கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 22 9

இன்னைக்கு என் வேலை முடிஞ்ச மாதிரிதான். இதான் என் போதாத காலங்கறது? எங்கப் போனாலும், எந்த வேலைக்குப் போனாலும், எனக்கு முன்னாடி சனியன் போய் நிக்கறான்? சனிக்கு கால் ஊனம்ன்னு சொல்றாங்களே? அவன் எப்படி என் லைப்ல மட்டும் வேக வேகமா ஓடறான்?

சீனு இன்னைக்கு குடிச்சிட்டு வந்து இருக்கறது மீனாவுக்கு கிளியரா தெரிஞ்சு போச்சு; இவன் வாரத்துல ரெண்டு நாள் குடிச்சுட்டு வந்து, மாடியில என் கூட மல்லாந்து கிடக்கறது மீனாவுக்கு சுத்தமா புடிக்கலை. இன்னைக்கு இவன் ஒழிஞ்ச்சான். செல்வா மனதுக்குள் புழுங்கிக்கொண்டே தன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.

“மீனா .. மெதுவா பேசுடி… அப்பா முழிச்சுக்கிட்டு இருக்கப் போறார்?” செல்வா நடுவில் நுழைந்தான்.

“சாரி மேடம்… கோச்சிக்காதீங்க! ஃப்ரெண்ட் ஒருத்தன் பார்ட்டி குடுத்தான்; வேணாம்பான்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தேன்; ரொம்ப வற்புறுத்துனானுங்க; அதுக்கப்புறம் தட்ட முடியலை; நம்ம வேலாயுதத்துக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு; நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்; நீயும் என் கூட அந்த சந்தோஷத்துல கலந்துக்கன்னு சொன்னான்.”

“செல்வாவுக்கும் அவனை நல்லாத் தெரியும். எங்களுக்கெல்லாம் க்ளோஸ் ஃப்ரெண்ட்; நீ வேணா இவனைக் கேட்டுப் பாரேன்; இதெல்லாம் இன்னைக்கு ஒரு சோஷியல் நீட் ஆயிடிச்சி மீனா! புரிஞ்சுக்கம்மா!” சீனு தன் தரப்பு நியாயத்தை மெதுவாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான்.

“நீ தம் அடிக்கறது; ஒரு சோஷியல் நீட்; நான் புரிஞ்சிக்கறேன்; நீ தண்ணி அடிக்கறது ஒரு சோஷியல் நீட்; அதையும் நான் புரிஞ்சிக்கறேன். ராத்திரியில வேளா வேளைக்கு வீட்டுக்குப் போய் தூங்காம ஊர் சுத்தறயே, அதுவும் ஒரு சோஷியல் நீட்; எனக்கு நல்லாப் புரியுது; ஆனா உனக்கு கேன்சர் வந்து சீக்கிரமே சாகப் போறதும் ஒரு சோஷியல் நீடா? சொல்லுடா நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு… இதை நீ என்னைக்கு புரிஞ்சுக்குவே?” அவள் முரட்டுத்தனமாக சீறினாள்.

“ஒரே புள்ளை; மணி பத்தாச்சு; பெத்த புள்ளை இன்னும் வீட்டுக்கு வரலையே, அவனுக்கு என்ன ஆச்சோ; ஏது ஆச்சோன்னு; வயிறு கலங்கி போய் உன் ஆத்தாக்காரி,
“மீனா … என் புள்ளை சீனு உங்க வீட்டுல இருக்கானான்னு’ இப்பத்தான் எனக்கு போன் பண்ணா. இந்த வயசுல, ரெண்டு நாளைக்கு ஒருதரம் இப்படி பதறிப் போறாங்களே, அந்த வயசான கெழத்துக்கு இது மாதிரியான தேவையில்லாத மன உளைச்சல், நிச்சயமா ஒரு சோஷியல் நீட்; எனக்கு இதுவும் நல்லாப் புரியுது.

“மீனா … ப்ளீஸ் … ப்ளீஸ்… உனக்கே நல்லாத் தெரியும்! நான் என்ன குடிகாரனா? தெனம் தெனமா குடிக்கறேன்? ஏதோ அப்பப்ப மாசத்துல, ஒரு ரெண்டு தரம் இப்படி பார்ட்டியில கலந்துக்கறேன். கட்டாயப்படுத்தறாங்களேன்னு ஒரு பெக் இல்லன்னா ரெண்டு பெக் அவ்வளதான். நீ எப்பவும் என்னை இந்த விஷயத்துல தப்பாவே பாக்கறே!”

“ஊர்ல இருக்கறவனுக்கு எல்லாம் கல்யாணம் ஆகுது? உனக்கு என்னைக்கு கல்யாணம் ஆவப்போவுது? உனக்குன்னு ஒரு குடும்பம் என்னைக்கு வரப்போவுது? நீ செய்யற வேலையைப் பாத்தா, ஒழுங்கா வாழ்க்கையில செட்டில் ஆகணும்ன்னு நினைக்கற எவளும், உன்னைத் திரும்பி கூட பாக்க மாட்டா…அப்படியே எவளையாவது உன் அம்மா உனக்கு கட்டி வெச்சாலும், அவ மூணு மாசத்துல உன்னை விட்டுட்டு ஓடிப்போயிடுவா” மீனாவுக்கு மூச்சிறைத்தது.

“மீனா … போதும்டீ … அவனை வாசல்லேயே நிக்க வெச்சு நீ கோர்ட் விசாரனையை ஆரம்பிக்காதடி… சத்தம் கேட்டு அப்பா வந்துடப் போறார்.” இந்த நேரத்துல அவரு இங்க வந்தா, கதையே கந்தலாயிடும்; செல்வா தன் நண்பனுக்காக வாதாட ஆரம்பித்தான்.

“வரட்டுமே; உங்க ரெண்டு பேருக்கும் அவருகிட்ட மட்டும் பயம் இருக்குல்லே? இவன் குடிச்சுட்டு சத்தம் போடாம இங்க வந்து படுத்திருந்துட்டு, காலையில நல்லப் புள்ளையா காப்பி வாங்கி குடிச்சுட்டு, தன் வூட்டுக்கு எழுந்து போவான். கண்டவனுங்க இங்க குடிச்சிட்டு வந்து படுத்து தூங்கறதுக்கு, எங்கப்பன் என்னா லாட்ஜா கட்டி வுட்டு இருக்கான். இல்ல இது முனிசிபாலிட்டிகாரன் கட்டி வெச்சிருக்கற தர்ம சத்திரமா? குடிக்காதடான்னு யார் சொன்னாலும் இவன் ஏன் கேக்க மாட்டேங்கறான்?”