இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 239

“அட யாரு இவ!!! என் தேவதை மேல இவ்ளோ அதிகாரம் காட்டுறா!” என மனதுள் வந்த கோவத்தை அடக்கி கொண்டு தன் தேவதையை பார்க்கும் போது அவள் முகம் சற்று வெளிறி போய் இருந்தது அவன் நெஞ்சுக்குள் ஒரு வலியை ஏற்படுத்தியது..

பின் அந்த பெண்ணிடம் திரும்பிய கிஷோர் “madam this is a misunderstanding, she is my friend and she has every right to say to me whatever she thinks.. please don’t blame her” என்றான்.

“oh is it!! then I’m sorry sir for intruding between you two.. I’ll let you two to continue. have a marvelous day” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்..

இங்கே இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது.. “எல்லாம் தன்னால் தானே எப்படி அவள் கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என அவன் நினைக்க

“ச்ச்ச நான் மரியாதை இல்லாம பேசியிருக்க கூடாது.. இருந்தாலும் அவன் எனக்காக பேசி சமாளிச்சான்.. கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும்” என அவள் நினைக்க

இருவரும் ஒரே சமயத்தில் மன்னிச்சுருங்க தேங்க்ஸ் என சொல்ல இருவருக்குமே உதட்டில் இருந்து சிறு புன்னகை எட்டி பார்த்து அந்த சூழ்நிலை போக்கியது..

விட்ட இடத்தில் இருந்து பிடிக்க நினைத்த கிஷோர் “அதான் பிரண்ட்ஸ் ஆகிட்டோம், அப்டியே நம்பர் கொடுத்தா கொஞ்சம் வசதியா இருக்கும்” என சுப்ரமணியபுறம் ஜெய் போல தலை முடியை சரி செய்து கொண்டே சொன்னான்..

“ஓஓஓ.. நம்பர் மட்டும் போதுமா இல்ல அட்ரஸ் உம் வேணுமா”

“ஹையோ சூப்பருங்க கொடுங்க”

“தொடப்ப கட்டை தான் தருவேன்.. ஒழுங்கா கிளம்பு” என சொல்லி திரும்பி கொண்டாள்..