இந்த வீட்டின் உரிமையாளர் 4 71

காரில் உட்கார்ந்து யோசித்தேன் பெண்களுக்கு மட்டும் தான் திருமண பந்தம் கட்டுப்பாடு எல்லாமே ஆண்கள் என்ன தவறு செய்தாலும் அது தவறாக கருதப்படவில்லை ஏன் இந்த பாகுபாடு பெண் பலவீனமானவள் என்பதால் மட்டும் தானா ரெண்டு பேர் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள் அதில் நவீன் என் கணவர் ரோஷன் கணவனின் நண்பன் இப்போ விக்ரம் மட்டும் நல்லவன் என்று நான் எப்படி நம்புவது குழப்பமான நிலையில் விக்ரம் கார் டிரைவரிடம் மீண்டும் நாங்க புறப்பட்ட இடத்திற்கே போக சொல்ல எனக்கு ஒரு பயம் ஒரு வேளை ரோஷன் அங்கே வந்து காத்திருந்தால் அதனால் விக்ரமிடம் என்னை பெங்களூர் செல்லும் பஸ்ஸில் ஏற்றி விட சொன்னேன். விக்ரம் ரொம்பவும் அமைதியாக அதே சமயம் கட்டாயமாக வேண்டாம் நித்தியா உங்களுக்கு ஒரு மாற்றம் தேவை நான் சொன்னது போல உங்க அம்மா வீட்டில் இருப்பது தான் நல்லது நீங்க வேண்டும் என்றால் இதே காரில் கோவை பயணம் செய்யுங்க நான் வழியில் இறங்கி கொள்கிறேன் என்றான். எனக்கு எங்க வீட்டிற்கு போக மனமே இல்லை அதுவும் ரோஷனுடன் ரெண்டு இரவுகள் தங்கி இருக்கிறேன் என்று தெரிந்தால் அம்மா உயிரை விட்டு விடுவார்கள் ஆனால் விக்ரம் சொல்லுவது போல பெங்களூர் வீடு ரோஷனுக்கு சொந்தமானது அதுவும் நானே அவனுடன் தகாத உறவு வைத்து கொண்ட இடம் அப்படியென்றால் எங்கே தான் போவது உயிரை விட்டு விடலாமா என்று கூட தோன்றியது.

சிறிது தூரம் நான் கண்ணை மூடி கொண்டு பயணித்தேன். விக்ரம் நித்தியா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்க தனியா இருக்க நான் ஒரு வழி சொல்கிறேன் அது ஒரு ஆசரமம் கணவனுடன் கருத்து வேறுபாடு கொண்ட பெண்கள் காதலனால் கை விட பட்ட பெண்கள் பலர் வந்து தங்கி மன அமைதி தேடும் இடம் என்று சொல்ல எனக்கு ஆசரமம் என்று கேட்டதும் கண்டிப்பாக வேண்டாம் என்று பட்டது. உடனே இல்லை வேண்டாம் என்றேன். விக்ரம் புரிஞ்சுக்கோங்க நித்தியா நவீன் குணம் அடைய எப்படியும் எனக்கு தெரிந்து ஒரு மாதம் ஆகும் அது வரை என்ன செய்ய போறீங்க என்றான். நான் தெரியவில்லை விக்ரம் சொல்ல போனால் ரோஷன் நவீன் பற்றி சொன்னதில் ஒரு உண்மை இருக்க தானே செய்கிறது அவர் வேறு ஒரு ஒரு தொடர்பு வைத்து இருந்தது அப்புறம் குணம் அடைஞ்சு வந்தா கூட என் மனம் அவரிடம் முழுமையாக ஈடுபடாதே என்றேன் குழப்பத்துடன்.

விக்ரம் என் கருத்தை ஏற்று கொண்டு நீ சொலல்றது சரியாக இருந்தாலும் ரோஷன் தான் அதற்கு காரணம் என்று புரிந்து கொள் விக்ரம் சொல்லுவது நூறு சதவீதம் சரி என்று பட நான் என்னால் எங்கேயும் தங்க முடியாத நிலை என்ன செய்வது என்று அவனிடமே கேட்டேன். விக்ரம் நித்தியா நீ பெங்களூர் போ ஆனால் உன் வீட்டிற்கு போக வேண்டாம் ஏதாவது ஹோட்டலில் தங்கி இரு நான் ரோஷன் என்ன செய்கிறான் என்று கவனித்து உனக்கு தகவல் தெரிவிக்கறேன் அதன் பிறகு முடிவு செய் என்றான். ஆனால் அதுவும் எனக்கு சரியான யோசனையாக தெரியவில்லை என்னால் பெங்களூரில் தனியாக ஹோட்டலில் தங்கும் தைரியம் கண்டிப்பாக இல்லை. அதனால் உடனே இல்லை விக்ரம் எனக்கு ஹோட்டல் எல்லாம் தங்கி பழக்கம் இல்லை என்றேன். விக்ரம் சரி அப்போ முதலில் என் அறைக்கு போவோம் என்று முடிவாக சொல்ல நான் வேறு வழி இல்லை என்று ஒத்து கொண்டேன்.