இந்த வீட்டின் உரிமையாளர் 4 70

இன்னைக்கு கண்டிப்பாக நவீனை சந்திக்க முடியாது என்று சொல்ல ரோஷன் அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து இவங்க ரொம்ப வருபுறுத்தியதால் தான் வந்தேன் நவீன் அறைக்கு சென்று விட்டு தான் வந்தோம் அவனை ஜன்னல் வழியாக தான் பார்த்தாங்க என்று சொல்ல நானும் ஆம் என்று தலை ஆட்டினேன். டாக்டர் நித்தியா நல்ல வேளை உங்க கணவருக்கு ரோஷன் போன்ற ஒரு நண்பர் கிடைத்தது ரோஷன் மட்டும் முயற்சி எடுத்து உங்க கணவரை இங்கே கொண்டு வரவில்லை என்றால் நவீன் குணமாவதில் சிக்கல் ஏற்ப்பட்டிருக்கும் என்று சொல்ல எனக்கு பின் மண்டையில் ஒரு கேள்வி எழுந்தது. ரோஷன் என்னிடம் சொன்னது நவீனை அவன் நண்பன் மூலமாகத்தானே ஹாஸ்பிடலில் சேர்த்ததாக டாக்டர் சொல்லுவது வேறு விதமாக இருக்கிறதே என்று. இப்போ அவனை கேட்க முடியாது பிறகு கேட்டு கொள்ளலாம்னு டாக்டரிடம் டாக்டர் நவீனுக்கு என்ன பிரச்சனை என்று ஒன்றும் தெரியாதது போல கேட்க அவர் பிரச்சனை பெருசு இல்ல நித்தியா அவர் கொஞ்சம் குடிக்கு அடிமை ஆகி கொண்டிருந்தார். பொதுவா இப்படி அடிமை ஆகிறவர்கள் மெதுவாக தான் அதில் சிக்குவார்கள் ஆனால் நவீன் பொருத்தவரை அவர் திடீரென்று அதிக அளவில் குடிக்க ஆரம்பித்து இருப்பது தான் பெரிய சிக்கல் என்றார். எனக்கு ரெண்டாவது கேள்வி அப்போ நவீன் சமீபத்தில் தான் குடிக்க ஆரம்பித்து இருக்கிறார் ரோஷன் சொன்னது போல கல்யாணத்திற்கு முன்பு குடி பழக்கம் இல்லாது இருந்திருக்கலாம். அப்போ நான் தான் நவீனை பற்றி தவறாக நினைத்து இருக்கிறேனா என்று. டாக்டர் என்ன சிகிச்சை செய்கிறார் என்றும் எவ்வளவு நாள் இதை தொடரனும்னு சொல்ல நானும் கவனமாக கேட்டு கொண்டேன்.

இறுதியாக அவர் என்னிடம் நித்தியா இன்னும் குறைந்தது ரெண்டு நாட்களுக்கு நவீன் தனக்கு தெரிந்தவர்களை பார்க்காமல் இருப்பது சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் அதனால் உங்கள் ஒத்துழைப்பும் அவசியம் தேவை நீங்களே ரெண்டு நாள் பொறுத்து என்னை தொடர்பு கொள்ளுங்கள் நான் நவீன் சிகிச்சை முன்னேற்றம் பற்றியும் முடிந்தால் அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல நான் ஏற்று கொள்வதை தவிர வேறு வழியில்லை டாக்டருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பும் போது டாக்டர் ரோஷன் நீங்க ஆபிஸ்ல் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டி விடுங்க என்று சொல்ல ரோஷன் டாக்டர் ஏற்கனவே ஒரு லட்சம் கட்டி விட்டேனே என்று சொல்ல அவர் அது போதாது ரோஷன் நீங்க ஆபிஸ்ல் கேட்டு பணத்தை கட்டுங்க என்றார். எனக்கு இப்போ அடுத்த கவலை வந்தது என் கடன் சுமை அதிகமாகி கொண்டே போகிறது ரோஷன் செலவு செய்ய செய்ய நவீன் எப்படி மதுவுக்கு அடிமை ஆகி விட்டாரோ அது போல நான் இவனுக்கு கடன்காரி அதை விட கிட்டத்தட்ட அவனுக்கு அடிமையாகி கொண்டிருக்கிறேன் என்பது நன்றாக தெரிந்தது.

வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ரோஷனுடன் ஹாஸ்பிடல் ஆபிசுக்கு செல்ல அங்கே அவர்கள் மேலும் ஐம்பதாயிரம் கட்ட சொல்ல ரோஷன் இப்போ அந்த அளவு பணம் எடுத்து வரவில்லை நாளைக்கு கட்டி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான். வெளியே கார் அருகே வந்ததும் ரோஷன் எதுக்கு நாளைக்குன்னு சொன்னே எப்படியும் ரெண்டு நாள் பொறுத்து வரத்தானே போகிறோம் அன்றைக்கு கட்டி இருக்கலாமே என்றதும் அவன் நித்து உனக்கு உலகமே தெரியலை நாளைக்கு கட்ட ஒத்துகொண்டதே பெரிய விஷயம் பொதுவா பணம் கட்டலைனா சிகிச்சையை நிறுத்தி விடுவார்கள் என்று சொல்ல நான் வாயை மூடி கொண்டேன்.