண்ட் ஐ அன்கண்டீஷனலி அப்பாலஜைஸ் ஃபார் மை இம்பெர்டினன்ஸ்…” சொல்லிக்கொண்டே சீனு தான் உட்க்கார்ந்திருந்த வரந்தா படிக்கட்டிலிருந்து எழுந்தான்.

“டேய் மாப்ளே … என்னடா பேசறே நீ? மீனாவைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும்; நீ இன்னைக்கு நேத்தா அவளைப் பார்க்கிறே? மீனா அவ வழக்கம் போல எதையோ சொன்னாடா; அம்மா அவளை எதாவது சொல்லியிருப்பாங்க; அதனால அவ இன்னைக்கு ஏதோ அப்செட்டா இருக்கான்னு நினைக்கிறேன். அம்மா மேல இருக்கற கோவத்தை அவ உன் மேல காமிக்கறா; நீயும் அவ பேசினதை, ரொம்பவே சீரியஸா எடுத்துக்கிட்டு பதிலுக்கு என்னன்னமோ பேசறே? என் மனசு ரொம்ப கஷ்டப்படுதுடா..” செல்வா சீனுவின் கையைப் பிடித்தான்.

“உன் ஃப்ரெண்ட்க்கு குடுக்க வேண்டிய மதிப்பை, மரியாதையை நான் எப்பவும் போல, இந்த நிமிஷமும் நான் குடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன்; உன் ஃப்ரெண்டை நான் ஒரு அன்னியனை நினைச்சிருந்தா, வெளியே போடான்னு ஒரே வார்த்தையில சொல்லியிருப்பேன்; இந்த வீட்டுக்குள்ள இனிமே நுழையாதேன்னு ஸ்ட்ரெய்ட்டா சொல்லியிருப்பேன்.” அவளுக்கு இலேசாக மூச்சிறைத்தது.”

“யாரையும் நான் இந்த வீட்டை விட்டு இப்ப போகச் சொல்லலை; ஏன் குடிச்சுட்டு இங்கே வராங்கன்னுத்தான் நான் கேக்கிறேன்? ஏன் குடிச்சுட்டு, தானும் அழிஞ்சு, மத்தவங்க மனசையும் புண்ணாக்கணும்ன்னுதான் கேக்கறேன்? ஏன் இப்படி நேரத்துக்கு சோறு தண்ணியில்லாம அழிஞ்சு போகணும்ன்னுதான் கேக்கிறேன்?”

செல்வா பதிலேதும் சொல்லாமல் மீனாவைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“செல்வா… உன் ஃப்ரெண்டுகிட்ட, நான் சொல்றதை ஒழுங்கா புரிஞ்சுக்க சொல்லுடா; குடிச்சுட்டு போதையில இருக்கறவங்களுக்கு அடுத்தவங்க சொல்றது எப்படி புரியும்? மீனாவும் தன் அடித்தொண்டையில் பேசினாள்.

“ப்ளீஸ் மீனா; நான் சொல்றதை கேளு; ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ன்னு நான்தான் சீனுவை, இப்பவே வந்து ஆகணும்ன்னு கூப்பிட்டேன். அவன் மேல எந்த தப்பும் இல்லே…”

“உன் ஃப்ரெண்ட் வந்ததுல எந்த தப்பும் இல்லே; எப்ப வேணா வரட்டும்; எப்ப வேணா போகட்டும்; நீங்க என்ன வேணா டிஸ்கஸ் பண்ணிக்குங்க; அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே; அவரு குடிச்சுட்டு வந்திருக்காரே; அது சரியா? அவரு குடிச்சிருக்காருன்னு தெரிஞ்சும், நீ அவரை இந்த ராத்திரி நேரத்துல நம்ம வீட்டுக்கு கூப்பிட்டது சரியா?”

“மீனா அவன் தான் இனிமே பார்ட்டிக்கு போக மாட்டேன்னு உன் கிட்ட சொல்லிட்டானே? அப்புறம் எதுக்கு நீ இன்னைக்கு விடாம அவனை வம்புக்கு இழுக்கறே?”

சீனு எதுவும் பேசாமல் கேட்டுக்கு வெளியில் பார்த்துக்கொண்டிருந்தான். தன் நண்பன் இப்படி பேசமுடியாமல் தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பதை கண்டதும், செல்வாவுக்கு மனதில் கோபமும், ஆங்காரமும் பொங்க, மீனாவை ஒரு அறை விடலாம், ஆனா வயசுக்கு வந்த பொண்ணை, நான் அடிச்சா, என் அம்மா என்னை வீட்டை விட்டே தொரத்திடுவா; மீனா இன்னைக்கு ஏன் இப்படி அழும்பு பண்றா? தன் தங்கை மீனாவின் மீது அவனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்த போதிலும், செல்வாவுக்கு அந்த நேரத்தில் அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியவில்லை.

“மீனா நீ இப்ப என்னை என்னதான் பண்ணச்சொல்றே? செல்வா எரிச்சலுடன் தன் தங்கையை நோக்கினான்.

“உன் பிரண்டை இனிமே
“நான் குடிக்கமாட்டேன்னு’ என் கையில அடிச்சு சத்தியம் பண்ணச் சொல்லு…” மீனாவின் கண்கள் கலங்கியது போல் இருந்தது. அவள் தன் மனதுக்குள் எதையோ முழுமையாக தீர்மானித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போல், மிக மிக மிருதுவாக ஆனால் உறுதியான குரலில் பேசினாள்.

மீனா சொன்னதைக் கேட்டதும், சீனு விருட்டென அவள் பக்கம் திரும்பினான். தன் எதிரில் பளபளக்கும் தங்க நிலவொளியில், மெல்லிய தேகத்துடன், ரோம நாட்டு பளிங்கு சிலை போல், கண்ணீருடன் கண்கள் இலேசாக மின்ன, தன் கையை நீட்டியவாறு நின்று கொண்டிருந்த மீனாவை அவன் உற்று நோக்கினான். எனக்காக ஒரு பொண்ணு அழறளா? அப்படி அழற பொண்ணு, வேற யாருமில்லே? இருபது வருஷமா, என் நண்பனோட தங்கைன்னு நான் அன்பு காட்டற மீனாவை நான் அழ வெச்சுட்டேனா? சீனுவின் உடலும் மனமும் பதை பதைத்து நடுங்கியது.