இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 176

கிஷோர்: ஆஆஆஅஆ!!!!!!!!!!!! (கண்ணை பொத்திக்கொண்டே)

“அய்யயோ!!” என வேகமாக அவனருகே வந்த அம்சவேணி கண்ணை பொத்தி இருந்த அவன் கைகளை பிரித்து பார்த்தாள்.. சிறியதாக வீக்கம் இருந்தது..”ஒன்னும் இல்லப்பா ஒன்னும் இல்லப்பா” என தாய்க்கே உரிய பாசத்துடன் அடி பட்ட இடத்தை தேய்த்துக்கொண்டே “ஏண்டா உனக்கு அம்புட்டு கோவம் வருது உனக்கு, அம்மா அப்டி என்ன சொல்லிட்டேன் உன்ன.. சாரி ப்பா இனிமேல் அம்மா உன்ன எதுவும் சொல்ல மாட்டேன்”

மனது இறங்கிய கிஷோர்: அம்மா சாரி லாம் சொல்லாத மா.. நான் தான் சாரி சொல்லணும்.. எதோ ஒன்னு மனசுல நினைச்சுட்டு தேவை இல்லாம உன்மேல கோவப்பட்டேன்..

அம்சவேணி: சரி தங்கம்!! தைலம் தேய்ச்சு விட்டா சரியா போய்டும் வீக்கம்.. அது என்னப்பா மனசுல ஏதோ ஒன்னு..

கிஷோர்: ஒன்னுமில்லம்மா விடு.. எனக்கு பசிக்குது.. சாப்பாடு ஏதாச்சும் வச்சுக்கொடு

அம்சவேணி: சாப்பாடு வச்சு தர்றேன்.. இப்போ பேச்சை மாத்தாம சொல்லு மனசுல என்னன்னு.. நீ சொல்லலைனாலும் அம்மாக்கு ஒன்னு தோணுது நீ எதுக்கு இப்டி இருக்க ன்னு..

கிஷோர்: ஆமா பெரிய சைக்காலஜி டாக்டர், என்னன்னு சொல்லு பாப்போம்..

அம்சவேணி: சைக்காலஜி டாக்டர் லாம் இல்லடா.. கிஷோரோட அம்மா வ சொல்றேன்.. ஒரு பொண்ணு தான காரணம்..

கிஷோர்: (மனசுக்குள் அய்யயோ) அம்ம்ம்ம்ம்மா!!!!!!! அப்டிலாம் ஒண்ணும் இல்ல.. நீயே ஏதாச்சும் நினைக்காத. இப்போ எனக்கு சாப்பாடு வச்சு கொடு..

அம்சவேணி: ச்சும்மா சோறு சோறுன்னு சொல்லாத டா திண்ணிப்பண்டாரம்.. எல்லா அப்பாவி பசங்களோட அம்மாவுக்கும் தெரியும் தன்னோட பசங்களோட வாழ்க்கை ல எப்போ ஒரு பொண்ணு வருதுன்னு.. 27 வயசு ல ஆச்சும் உன் வாழ்க்கை ல ஒரு பொண்ணு வருது ன்னு அம்மாக்கு சந்தோசம் தான்டா.. அது மட்டும் இல்லாம உனக்கு பொய்யே சொல்ல தெரியல.. அதனால சொல்லு யாரு அந்த பொண்ணு ன்னு..