எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 10 38

“ஹாஹா.. நீங்கதான் அண்ணி அது..!! நான் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்ட அடுத்த நாள்தான்.. நீங்க அண்ணன்கிட்ட ஐ லவ் யூ சொன்னது..!! ஹ்ம்ம்.. இப்போ சொல்லுங்க.. அந்தக் கடவுள்தான உங்களை எங்க குடும்பத்துக்காக அனுப்பி வச்சிருக்காரு..??”

சங்கீதா சிரிப்புடன்தான் கேட்டாள். ஆனால் மீரா ஒருவித உணர்ச்சி அழுத்தத்துக்கு உள்ளாகி, என்ன சொல்வது என்று புரியாமல், விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள். அவளுடைய அமைதியை பார்த்துவிட்டு, சங்கீதாவே இதமான குரலில் தொடர்ந்தாள்.

“முன்னாடிலாம் அவனுக்கு ஒரு ஏக்கம் உண்டு அண்ணி.. நமக்குன்னு ஒரு பொண்ணு இல்லையேன்னு..!! வெளில காட்டிக்க மாட்டான்.. பட்.. மனசுக்குள்ள இருக்கும்..!! ஆனா.. ஆனா இப்போ.. நீங்க அவன்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்புறம்.. இந்த கொஞ்ச நாளா அவன் எவ்வளவு ஹேப்பியா இருக்கான் தெரியுமா..?? அவன் இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பாத்ததே இல்ல அண்ணி.. அவன் சந்தோஷத்தை பாத்து.. எங்க எல்லாருக்குமே எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..!! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணி.. என் அண்ணனுக்கும், இந்த குடும்பத்துக்கும் இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததுக்கு..!!”

சங்கீதா உணர்ச்சிவசப்பட்டு போய் சொல்ல, மீரா அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். அவளுடைய கண்களில் முணுக்கென்று கண்ணீர் அரும்பியது. அதை அவசரமாய் துடைத்துக் கொண்டாள். ஆனால் அதற்குள்ளாகவே அந்த கண்ணீரை கவனித்துவிட்ட சங்கீதா,

“ஐயோ.. என்னாச்சு அண்ணி.. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா..??” என பதறிப்போய் கேட்டாள்.

மீரா அவளுக்கு வாய் திறந்து பதில் சொல்லவில்லை.. உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டு.. ‘இல்லை..’ என்பது போல தலையைத்தான் மெல்ல அசைத்தாள்..!! அப்போதுதான் அசோக் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

“ஹேய் மீரா.. இங்கயா இருக்குற.. எங்கல்லாம் தேடுறது உன்ன..??”

“என்னாச்சு அசோக்..” மீரா திரும்பி பார்த்து கேட்டாள்.

“எந்திரிச்சு வா.. உனக்கு ஒன்னு காட்டனும்..!!” அசோக் அவ்வாறு சொல்ல, சங்கீதா இப்போது திடீரென டென்ஷன் ஆனாள்.

“ஏய் போடா.. அண்ணியலாம் அனுப்ப முடியாது.. அவங்க இங்கதான் இருப்பாங்க..!!” என்று அசோக்கிடம் சீறினாள்.

“ஏன்.. நெக்ஸ்ட் டைம் இவ நம்ம வீட்டுக்கு வர்றத பத்தி நெனச்சே பாக்கக் கூடாதுன்னு எதுவும் ப்ளானா..?? பாட்டுலாம் போட்டு காட்டிருப்பியே.. பாவம் சங்கு அவ.. அவ காது நல்லாருக்குறது உனக்கு பிடிக்கலையா.. விடு.. பொழைச்சு போகட்டும்..!!”

“ஹலோ.. உனக்கு பிடிக்காட்டி போ.. அண்ணிக்கு என் வாய்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு.. எனக்கு அது போதும்..!!”

“ஹாஹா.. ‘உண்மையை சொன்னா சங்கிக்கு ரொம்ப கோவம் வரும் மீரா..’னு வர்றப்போ நான்தான் சொல்லிட்டு வந்தேன்.. அதான் பிடிச்சிருக்குன்னு பொய் சொல்லிருப்பா.. இல்ல மீரா..??” அசோக் கிண்டலாக சொல்ல, சங்கீதா உடனே முகத்தை சுருக்கிக்கொண்டு சிணுங்கினாள்.

“ஹ்ம் ஹ்ம் ஹ்ம்.. பாருங்க அண்ணி.. இவன் எப்போவுமே இப்படித்தான்.. சும்மா சும்மா வம்பு இழுப்பான்..!!” என்றவள் அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

“ஏய்.. எங்களை டிஸ்டர்ப் பண்ணாம போடா.. அண்ணி உன்கூட வரமாட்டாங்க..!! அதான் உன் ரூம்ல ஒரு கொரங்கு பொம்மை வச்சிருக்கேல.. அதையே போய் கொஞ்சிட்டு கெட போ..!!” சங்கீதா கேஷுவலாக அவ்வாறு சொல்லிவிட, அவ்வளவு நேரம் அண்ணன்-தங்கையின் செல்ல சண்டையை ரசித்துக் கொண்டிருந்த மீரா,

“எ..என்னது.. கொ..கொரங்கு பொம்மையா..??”

1 Comment

  1. ?❤️❤️❤️❤️❤️❤️???

Comments are closed.