கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 22 9

சீனு நிஜமாவே நீ ஒரு ஜெம்முடா! உன் குணத்தை, உன் அருமையான நட்ப்பை, வெள்ளை மனசை புரிஞ்சிக்கற பொண்ணு இனிமேதானா உனக்காக பொறக்கப் போறா? கண்டிப்பா அவ எங்கேயோ பொறந்துதான் இருப்பா! கவலைப்படாதே மாப்ளே… சரியான நேரத்துல அவ உன் வாழ்க்கையில வந்து சேருவா… செல்வாவின் மனதில் சீனுவுக்காக அன்பும் பாசமும் ஒருங்கே சுரந்தது.

தெரு முனையில் ஆட்டோ ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சீனுவாக இருக்குமோ? ஆட்டோவின் வேகம் குறைய ஆரம்பித்தது. வேகம் குறைந்த அந்த ஆட்டோ, அவன் வீட்டின் முன் தத்தி தத்தி வந்து நின்றது. அவனே தான்; சொன்ன மாதிரி வந்துட்டான். ஆட்டோவிலிருந்து இறங்கிய சீனு, தன் கையிலிருந்த சிகரெட்டை வாயில் வைத்து ஒரு முறை நீளமாக இழுத்தவன், கையிலிருந்த துணுக்கை வீசி எறிந்துவிட்டு, செல்வாவை நோக்கி தன் கையை உற்சாகமாக ஆட்டினான்.

ஹாலில் உட்க்கார்ந்து படித்துக்கொண்டிருந்த மீனா ஆட்டோ சத்தம் கேட்டு, வரண்டாவிற்கு வந்தாள். வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த சீனுவின் நடையைக் கண்டதும், அவன் அன்று ஜலகீரிடை நடத்திவிட்டு வருகிறானென்று அவளுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது. அவள் மனதில் சுரீரென்று வலித்தது. ஏன் இவன் இப்படி கெட்டுக் குட்டிசுவராப் போய்கிட்டு இருக்கான்?

இவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன? நான் எதுக்கு இவனைப்பத்தி கவலைப்படணும்? இவன் செல்வாவோட ஃப்ரெண்ட்; ரெண்டு பேரும் காலேஜ் வரைக்கும் ஒண்ணா படிச்சாங்க; என்னோட அஞ்சு வயசுலேருந்து இவனை எனக்குத் தெரியும்; என் வீட்டுக்கு நினைச்சப்ப வர்றான்; இந்த வீட்டுல உரிமையா சாப்பிடறான்; தூங்கறான்; நினைச்சப்ப எழுந்து போறான்.

அதே உரிமையோட இந்த வீட்டுல எந்த வேலையா இருந்தாலும், யாரும் சொல்றதுக்கு முன்னே தானே தலை மேல இழுத்து போட்டுக்கிட்டு செய்யறான். இந்த வீட்டுக்குள்ள செல்வா மாதிரி இன்னொரு ஆம்பிளையா இருக்கான். நம்ம அப்பாவைப் பாத்தா மட்டும் இவனுக்கு கொஞ்சம் மரியாதை; பயம் உண்டு; அதனால அவரை மட்டும் எதுவும் கலாய்க்காம ஒதுங்கி நிக்கறான். மத்தப்படி இந்த வீட்டுல யார்கிட்டவும் இவனுக்கு சுத்தமா பயங்கறதே கிடையாது.

அம்மாவுக்கு இவன் மேல அப்படி என்னத்தான் பிரியமோ? எது செய்தாலும் சீனுவுக்கு ரெண்டு எடுத்து வைடி … போன் பண்ணி வரச்சொல்லுடி; ஆறிப்போனாலும் பரவாயில்லே; அவன் வந்தான்னா குடுக்கலாம். அம்மாவுக்கு அவன் மேல பாசம் பொங்கி வழியும். இன்னைக்கு கூட சாயந்திரம் டிபனுக்கு செய்த வாழைக்காய் பஜ்ஜி, எடுத்து வெச்சு ஆறி அவலாப் போயிருக்கு. ரெண்டு தரம் போன் பண்ணேன்; வந்து தின்னுட்டுப் போடான்னு; அய்யா, சாவகாசமா கட்டிங் வுட்டுட்டு பத்து மணிக்கு மெதுவா நகர் ஊர்வலம் வர்றாரு?

திடீர்ன்னு கொஞ்ச நாளா இவனைப்பாத்தா, என் மனசுக்குள்ள ஒரு இனம் தெரியாத இரக்கம், ஒரு பரிவு தன்னாலே வருதே அது ஏன்? அதுவும் செல்வா அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்ததுலேருந்து, நானும் பாக்கறேன், இந்த இரக்கம், பரிவு, ஒரு பாசம், ஒரு பிரமிப்புன்னு இவனை பாக்கும் போது, என் மனசுக்குள்ள வெள்ளமா ஏன் பொங்குது? என் அண்ணன் கூடவே இருந்து அவனுக்கு எல்லா உதவியும் பண்ணாங்கறதுனலயா? நிச்சயமா இல்லே? எத்தனையோ தரம் இதுமாதிரி பல சந்தர்ப்பங்கள்ள நம்ம வீட்டுக்கு அவன் உதவி பண்ணியிருக்கான்.

சீனு நல்லா சம்பாதிக்கறான். இவனுக்கு, எல்லோருக்கும் உதவணுங்கற எண்ணம் இருக்கு. கூப்பிட்ட குரலுக்கு, என்ன வேணும்.. வந்துட்டேன்னு எந்த நேரத்துலயும் குரல் குடுக்கறவன். ஒருத்தன் கிட்ட பழகிட்டா அவனுக்காக தன் உயிரையே குடுக்க ரெடிங்கறான். நல்ல குடும்பத்தை சேர்ந்தவன், ஒரே பிள்ளை. அப்படி இருக்கும் போது இவனுக்கு என்ன கவலை? எதுக்கு இப்படி பார்ட்டி பார்ட்டின்னு ஒரு சாக்கை சொல்லிக்கிட்டு, இந்த குடியை பழக்கிக்கிட்டு, ஏன் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சு போறான்?