கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 10 9

என்னா இந்த பொண்ணு செல்வாவை கட்டின புருஷன் மாதிரி
“இவருங்கறா; அவருங்கறா?” ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல ஃப்ரெண்ட்ஸாத்தான் இன்னும் இருக்கறாங்கன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்; இவ என்னடான்னா இங்கேயே இவன் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காளே? இவன் கையால தாலி கட்டிக்கிட்ட மாதிரியில்ல நடந்துக்கறா; பிரசாதத்தை எங்கிட்டேருந்து வெடுக்குன்னு புடுங்கி அவன் நெத்தியில வெக்கறா; என் புள்ளை மாதிரி இவன்; இவனை நான் தொடக்கூடாதா? மார்த் துணி விலகறது கூட தெரியாம அவனைத் தொட்டுத் தூக்கறா; அவனை உரசி உரசிகிட்டு எல்லாத்தையும் செய்யறா? இவன் ஜாதி என்னா? இவ ஜாதி என்னா? இவளுக்கு அம்மா ஒரு ஜாதி; அப்பன் ஒரு ஜாதி; அப்பனும் இவங்களை விட்டுட்டு ஓடிட்டான். இப்ப எங்க இருக்கான்னு தெரியாது. விவரம் பத்தாத இந்த மல்லிகாவும் எதுக்காக ஒரு கன்னிப் பொண்ணை ராத்திரி நேரத்துல தன் புள்ளை கூட தனியா விட்டு வெச்சிருக்கா? நடராஜன் இவளை இவனுக்கே கட்டி வெச்சிடாலாம்ன்னு முடிவு பண்ணிட்டாரா? ஒண்ணும் புரியலேயே? நான் என்னடான்னா இவன் கிட்ட நேரடியா கடைசியா ஒரு தரம் என் பொண்ணைப் பத்தி பேசலாம்ன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன். அன்னைக்கு ஜானகி இவன் கிட்ட துப்பு கெட்டத்தனமா நடந்துகிட்டதுக்கு இவன் கிட்ட நான் மன்னிப்பு கேக்கலாம்ன்னு யோசனைப் பண்ணிகிட்டு இருக்கேன். சுகன்யா டெல்லியில இருக்கற நேரத்துல இவனை என் பக்கம் திருப்பணும்ன்னு காத்துக்கிட்டிருக்கேன். சுகன்யா என்னடான்னா டில்லிக்கு போகலேங்கறா? இப்ப என்ன பண்றது? நேரா மல்லிகாகிட்டத்தான் போகணும். சாயந்தரம் எங்கிட்ட மல்லிகா பேசினப்பவும் என்னமோ கடனேன்னு பேசறது போலத்தான் பேசினா? செல்வாவையும், சுகன்யாவையும் அவ்வளவு நெருக்கமாக, அன்னியோன்யமாக பார்த்த சாவித்திரியின் மனதில், சட்டென பொறாமைத் தீ எழுந்தது. தன் பொண்ணுக்கு இந்த குடுப்பனை இல்லேயே? அவள் மனதில் வெவ்வேறு விதமான எண்ணங்கள் எழுந்து அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்.”
“எதுக்குடியம்மா?”

“இவருக்காக அக்கறையா விபூதி பிரசாதம் கொண்டு வந்தீங்களே, அதுக்குத்தான் மேடம்; இந்த காலத்துலே உங்களுக்கு இருக்கற மாதிரி நல்ல மனசு எத்தனைப் பேருக்கு இருக்கு? என்னையும் உங்க பொண்ணு மாதிரின்னு வாய்க்கு வாய் சொல்றீங்க; இப்ப உங்க வாயால என்னையும் நல்லா இருன்னு சொன்னீங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் மேடம்?” சுகன்யா போலியாக சிரித்தாள்.
“என்னை நீ சரியா புரிஞ்சிக்கிட்டிருக்கேடியம்மா. உனக்கென்னடி குறைச்சல்? கோவில் செலை மாதிரி இருக்கே; கை நெறய சம்பாதிக்கறே; நீயும் நல்லபடியா இருப்பேம்மா; உன் மனம் போல உனக்கு சீக்கிரமே மாங்கல்யம் அமையட்டும்.”
“செல்வா, நான் கிளம்பறேன் இப்ப; உன் கிட்ட கொஞ்சம் தனியா மனம் விட்டு பேசணும்ன்னு நெனைச்சிக்கிட்டிருக்கேன். நீ சீக்கிரமா குணமாகி வீட்டுக்கு வா. அப்புறம் பேசிக்கலாம்.” தன் பையை எடுத்துக்கொண்டவள், அவர்களை திரும்பி பார்க்காமல் விடு விடு வென்று கதவை திறந்து கொண்டு வெளியேறினாள்.
சாவித்திரி கிளம்பிய ரெண்டு நிமிடங்களில் டிபனுடன் வந்த சீனு, சுகன்யா வேண்டாம் வேண்டாமென வெகுவாக மறுத்தப்போதிலும், அவளைத் தன் பைக்கில் அவள் வீட்டு வாசல் வரை அழைத்து வந்து விட்டுவிட்டு திரும்பிப்போனான்.
“என்னம்மா செல்வாவுக்கு எப்படியிருக்கு உடம்பு,” அவர்களிருவரும் சாப்பிடுவதற்காக தட்டுகளை எடுத்து வைத்தவாறு கேட்டாள் சுந்தரி.
“கால் வீக்கம்தான் சுத்தமா குறையல; மத்தப்படிக்கு இப்ப பெட்டரா அவர் ஃபீல் பண்றார்; ஒன்றிரண்டு நாள்ல வீக்கம் குறைய ஆரம்பிக்குமின்னு டாக்டர் சொல்லிக்கிட்டிருந்தார்; சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு தோணுது; உனக்கு வீட்டுல தனியா இருக்கறது போரடிக்குதாம்மா?” சுகன்யா தன் தாயின் கழுத்தை ஒரு சிறு குழந்தையைப் போல் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடினாள்.
“சுகா … எனக்கு கழுத்து வலிக்குதுடி; நீ என்னடான்னா சின்ன குழந்தையாட்டாம் விளையாடறே?”