எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 10 43

என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டாள். உடனே அண்ணனின் விசித்திர வழக்கத்தை, சங்கீதா உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தாள். அசோக் இப்போது அவஸ்தையாக நெளிந்தான்.

அப்புறம் ஒருவழியாக சங்கீதாவை சமாளித்து.. ‘அம்மா உன்னை கூப்டறாங்க. என்னன்னு போய் கேளு..’ என்று பொய் எல்லாம் சொல்லி.. அசோக் மீராவை தனியாக கிளப்பிக்கொண்டு சென்றான்..!!

“வா மீரா.. உனக்கு ஒன்னு காட்டனும்..!!”

“என்ன..??”

“உனக்கு ரொம்ப பிடிக்கும்..!!”

“என்னன்னு கேக்குறேன்ல..??”

“ப்ச்.. வந்து பாரு.. இட்ஸ் சர்ப்ரைஸ்..!!”

அவளுடைய கையை பிடித்து உற்சாகத்துடன் இழுத்து சென்றவன்.. வீட்டுக்கு பின்புறம் இருந்த அந்த கார்டனுக்கு அழைத்து சென்றான்..!! மீரா முன்பொருமுறை தனக்கு பிடிக்கும் என்று சொல்லியிருந்த மஞ்சள் ரோஜா செடிகள்.. அந்த தோட்டமெங்கும் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன..!!

“ம்ம்.. இதைத்தான் சொன்னேன்.. எப்படி..??” அசோக் பெருமையாக கேட்டான்.

அந்த ரோஜாக்களை பார்த்த கணத்திலேயே.. மீரா ஒரு குழந்தையென மாறிப் போனாள்..!! ‘வாவ்’ என்று குதுகலித்தவள், ஆசையாக அந்த பூக்களை அணைத்துக்கொண்டு கொஞ்சினாள்..!! அவளுடைய சந்தோஷத்தை கண்டு.. அசோக்கும் அப்படியே பூரித்து போனான்..!!

“பிடிச்சிருக்கா மீரா..??”

“இட்ஸ் ஸோ லவ்லி..!! ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அசோக்.. எ..எனக்கு.. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல..!!”

“எல்லாம் உனக்கு பிடிக்கும்னுதான் மீரா..!!”

அசோக் புன்னகையுடன் சொல்ல, மீரா அவனுடைய முகத்தையே சில வினாடிகள் சலனமில்லாமல் பார்த்தாள். பிறகு..

“தேங்க்ஸ் அசோக்..!!” என்றாள் சற்றே தழதழத்த குரலில்.

அசோக் அவளை நெருங்கி அவளது கைவிரல்களை ஆதரவாக பற்றிக் கொண்டான். மேலும் சிறிது நேரம் தோட்டத்தில் கழித்துவிட்டு, இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். வீட்டுக்கு பக்கவாட்டில் இருக்கிற படிக்கட்டில் ஏறி மாடிக்கு சென்றார்கள். மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்ட அசோக், தன் அறைக்கு அவளை அவசரமாக அழைத்து சென்றான். கதவை திறந்து உள்ளே தள்ளி விட்டவன், மீராவிடம் திரும்பி..

“உள்ள போ மீரா.. உள்ள உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு..!!” என்றான்.

என்னவென்று புரியாமலே, மீரா தயக்கமாக அந்த அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தவுடனே அவள் கண்ட காட்சியில் ஒரு கணம் அப்படியே திகைத்துப் போனாள். அசோக்குடைய அறையின் ஒரு பக்க சுவர் முழுவதும்.. ஒரு பிரம்மாண்ட அளவிலான புகைப்படம்.. வால் பேப்பராக ஒட்டி வைக்கப் பட்டிருந்தது..!! மீராவின் புகைப்படம் அது.. கருப்பு வெள்ளை என இரண்டு வண்ணங்களால் மட்டுமே ஆனது.. மீராவின் முகம் முழுமையாக அந்தப்படத்தில் தெரியவில்லை.. க்ளிக் செய்யும்போது குறுக்கே வந்திருந்த அவளுடைய கையொன்று.. முக்கால்வாசி முகத்தை மறைத்திருக்க.. அவளுடைய ஒளி வீசும் கண்கள் மட்டும் பளிச்சென்று தெரிந்தன..!!

அந்த புகைப்படத்தை பார்த்த மீராவின் இதயம்.. ஒருவித உணர்ச்சி மோதலுக்கு உள்ளானது..!! அசோக் அவள் மீது எந்த அளவிற்கு பித்து பிடித்தவனாய் இருக்கிறான் என்பதை.. அவளுக்கு அழுத்தமாக உணர வைப்பதாக இருந்தது அந்த புகைப்படம்..!! ஒரு இனம்புரியாத உணர்வொன்று.. அவளுடைய மேனியின் நாடி நரம்புகளை எல்லாம்.. வீணையின் தந்திகள் என மீட்டி செல்ல.. சிலுசிலுவென பல அதிர்வலைகள்.. மீராவின் தேகம் மொத்தமும்..!! அசையக்கூட தோன்றாதவளாய்.. அப்படியே அமைதியாக நின்றபடி.. அந்த புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

1 Comment

  1. 👌❤️❤️❤️❤️❤️❤️👌👌👌

Comments are closed.