இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 186

கிஷோர்: (இவன்கிட்ட தெரியாது, சுபர்ணா ட்ட இருந்து காப்பாத்த தான் பிரண்ட்ஸ் மாதிரி நடிச்சோம் ன்னு உண்மையை சொன்னா எப்படியும் அந்த சுபர்ணா ட்ட போட்டு கொடுத்துருவான், அப்புறம் நம்ம செல்லம் திட்டு வாங்கும். நாம இப்டியே கண்டினியூ பண்ணுவோம் என மனதில் நினைத்து) ஆமா மச்சி! ஸ்கூல் பிரண்ட்ஸ். நீ ஏன் டா கேக்குற. உனக்கு அந்த பொண்ணு தெரியுமா??

ராகுல்: தெரியும் டா.. அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் ஸ்கூல் மேட்ஸ்.. சுபர்ணா ட்ட நான் தான் பேசி அந்த பொண்ணை வேலை க்கு எடுத்துக்க சொன்னேன்.. அவங்க அம்மா என் அம்மா ட்ட பேசி என் அம்மா என்கிட்ட கேட்டதுனால தான் அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணேன்.. மத்தபடி அந்த பொண்ணு கூட லாம் பேசுனதும் இல்ல பேசவும் மாட்டேன்.. அப்புறம் சுபர்ணா மட்டும் இல்ல என் பிரண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ் எல்லார் முன்னாடியும் என் பேரு கெட்டு போகும்..

கிஷோர்: நீ பொண்ணுங்க கூட பேசுறது யாராச்சும் பாத்து உன் பேரு கெட்டு போகும் னா.. சுபர்ணா கூட மட்டும் பேசுற.

ராகுல்: டியூட் நல்லா கேளு.. நான் பொண்ணுங்களை சொல்லல.. ஸ்டேட்டஸ் பத்தி சொல்றேன்.. நீ வேணா அவளை பாத்துக்கோ உனக்கு கரெக்ட் ஆ இருக்கும் என ஒரு எள்ளல் நகைப்புடன் சொன்னான்.

இதை கேட்ட கிஷோருக்கு கோவம் வந்தது. ஒரு பக்கம் தன் தேவதை கலையின் மீது ராகுலின் பார்வை விழாதது மகிழ்ச்சியாக இருந்தாலும் பொருளாதாரத்தை வைத்து அவளை குறைத்து கூறியது அவனுக்கு கோவத்தை வரவழைத்தது.. என்ன கோவம் வந்தா என்ன.. எதிரே இருப்பது ராகுல் ஆச்சே.. வந்த கோவத்தை அப்டியே விழுங்கி கொண்டு அமைதியாக இருந்தான்.. போனது போகட்டும் இவன்கிட்ட இருந்து தான் கலையை பத்தி முழு விவரமும் தெரிஞ்சுக்கணும் என எண்ணி கொண்டான்.

கிஷோர்: ம்ம் இருந்தாலும் நல்ல பொண்ணு டா அது.. சரி உனக்கு அந்த பொண்ண பத்தி எந்த அளவு தெரியும் சொல்லு பாக்கலாம்..

ராகுல்: எனக்கு ஓரளவு தெரியும். நீ எதுக்கு கேக்குற

கிஷோர்: இல்ல உனக்கு நிஜமாவே அந்த பொண்ணு தெரியுமா இல்ல சும்மா உதார் விட்ரியா ன்னு தெரிஞ்சுக்க தான்..

ராகுல்: டியூட் சொல்றேன் கேட்டுக்கோ. அவ புல் நேம் கலை செல்வி, வயசு 24, MBA படிச்சுருக்கு, ஒரே பொண்ணு அவங்க அப்பா வேலை எதுவும் இல்லாம சும்மா இருக்காங்க, அவங்க அம்மா எங்களோட சூப்பர் மார்க்கெட் ல தான் ஒர்க் பன்றாங்க. என்ன சொன்னது எல்லாம் கரெக்ட் ஆ?