எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 10 38

“என்ன மீரா.. அப்படியே ஷாக் ஆயிட்ட..??”

“ஒ..ஒன்னுல்ல..!!”

“ஹ்ம்ம்.. நாமதான் இவனை ஃபோட்டோவே எடுக்க விட்டது இல்லையே.. இந்த ஃபோட்டோ எப்படி இவனுக்கு கெடைச்சதுன்னுதான பாக்குற..??”

“ம்ம்..!!”

“என்ன பண்றது.. உன்கிட்ட கேட்டா நீ ஏதாவது தத்துவம்லாம் சொல்லுவ.. ‘எனக்கு ஃபோட்டோ எடுத்துக்குறதுல இன்ட்ரஸ்ட்டே இல்ல.. இதுதான் நாமன்னு ஒரு ஃப்ரேம்க்குள்ள போட்டு, நம்மள நாமே அடைச்சு வச்சுக்க கூடாது.. எப்போவும் எந்த கட்டுப்பாட்டுக்குள்ளயும் நாம சிக்க கூடாது.. சுதந்திரமா இருக்கணும்.. அப்படி இப்படி..’ன்னு..!! ஆனா.. உன் ஃபோட்டோ ஒன்னு வச்சுக்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா..?? அதான்.. ஒரு நாள் உனக்கே தெரியாம இதை எடுத்தேன்.. பட்.. என் பேட் லக்.. அந்த நேரம் பார்த்து, நீ உன் கையை குறுக்க கொண்டு வந்துட்ட..!! ஹாஹா..!!!”

“…………….”

“ஆனா.. அந்த மிஸ்-க்ளிக் கூட.. எவ்வளவு அழகு தெரியுமா.. என்ன ஒரு க்யூட் தெரியுமா..?? ரொம்ப எக்ஸ்ட்ரார்டினரி ஸ்னாப்’ன்னு எனக்கு தோனுச்சு.. ரொம்ப நாள் மொபைல்லயே வச்சு பாத்து ரசிச்சுட்டு இருந்தேன்..!! அப்புறம்.. அன்னைக்கு நீ சொன்னேல.. காலைல எந்திரிச்சதும் என் மூவியோட அட்வர்டைஸ்மண்ட் போர்ட்ல கண்ணு முழிக்கனும்னு.. அன்னைக்குத்தான் எனக்கு திடீர்னு இந்த யோசனை.. உடனே அந்த ஃபோட்டோவை என்லார்ஜ் பண்ணி.. இங்க ஒட்டி வச்சுட்டேன்.. இப்போ.. எப்போவும் என்கூடவே நீ இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்..!! எப்படி இருக்கு..??”

“ம்ம்.. நைஸ்..!!” மீரா இப்போதுதான் சற்றே இறுக்கம் தளர்ந்து, இலகுவான குரலில் சொன்னாள்.

அப்புறம் சிறிது நேரம்.. இருவரும் எதுவும் பேசாமலே.. சுவற்றில் ஜொலித்த அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்..!! பிறகு அசோக்தான் குரலில் காதலை குழைத்துக்கொண்டவாறே சொன்னான்.

“எனக்கு இந்த ஃபோட்டோவ ரொம்ப பிடிக்கும் மீரா.. தெரியுமா..?? உன் கண்ணுல தெரியுது பாரு அந்த எமோஷன்.. அதுக்கு என்ன அர்த்தம்னே என்னால கண்டுபிடிக்க முடியாது..!! அந்த பார்வைக்கு அர்த்தம்.. சந்தோஷமா.. சோகமா.. பயமா.. கோவமா.. ஆசையா.. வெறுப்பா.. கருணையா.. காதலா.. எதுவுமே எனக்கு புரியாது..!! ஆனா.. பாத்துக்கிட்டே இருக்கணும்னு மட்டும் தோணும்.. அது ஏன் மீரா..??”

“………………” மீரா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.

“இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு யோசிச்சா.. எனக்கு ஒவ்வொரு நேரமும் ஒன்னொன்னு தோணும்.. அந்தந்த நேரத்துல என் மூடுக்கு தகுந்த மாதிரி..!! நான் சிரிச்சா அந்த கண்ணும் சிரிக்கிற மாதிரி இருக்கும்.. நான் அழுதா அதுவும் என் கூட அழும்.. எப்படி மீரா அது..??”

“………………”

“தெனமும் காலைல எந்திரிச்சதும்.. கொஞ்ச நேரம் உன் கண்ணையே பாத்துட்டு உக்காந்திருப்பேன்.. அப்போ எப்படி இருக்கும் தெரியுமா..?? எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. ஆனா.. அந்த மாதிரி ஒரு உணர்ச்சியை நான் அனுபவிச்சதே கெடையாது மீரா.. அது மட்டும் உண்மை..!!”

“………………”

“கொஞ்ச நேரம் பாத்தா போதும்.. அவ்வளவு எனர்ஜடிக்கா இருக்கும்.. அப்புறம் அன்னைக்கு பூரா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்..!!”

பேச்செல்லாம் பெருமிதமாய் அசோக் அவ்வாறு சொல்ல, மீரா பதில் ஏதும் சொல்லாமல் அவனுடைய கண்களையே ஆழமாக பார்த்தாள். அப்புறம் பார்வையை விலக்கிக்கொண்டு, மெல்ல நடை போட்டாள். அவளுடைய நெஞ்சமெல்லாம் ஒரு புதுவித உணர்ச்சி கொந்தளிப்பு. நடந்து சென்று கட்டிலை நெருங்கினாள். தலையணையில் தலை சாய்த்திருந்த அந்த குரங்கு பொம்மை, அவளுடைய கண்ணில் பட்டது. ஆயிரம் ரூபாய்க்கான அநாதை விடுதி டிக்கெட்டுகளை, அசோக் ஒற்றை ஆளாக வாங்கிக் கொண்டதற்காக, மீராவே அவனுக்கு பரிசளித்த பொம்மை…!!

சிறிது நேரத்திற்கு முன்பு.. ‘அசோக் எந்த நேரமும் அந்த பொம்மைக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பான்’ என்று சங்கீதா சொன்னது நினைவில் வர.. மீராவின் உதட்டில் ஒரு உலர்ந்த புன்னகை..!! அந்த குரங்கு பொம்மையின் சிவந்த மூக்கினை.. மெல்ல தடவிப் பார்த்தாள்..!! பிறகு அவளுடைய கைகள் மெல்ல மேல் நோக்கி நகர்ந்தன..!!

கட்டிலை ஒட்டியிருந்த குட்டி அலமாரியில்.. அடுக்கி வைக்கப்பட்டிருந்தன அந்த புத்தகங்கள்..!! அசோக்கின் அப்பா மணிபாரதி எழுதிய காதல் காவியங்கள்..!! எல்லா புத்தகங்களுக்கும் சிகரமாய் வீற்றிருந்தது அந்த புத்தகம்.. அதன் முகப்பில்..

“காதல் பூக்கும் தருணம்..!!”

என்ற கதைத்தலைப்பு தங்க நிறத்தில் தகதகத்தது..!! மீரா தனது தளிர் விரல்களால்.. அந்த எழுத்துக்களை மென்மையாக வருடினாள்..!! அவளுடைய உள்ளத்தில் ஒருவித உணர்ச்சி வெள்ளம்.. இப்போது உடைப்பெடுத்து ஓடியது..!! பிறகு என்ன நினைத்தாளோ.. சரக்கென திரும்பியவள்.. அசோக்கை ஏறிட்டு திடீரென சொன்னாள்..!!

1 Comment

  1. ?❤️❤️❤️❤️❤️❤️???

Comments are closed.