கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 10 9

“உங்கம்மாவும், அப்பாவும், நாம முத்தம் குடுத்துக்கிட்டதைப் பாத்துட்டதும், நேத்து ஆகறது ஆவுதுன்னு, உங்கப்பாவை நான் மாமான்னு கூப்பிட்டு ஒரு செண்டிமெண்ட் பிட்டைப் போட்டேன்; அது ஃப்ர்ஸ்ட் கிளாஸா வொர்க் அவுட் ஆயிடுச்சு; அப்புறமா உங்கம்மாவை, உன் எதிர்லேயே அத்தேன்னு கூப்பிட்டு அதே பிட்டைப் போட்டுப் பாத்தேன்; அவங்க ஓண்ணும் மசியற மாதிரி தெரியலை; உங்கப்பாவையும், மீனாவையும் நான் நம்ப வழிக்கு கொண்டாந்துட்டேன்; உங்கம்மாவை சமாளிக்க வேண்டியது உன் பொறுப்பு; சொல்லிவிட்டு சுகன்யா தமாஷாக சிரித்தாள். செல்வாவும் மனம் இலேசாகி வாய் விட்டு சிரித்தான்.
“சுகன்யா, நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே?”

“திருப்பியும் முதல்லேருந்தா; எம்ம்மா … என்னால இப்ப முத்தமெல்லாம் உனக்கு குடுக்க முடியாது.”
“பாத்தியா நீ தான் என்னை விட அதிகமா பறக்கிறே?
“சரி சொல்லு … என்ன சொல்லப் போறே?” அவள் வெட்கத்துடன் முகம் சிவந்து அவனைப் பார்த்தாள்.
“எங்கம்மா, உன்னைப் பாத்துட்டாங்க; எனக்காக நீ ஓடி ஓடி செய்றதெல்லாம் நேரா பாக்கறாங்க, இதுக்கப்புறமும், நம்ம கல்யாணத்துக்கு அவங்க ஒத்து வரேல்லேன்னா, நாம என்னடி செய்யறது?”
“சுகன்யா அவனை ஒரு நிமிடம் கூர்ந்து நோக்கினாள். நாமன்னு என்னை ஏன் உன் கூட சேத்துக்கறே? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நீ தான் உங்கம்மாவை சமாளிக்கணும். அப்புறம் அவங்களை நான் கவனிச்சிக்கிறேன். இப்ப இதுக்கு நீ என்னப் பண்ணப் போறேன்னு யோசி” அவள் அவனை வேண்டுமென்றே சீண்டினாள்.
“இப்பத்தானே என்னை நீ கேட்டே? என்னை ஏன் பிரிச்சுப் பேசறேன்னு? இப்ப நீ மட்டும் என்னைப் உங்கிட்டேயிருந்து பிரிச்சுப் பேசறீயே? அவன் சிணுங்கினான்.
“ம்ம்ம்ம் … நீ ஓரே ஒரு காரியம் மட்டும் பண்ணு; மீதியை நான் பாத்துக்கறேன்.” சுகன்யா தன் கண்ணை சிமிட்டி அவனை காதலுடன் பார்த்தாள்.
“நான் என்ன பண்ணணும்.” அவன் ஆவலுடன் கேட்டான்.
“கட்டின லுங்கியும், போட்ட சட்டையுமா நீ என் வீட்டுக்கு வந்துடு. கடைசி வரைக்கும் நான் உன்னை ராஜாவாட்டம் வெச்சுக்கிறேன். வந்துட்டு எங்கம்மா எங்கம்மான்னு பொலம்பினயோ, மவனே, அன்னைக்கே உன்னை உன் வீட்டுக்கு திரும்பி போடான்னு தொரத்திடுவேன்.” சுகன்யா தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். செல்வா தலைக்குனிந்து மவுனமாக இருந்தான்.
“என்னை என் வீட்டை விட்டு ஓடி வந்து உங்க
“வீட்டு மாப்பிள்ளையா” இருக்கச் சொல்றியா?”
“ஆண்டவா!, உன் கால் இருக்கிற நிலமைக்கு நீ ஓண்ணும் ஓடி வரவேண்டாம்; ஒரு ஆட்டோ பிடிச்சு மெதுவா வந்து சேரு” அவள் கல கலவென சிரித்தாள். அவன் வெகுளித்தனத்தை பார்த்தவளுக்கு அவனை மீண்டும் ஒரு முறை இறுக்கிக் கட்டிக்கொண்டு அவன் முகமெங்கும் முத்தமிட வேண்டுமென அவள் மனதில் சட்டென ஒரு வெறி கிளம்பியது. அறைக் கதவு
“டொக் … டொக் எனத் தட்டப்பட்டது … சுகன்யா எழுவதற்கு முன், கதவைத் திறந்து கொண்டு, சாவித்திரி உள்ளே நுழைந்தாள்.
“வாங்க மேடம்” சுகன்யா தன்னைச் சுதாரித்துக்கொண்டு விருட்டென எழுந்தாள். இந்த நேரத்துலதானா இவ வரணும்? இவ இப்பவே போய் ஊருக்கெல்லாம் தண்டோரா போடுவாளே, நான் செல்வா கூட தனியா ராத்திரி நேரத்துல, ஆஸ்பத்திரியில அடிபட்டு இருக்கறவன் கூட ஜல்சா பண்ணிகிட்டு இருக்கேறன்னு? இவ என் காலை சுத்திக்கிட்டு இருக்கற பாம்பு; என்னை இவ கொத்தாம விடமாட்டா போல இருக்கே? சுகன்யாவின் மனதில் எரிச்சல் எழுந்தது.
“என்ன செல்வா, எப்படி ஃபீல் பண்றே? உடம்பு வலியெல்லாம் கொஞ்சமாவது குறைஞ்சுதா? நீ எழுந்துக்க வேண்டாம். நீ அப்படியே படுத்துக்கிட்டு இரு.” இரவு எட்டு மணிக்கு, செல்வாவின் அருகில் சுகன்யா தனியாக இருப்பாள் என்பதை சாவித்திரி எதிர்பார்க்கவில்லை. இது அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது.
“இன்னைக்கு பரவாயில்லே மேடம்; இடுப்புல உள் காயம் பட்டதனாலே வலியிருக்கு; இடது கால் வீக்கம் சுத்தமா குறையல; அதனால எழுந்து நடக்க முடியலை; காதுக்குப் பின்னாடி ஸ்டிச்சஸ் போட்டு இருக்காங்க; தையல் போட்ட இடத்துல விட்டு விட்டு வலிச்சுக்கிட்டு இருக்கு; இடது கையில பிளாஸ்டர் இருக்கறது அசௌகரியமா இருக்கு; இன்னும் நாலஞ்சு நாள் இங்க இருக்கணும் போல இருக்கு; வீட்டுக்கு போனதக்கு அப்புறமும் குறைஞ்சது ரெண்டு வாரம் ரெஸ்ட் எடுக்கணும்ன்னு டாக்டர் சொல்றார்.”