எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 10 38

சத்யா கார்டனை அடைவதற்கு சற்று முன்பாக.. ராஜமன்னார் சாலையில் இருந்து வலது புறம் திரும்பி.. கொஞ்ச தூரம் சென்றதுமே வந்து சேர்ந்தது அந்த பூங்கா..!! வாசலில் நின்றிருந்த ஒன்றிரண்டு வண்டிகளுடன்.. தனது பைக்கையும் நிறுத்தி ஸ்டாண்ட் இட்டான் அசோக்..!! முகத்தை இப்போது சுத்தமாக துடைத்து முடித்து.. இயல்பான பாவனையுடன் இறங்கிக்கொண்டாள் மீரா..!!

“ம்ம்.. பார்க் வந்துடுச்சுல.. சொல்லு..!!” அவசரப்பட்டான் அசோக்.

“உள்ள போய் பேசலாம் வா..!!” மீரா லேசாக மூக்கை உறிஞ்சியவாறே சொன்னாள்.

“சரி.. உன் செல்ஃபோனை கொஞ்சம் கொடேன்..!!”

“எதுக்கு..??”

“நெறைய ஃபோட்டோஸ் எடுத்தேல.. எப்படி வந்திருக்குன்னு பாக்குறேன்..!!” அசோக் அவ்வாறு கேட்கவும், முதலில் ஓரிரு வினாடிகள் தயங்கிய மீரா, பிறகு

“ம்ம்..!!” என்று தனது செல்ஃபோனை அசோக்கின் கையில் திணித்துவிட்டு முன்னால் நடந்தாள். அசோக் அவளை பின்தொடர்ந்தான்.

அதிகமாக பராமாரிக்கப்படாமல் போனாலும்.. இழைதழைகள் இறைந்துபோய் காணப்பட்டாலும்.. ஒழுங்கில்லாமல் வளர்ந்திருந்த செடிகொடிகளோடும்.. அந்த மாலை நேரத்திற்கு மிக ரம்யமாகவே காட்சியளித்தது அந்த பூங்கா..!! ஆங்காங்கே தெரிந்த மரப்பெஞ்சுகளின் பழுப்பு நிறம் தவிர.. எங்கெங்கிலும் மர,செடி,கொடிகளின் பச்சை நிறமே..!! அவ்வப்போது கேட்கிற காகங்களின் கரைதலை தவிர.. அமைதியே முழுநேரமும் ஆக்கிரமித்திருந்தது..!! புதர் மறைவில் புதையல் தேடுகிற சில காதலர்களை(????) தவிர.. ஆள் நடமாட்டம் அறவே அற்றுப் போயிருந்தது..!!

காம்பவுண்டை ஒட்டி நீளமாக சென்ற அந்த மண்பாதையில்.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு மீரா நடந்து கொண்டிருந்தாள்..!! பாதையின் இருபுறமும்.. கொத்துக்கொத்தாய், பச்சை பச்சையாய் செடிகள்..!! பாதையிலோ.. புற்கள் துளிர்த்திருந்தன.. மரவேர்கள் குறுக்காக ஓடின.. காய்ந்த சருகுகள் மண்டிக் கிடந்தன.. கால்கள் பட்டு அழுந்துகையில் சரக் சரக்கென சப்தம் எழுப்பின..!! மீரா கவனமாகவே நடந்து கொண்டிருந்தாள்..!! அவளுக்கு பின்னால் ஒரு ஐந்தடி இடைவெளிவிட்டு.. மீராவுடையை செல்ஃபோனை விரல்களால் அழுத்தியவாறே அசோக் சென்று கொண்டிருந்தான்..!!

மீரா எடுத்த படங்களை எல்லாம் பார்த்து ரசித்த அசோக்குக்கு.. திடீரென ஒரு யோசனை.. எல்லா படங்களையும் தனது செல்ஃபோனுக்கு ஒரு நகல் அனுப்பினால் என்னவென்று..!! யோசனை தோன்றியதும் முதலில் மீராவிடம் அனுமதி கேட்கத்தான் நினைத்தான்..!! ஆனால் அப்புறம்.. ‘ஒருவேளை அவள் ஏதாவது விளங்காத காரணம் சொல்லி மறுத்துவிட்டால் என்ன செய்வது’ என்று தோன்றவும்.. அனுமதி கேட்கிற எண்ணத்தை கைவிட்டான்..!! தனது செல்ஃபோன் எடுத்து ப்ளூடூத் எனேபிள் செய்தவன்.. திருட்டுத்தனமாகவே அந்தப்படங்களை நகல் எடுத்துக் கொண்டான்..!!

1 Comment

  1. ?❤️❤️❤️❤️❤️❤️???

Comments are closed.