இந்த வீட்டின் உரிமையாளர் 4 70

எதுவாக இருக்கட்டும் நடந்தது கனவாக இருக்கட்டும் நான் ஒரு த்ரு கிறிஸ்டியன் பைபிள் மேலே சத்தியமாக சொல்லுகிறேன் உணகளுக்கு ஒரு நல்ல காலம் எது என்றால் ரோஷன் இப்போ வேலயே கிளம்பி இருப்பது. அவன் என்னிடம் சொன்னது உங்க எதிரே அவனிடம் பணம் குடுப்பது போல குடுத்து பிறகு வாங்கி கொள் என்று நான் கண்டிப்பாக மாட்டேன் வேண்டும் என்றால் அதுவும் நித்தியா கேட்டால் தருகிறேன் என்று சொன்னதும் வேண்டாம் என்று சொல்லி விட்டான் அப்படி என்ன உங்களுக்கு பண கஷ்டம் கல்யாணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறதுன்னு கேள்வி பட்டேன். அப்படியே பண தேவை இருந்தால் உங்க வீட்டில் கேட்டு இருக்கலாமே என்று கேட்டதும் என்னையும் மீறி கண்ணில் நீர் ததும்பி கடந்த சில நாட்களாக நடந்த எல்லாவற்றையும் நந்தி ஹில்ல்ஸ் உட்பட சொல்லி முடித்தேன்.

நான் சொல்லுவது விக்ரமுக்கு புதுசாக தெரியவில்லை எனபதை அவன் முகபாவமே காட்டியது. நான் சொல்லி முடித்ததும் விக்ரம் நீங்க ரொம்ப எம்மாந்து இருக்கீங்க ரோஷன் பணத்தாலே எதையும் வாங்கி விட முடியும்னு நினைப்பவன். அவன் வலையில் முதலில் உங்க வீட்டுக்காரர் சிக்கி இருக்கார் அதன் பிறகு உங்களை சிக்க வைப்பது அவனுக்கு எளிதாகி விட்டது. சரி அவன் வருவதற்குள் உங்கள் கணவனின் உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொள்ளுவது நல்லது என்னை கண்டிப்பாக நம்பலாம் என்று மீண்டும் சொல்ல எனக்கு குழப்பம் அதிகரித்தாலும் விக்ரம் சொன்ன விஷயங்கள் பலவற்றில் நிஜம் இருப்பது உணர முடிந்தது. சரி இந்த முறையாவது உண்மை தெரிந்து கொள்ள முடியுமா பார்க்கலாம் என்று விக்ரமுடன் கிளம்பினேன். ரோஷன் போல விக்ரமிடம் சொந்தமாக கார் இல்லை அவன் ஒரு வாடகை வண்டியை தான் ஏற்பாடு செய்து இருந்தான். மீண்டும் நவீன் இருக்கும் இடத்திற்கு சென்று இம்முறை நேராக டாக்டர் அறைக்குள் சென்றோம். அவர் மீண்டும் என்னை பார்த்ததும் எ துவும் கூட வேறு ஒரு ஆள் இருப்பது பார்த்து சொல்லுங்க நித்தியா சார் யாரு என்றார். நான் இவர் விக்ரம் எனக்கு நெருங்கிய சொந்தம் நேற்று நான் நவீன் இருந்த நிலையை இவரிடம் சொன்னதும் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள நேரில் வந்து இருக்கிறார் என்றேன். டாக்டர் விக்ரமுடன் கை குலுக்கி விட்டு விக்ரம் நவீன் போதை பழக்கத்திற்கு அடிமை படுத்த பட்டிருக்கிறார் அதுவும் எனக்கு தெரிந்த வரை மிகவும் குறைந்த காலத்தில் அதிகமாக போதை பொருட்களை எடுக்க செய்து இப்போ அவர் ஒரு நடை பிணமாக தான் இருக்கிறார். ஒரு நாளில் ஒரு வாரத்தில் என்றெல்லாம் என்னால் நேரம் சொல்ல முடியாது. எங்களால் முடிந்த அளவு குணப்படுத்த முயற்சி எடுக்கிறோம் ஆனால் அவருக்கு மனைவியை விட வேறு ஒரு பெண் மீது தான் நினைவு அதிகம் இருக்கிறது அதுவும் அந்த பெண்ணும் இவருடன் சேர்ந்து போதை பொருட்களை உபயோகித்து இருக்கணும் என்பது எங்கள் அனுமானம் அதனால் தான் நேற்று கூட அவருடன் நித்தியாவை சந்திக்க அனுமதிக்க வில்லை நவீன் மனநிலையில் இப்போ நித்தியா என்பதே ஒரு அந்நிய பெண் போல தான் அவர் மனதில் பதிந்து இருக்கிறது ஆகையால் நவீன் முழு குணம் அடைய வேண்டும் என்றால் நித்தியா அவரை இன்னும் சிறிது காலம் சந்திக்காமல் இருப்பது நல்லது, இன்னும் சொல்ல போனால் இப்போதைய நிலையில் அவருக்கு பெண் சவகாசமே ஒரு அலேர்ஜி என்றே சொல்லலாம் டாக்டர் சொல்லும் போதே எனக்கு நவீன் மீது மேலும் வெறுப்பு தான் ஏற்ப்பட்டது. டாக்டர் பேசி கொண்டிருக்கும் போதே நான் எழுந்து வெளியே சென்று விட்டேன். கொஞ்ச நேரம் பிறகு விக்ரம் வந்து நித்தியா உங்க மன நிலை எனக்கு புரிகிறது நீங்க ஏன் சில நாட்கள் உங்க பெற்றோர் கூட இருக்க கூடாது பெங்களூரில் தனியாக இருந்தால் கண்டிப்பாக உங்க தனிமையை ரோஷன் தவறாக உபயோகிக்க எல்லா முயற்சியும் எடுப்பான் என்று சொல்ல நான் பதில் சொல்லாமல் கார் அருகே சென்றேன்