எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 10 38

“நீ மொதமொதலா எங்கிட்ட பேச வந்தப்போ.. நான் இதே இடத்துலதான் உக்காந்திருந்தேன்..!! நாம ரெண்டு பேரும் ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கிட்டதும்.. இதே டேபிள்லதான்..!! அதுக்கப்புறம் எத்தனையோ தடவை.. இங்க உக்காந்து ரெண்டு பேரும் பேசிருக்கோம்.. கதையடிச்சிருக்கோம்.. ஒருத்தரை பத்தி ஒருத்தர் நெறைய தெரிஞ்சிட்ருக்கோம்..!! அப்போ நமக்கு இந்த டேபிள் ரொம்ப ஸ்பெஷல்தான..??”

“ம்ம்.. ஸ்பெஷல்தான்..!!” அசோக் ஒரு சிறு குழப்பத்துடனே மெலிதாக புன்னகைத்தான்.

“முன்னாடிலாம் என்ன பண்ணுவேன் தெரியுமா.. ஐ மீன்.. நாம மீட் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி..??”

“என்ன பண்ணுவ..??”

“எப்போ இங்க சாப்பிட வந்தாலும்.. இதே டேபிள்தான் சூஸ் பண்ணுவேன்..!! இங்க உக்காந்து சாப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் அசோக்.. தனியா வந்து உக்காந்துகிட்டு.. அப்படியே வெளில வேடிக்கை பாத்துக்கிட்டு.. கொஞ்சம் கொஞ்சமா சாப்பாடு அள்ளி வாய்ல போட்டுக்கிட்டு.. ஹ்ஹ.. ஒருமணி நேரத்துக்கு மேல உக்காந்து.. உலகத்தை மறந்து சாப்பிட்டுட்டு இருப்பேன்.. தெரியுமா..??”

“ம்ம்.. ஞாபகம் இருக்கு.. கவனிச்சிருக்குறேன்..!!”

“ஃபுட்கோர்ட் உள்ள என்டர் ஆகுறப்போவே.. இந்த டேபிள் காலியா இருக்கான்னுதான் மொதல்ல பார்ப்பேன்.. காலியா இருந்தா, நேரா போய் சாப்பாடு வாங்கிட்டு.. இங்க வந்து உக்காந்துக்குவேன்..!! சப்போஸ் வேற யாராவது இங்க உக்காந்திருந்தா.. சாப்பாடு வாங்க மாட்டேன்.. அங்க எங்கயாவது காலியா இருக்குற டேபிள்ள சும்மா உக்காந்துக்கிட்டு.. இந்த டேபிள் காலியாகுற வரை வெயிட் பண்ணுவேன்..!! அப்புறம் இங்க இருக்குறவங்க எந்திரிச்சதும்.. சாப்பாடு வாங்கிட்டு வந்து இங்க உக்காந்துக்குவேன்..!! அந்த அளவுக்கு எனக்கு இந்த டேபிள் ரொம்ப பிடிக்கும்..!!”

மீரா சொல்லிக்கொண்டே போக, அவ்வளவு நேரம் கன்னத்தில் கைவைத்தவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்த அசோக், இப்போது சற்றே கவலையான குரலில் கேட்டான்.

“ஹ்ம்ம்.. ஒரு டேபிளுக்கு இவ்வளவு பில்டப்பா..??”

“ஏன்.. அதுல ஏதாவது தப்பா..??”

“இல்ல.. தப்புலாம் ஒன்னுல்ல.. இருக்கவேண்டியதுதான்..!! ஆனா.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம.. ஏதேதோ சொல்லிட்டு இருக்கியேன்னுதான் எனக்கு எரிச்சலா இருக்கு..!!”

“ஹாஹா.. ஆமால்ல.. சம்பந்தமே இல்லாம லூஸு மாதிரி உளறிட்டு இருக்கேன்ல..??” மீரா உதடுகள் பிரித்து அழகாக புன்னகைத்தாள்.

“தெரிஞ்சா சரி..!! ஹ்ஹ்ம்ம்.. இன்னும் நான் கேட்டதுக்கு பதில் வரல..!! எப்போ சொல்ற மாதிரி ஐடியா..??”

“ஹாஹா.. சொல்றேன்..!! இங்க வா..!!”

“எங்க..??”

“இங்க வா.. இங்க வந்து என் பக்கத்துல உக்காந்துக்கோ.. வா..!!” மீரா தனக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கையை, கையால் தட்டிக்காட்டியவாறே சொன்னாள்.

“நீ மொதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு.. அதுக்கப்புறம் நான் அங்க வரேன்..!!”

“ப்ச்.. வாடா..!! நான்தான் எல்லாம் சொல்றேன்றன்ல..? வா.. பக்கத்துல வா..!!”

அசோக்கை நோக்கி ஒருகையை நீட்டி, மீரா அவ்வாறு சொல்லிய விதத்தில், ஒருவித அசாத்திய ஏக்கமும் கிறக்கமும் கலந்திருந்தது. அவளுடைய கருவிழிகள் எறிந்த காதல்க்கணைகள், அசோக்கின் கண்களில் பாய்ந்து அவனது இதயத்தை துளைத்தன. அதற்கு மேலும் மறுப்பு தெரிவிக்க மனம் இல்லாதவனாய், அசோக் மெல்ல எழுந்தான். அவளருகே சென்று அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்ததுமே, மீரா தனது இடது கையால் அவனுடைய இடுப்பை வளைத்துக் கொண்டாள். அவனை தன்னோடு இறுக்கிக்கொண்டவள், அருகில் யாராவது இருக்கிறார்களா என்ற கவலை கூட இல்லாமல், அவனது கன்னத்தோடு தனது கன்னத்தை சேர்த்துக்கொண்டாள். வலது கையிலிருந்த தனது செல்ஃபோனை உயர்த்தி, ‘பளீர்’ என ஃப்ளாஷ் அடிக்க, படம் எடுத்துக் கொண்டாள்.

மீரா அன்று முழுதுவதுமே அப்படித்தான்..!! காலை பத்து மணியில் இருந்து அசோக்குடன் சுற்றி அலைகிறாள்.. என்றும் இல்லாத அதிசயமாய் இன்று அநியாயத்திற்கு அவனுடன் இழைகிறாள்.. அவ்வப்போது தனது செல்ஃபோனால் இருவரையும் படம் எடுத்துக் கொள்கிறாள்..!!

“என்னாச்சு உன் பாலிஸிக்கு.. ஃபோட்டோஸ்லாம் எடுத்துக்குற..?? எப்போவும்.. ‘சின்ன ஃப்ரேமுக்குள்ள சிக்கிக்கிறதுக்கு எனக்கு பிடிக்காது’ன்னு சொல்வ..??” என்று அசோக் ஆச்சரியமாக கேட்டபோது,

1 Comment

  1. ?❤️❤️❤️❤️❤️❤️???

Comments are closed.